பா.ஜ.க. அரசின் மீதான மக்களின் விரக்தி உ.பி. தேர்தல் முடிவில் தெரியும் – லாலு பிரசாத் <!– பா.ஜ.க. அரசின் மீதான மக்களின் விரக்தி உ.பி. தேர்தல் முடிவ… –>

பா.ஜ.க. அரசின் மீதான மக்களின் விரக்தி உத்தரபிரதேச மாநில தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவரும் என ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியின் கூட்டணியில்  ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்த லாலு பிரசாத் யாதவ், பணவீக்கம், வறுமை பற்றி பேசாமல் அயோத்தி, வாரணாசி குறித்து பேசி பா.ஜ.க.வினர் மக்களை திசை திருப்பவதாக கூறினார்.  Source link

கொரோனாவில் இருந்து ஒரேநாளில் 1.67 லட்சம் பேர் மீண்டனர்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 4-வது நாளாக நேற்றும் 1 லட்சத்திற்கும் கீழ் உள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,084 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 71,365 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நாட்டில் மொத்த பாதிப்பு 4 கோடியே 24 லட்சத்து 78 ஆயிரத்து 60 ஆக உயர்ந்தது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் … Read more

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 7.95% வாக்குகள் பதிவு

லக்னோ: உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.28 கோடி பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். காலை 9 மணி நிலவரப்படி 7.95% வாக்குகள் பதிவாகியுள்ளது.

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்: 58 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு

லக்னோ: உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க உள்ளது. உத்தரபிரதேசத்தில் பிப்.10 முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, முதல்கட்டமாக மேற்கு உ.பி.யில் உள்ள ஷாம்லி, ஹாபூர், கவுதம் புத் நகர், முசாபர்நகர், மீரட், … Read more

மலை இடுக்கில் சிக்கிய இளைஞர் – 3 நாட்களுக்கு பிறகு மீட்பு!

கேரள மாநிலத்தில், மலை இடுக்கில் சிக்கித் தவித்த இளைஞரை மூன்று நாட்களுக்கு பிறகு ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் பாபு (வயது 28). இவரும், இவரது நண்பர்களும் நேற்று முன்தினம் மலம்புழையில் காட்டுப் பகுதிக்குள் மலையேறச் சென்றனர். மலையில் இருந்து பாபு இறங்கிய போது, பள்ளமான இடத்தில் பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்தார். அவருடன் சென்றவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதை தொடர்ந்து அவர்கள் மலையில் இருந்து இறங்கி மலம்புழை … Read more

பிரதமர் மோடி பிப்ரவரி 14,16,17 ஆகிய தேதிகளில் பஞ்சாபில் பிரச்சாரம் <!– பிரதமர் மோடி பிப்ரவரி 14,16,17 ஆகிய தேதிகளில் பஞ்சாபில் ப… –>

பிரதமர் மோடி வரும் 14, 16, 17 ஆகிய தேதிகளில் பஞ்சாப் மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மாளவா, தோவாபா, மாஜா ஆகிய மூன்று பகுதிகளையும் உள்ளடக்கி இந்தப் பிரச்சாரத்தை மோடி மேற்கொள்ள உள்ளார். முதல் கூட்டம் ஜலந்தரில் 14 ஆம் தேதி நடைபெறுகிறது.இரண்டாவது பிரச்சாரக் கூட்டம் 16 ஆம் தேதி பதான்கோட்டிலும் மூன்றாவது கூட்டம் அபோஹரில் 17 ஆம் தேதியும் நடைபெற உள்ளதாக பஞ்சாப் மாநில பாஜக பொதுச் செயலாளர் சுபாஷ் சர்மா தெரிவித்துள்ளார். பஞ்சாபில் தேர்தல் … Read more

உத்தர பிரதேசத்தில் 58 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

லக்னோ : உத்தர பிரதேச சட்டசபைக்கு முதல் கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 9 பேர் மந்திரிகள் ஆவர். பா.ஜனதா, சமாஜ்வாடி-லோக்தளம் கூட்டணி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் என 4 முனை போட்டி நிலவுகிறது. முதல்கட்ட தேர்தல் நடக்கும் … Read more

உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு முதல் கட்டமாக 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது : 623 வேட்பாளர்கள் களத்தில்!

லக்னோ: உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு முதல் கட்டமாக இன்று 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில், மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதற்கு பாஜ தீவிர முயற்சி செய்து வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் இக்கட்சியே ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த முறை இம்மாநிலத்தில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற பாஜ, இந்த முறை 234 இடங்களை … Read more

உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெறும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

புதுடெல்லி: உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை யுடன் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை களுக்கு பிப்.10-ம் தேதி (இன்று) முதல் மார்ச் 7-ம் தேதி வரை தேர்தல் நடக்க உள்ளது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கையை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த 5 மாநிலங்களிலும் … Read more

பிப். 14 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

கோவா மாநிலத்தில், வரும் 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அன்று ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கோவா மாநிலத்தில், முதலமைச்சர் பிரமோத் சவாந்த் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், மொத்தம் உள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள், வரும் மார்ச் மாதம் … Read more