பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பான மனுக்கள்: உச்ச நீதிமன்றத்தில் வரும் 25-ல் விசாரணை

புதுடெல்லி: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுக்கள் (பிஐஎல்)மீது பிப்.25-ல் விசாரணை நடத்தஉச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண் டுள்ளது. பெகாசஸ் ஒட்டுகேட்பு விவ காரம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியை கொண்டு சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரி வக்கீல் எம்.எல்.சர்மா, மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார், பரன்ஜோய் குஹா தாகூர்தா, எஸ்.என்.எம்.அபிதி, பிரேம் சங்கர் ஜா, ரூபேஷ் குமார் சிங், இப்ஸா சதாஷி உள்ளிட்டோர் சார்பில் ரிட் மனுக்கள் தாக்கல் … Read more

நேரடி தேர்வால் மனவேதனை: 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில வசித்து வந்த 17 வயது 10-ம் வகுப்பு மாணவன் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் படித்து வந்தான். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. 10 மற்றும் 12-ம் வகுப்புகளை தவிர மற்ற வகுப்பு மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். ஒமைக்ரான் வைரஸ் தொற்று கடந்த ஆண்டு இறுதியில் இருந்து வேகமாக பரவியது. இந்தியாவில் ஜனவரி மாதத்தில் இருந்து விஸ்வரூபம் எடுத்து … Read more

10,12ம் வகுப்புகளுக்கான நேரடி பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி

புதுடெல்லி: பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நேரடி பொது தேர்வை ரத்து செய்ய கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் மாநில கல்வி வாரியங்களில் 10, 12ம்  வகுப்புகளுக்கு நேரடி பொது தேர்வினை ரத்து செய்யகோரி குழந்தைகள் நல ஆர்வலர்  ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.  இந்த மனுவை நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர், தினேஷ் மகேஸ்வரி, சி.டி.ரவிகுமார்  அடங்கிய அமர்வு  விசாரித்தது.அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இத்தகைய மனுக்கள் மாணவர்களிடம் தேவையில்லாத … Read more

ஒமைக்ரான் சத்தமே இல்லாமல் கொல்லும் தொற்று – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

ஒமைக்ரான் சத்தமே இல்லாமல் கொல்லும் தொற்று என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் அனைத்து வழக்குகளையும் நேரடியாக விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான விகாஷ் சிங் கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “முதல் அலையில் பாதிக்கப்பட்டபோது நான்கு நாட்களில் நான் குணமடைந்து விட்டேன். ஆனால், மூன்றாம் அலை சத்தமே இல்லாமல் கொல்லும் தொற்றாக … Read more

2020-ல் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டோரில் 68% பலாத்கார குற்றவாளிகள்

புதுடெல்லி: கடந்த 2020-ல் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களில் 68% பேர் பலாத்கார குற்றவாளிகள் ஆவர். கடந்த 2020-ம் ஆண்டில் கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் சுமார் 90 ஆயிரம் பேர் தண்டனை பெற்று சிறையில் உள்ளதாக சிறைத் துறை புள்ளி விவர அறிக்கை கூறுகிறது. இதில் 14.2 சதவீதம் பேர் பலாத்கார குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக தண்டனை பெற்ற18,615 பேரில் 67.9% பேர் (12,631) பலாத்கார குற்றவாளிகள் … Read more

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கைது <!– சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் மகாராஷ்டிர அமைச்சர் நவ… –>

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்கை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகளுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், அமைச்சருமான நவாப் மாலிக், சட்ட விரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இன்று அமலாக்கத்துறையினர் அவரை வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு அழைத்து வந்து 7 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், கைது செய்தனர். அமலாக்கத்துறையின் விசாரணைக்கு … Read more

விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சியிடம் இருந்து கடன் மோசடி பணம் ரூ.18,000 கோடி மீட்பு – மத்திய அரசு

புதுடெல்லி: பணமோசடி வழக்குகளில் அமலாக்கத்துறை இயக்குனரகத்திற்கு பரந்த அளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அந்த மனு மீதான் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசுக்கு எதிராக கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி மற்றும் முகுல் ரோத்கி உள்ளிட்ட பல மூத்த வழக்கறிஞர்கள் வாதாடி வருகின்றனர். பணமோசடி தடுப்புச் சட்டத்தில் கொண்டு வந்துள்ள சமீபத்திய திருத்தங்கள் தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் கொண்டவை என்கின்றனர். இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் … Read more

செல்போனில் இருந்த முக்கிய விவரங்களை நடிகர் திலீப் அழித்து விட்டார்: போலீஸ் தகவல்

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில், தற்போது தொடர் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் திலீப் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிபதி கவுசர், “விசாரணையை தேவையில்லாமல் நீட்டிக்க முடியாது. இந்த வழக்கில் அப்படி என்ன முக்கியத்துவம் உள்ளது,’’ என்று கேட்டார். இதற்கு போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “நடிகர் திலீப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சில முக்கிய … Read more

சூரிய புரோட்டான் நிகழ்வுகளைக் கண்டறிந்தது சந்திரயான்-2 விண்கலம்!

கடந்த 2019 வாக்கில் நிலவுக்கு இந்தியா அனுப்பிய சந்திராயன்-2 விண்கலம். இந்த விண்கலம் தற்போது அதிதீவிர சூரிய எரிப்பு காரணமாக சூரிய புரோட்டான் நிகழ்வுகளைக் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு.  சூரியன் சுறுசுறுப்பாக இருக்கும்போது, சூரிய எரிப்பு எனப்படும் கண்கவர் வெடிப்புகள் சில சமயங்களில் ஆற்றல்மிக்க துகள்களை (சோலார் புரோட்டான் நிகழ்வுகள் அல்லது SPEகள் என அழைக்கப்படுகின்றன) கிரகங்களுக்குள் வெளியேற்றுகின்றன. இதை தான் கண்டறிந்துள்ளது சந்திராயன்-2.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

இருளில் மூழ்கிய சண்டிகர்: 36 மணி நேரமாக மின்சாரம் இல்லை; அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்

சண்டிகர்: மின் வாரியத்தைத் தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து சண்டிகர் மின்வாரிய் ஊழியர்கள் மேற்கொண்டுள்ள 3 நாள் போராட்டம் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமையன்று தொடங்கிய போராட்டம் நீடிப்பதால் 36 மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் தவிக்குள்ளாகியுள்ளது சண்டிகர் யூனியன் பிரதேசம். பல வீடுகளில் தண்ணீர் இல்லாமல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மின் விளக்கு இல்லாமல் போக்குவரத்து ஆபத்தானதாக மாறியுள்ளது. அரசு மருத்துவமனைகள் பலவும் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த அறுவை சிகிச்சைகளை மின்சாரம் இல்லாததால் … Read more