செல்போனில் இருந்த முக்கிய விவரங்களை நடிகர் திலீப் அழித்து விட்டார்: போலீஸ் தகவல்

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில், தற்போது தொடர் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் திலீப் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிபதி கவுசர், “விசாரணையை தேவையில்லாமல் நீட்டிக்க முடியாது. இந்த வழக்கில் அப்படி என்ன முக்கியத்துவம் உள்ளது,’’ என்று கேட்டார். இதற்கு போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “நடிகர் திலீப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சில முக்கிய … Read more

சூரிய புரோட்டான் நிகழ்வுகளைக் கண்டறிந்தது சந்திரயான்-2 விண்கலம்!

கடந்த 2019 வாக்கில் நிலவுக்கு இந்தியா அனுப்பிய சந்திராயன்-2 விண்கலம். இந்த விண்கலம் தற்போது அதிதீவிர சூரிய எரிப்பு காரணமாக சூரிய புரோட்டான் நிகழ்வுகளைக் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு.  சூரியன் சுறுசுறுப்பாக இருக்கும்போது, சூரிய எரிப்பு எனப்படும் கண்கவர் வெடிப்புகள் சில சமயங்களில் ஆற்றல்மிக்க துகள்களை (சோலார் புரோட்டான் நிகழ்வுகள் அல்லது SPEகள் என அழைக்கப்படுகின்றன) கிரகங்களுக்குள் வெளியேற்றுகின்றன. இதை தான் கண்டறிந்துள்ளது சந்திராயன்-2.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

இருளில் மூழ்கிய சண்டிகர்: 36 மணி நேரமாக மின்சாரம் இல்லை; அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்

சண்டிகர்: மின் வாரியத்தைத் தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து சண்டிகர் மின்வாரிய் ஊழியர்கள் மேற்கொண்டுள்ள 3 நாள் போராட்டம் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமையன்று தொடங்கிய போராட்டம் நீடிப்பதால் 36 மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் தவிக்குள்ளாகியுள்ளது சண்டிகர் யூனியன் பிரதேசம். பல வீடுகளில் தண்ணீர் இல்லாமல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மின் விளக்கு இல்லாமல் போக்குவரத்து ஆபத்தானதாக மாறியுள்ளது. அரசு மருத்துவமனைகள் பலவும் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த அறுவை சிகிச்சைகளை மின்சாரம் இல்லாததால் … Read more

இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படிக்க விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிப்பு <!– இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படிக்க விண்ணப்பிக்கும் இந்… –>

இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படிக்க விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த 4 ஆண்டுகளில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. உயர்தர கல்வி, சர்வதேச அங்கீகாரம், பன்முக கலாச்சாரம், வேலை வாய்ப்பில் முன்னுரிமை, வெளிநாட்டு அனுபவம் போன்ற காரணங்களால் இங்கிலாந்தில் படிக்க இந்திய மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் அங்கு படிக்க விண்ணப்பிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்து வருகிறது. உலகளவில், இங்கிலாந்தில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்ள விண்ணப்பிப்பதில் சீன மாணவர்களுக்கு அடுத்தபடியாக இந்திய மாணவர்கள் … Read more

உ.பி. நான்காம் கட்ட தேர்தல் – 61.5 சதவீதம் வாக்குப்பதிவு

லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலத்தில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்தன. இதற்கிடையே, நேற்று மொத்தம் 59 தொகுதிகளில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. லக்னோவில் உள்ள வாக்குச்சாவடியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனது வாக்கை பதிவு செய்தார். அதன்பின் பேசிய அவர், பா.ஜ.க. மீண்டும் வரலாறு படைப்பதோடு மட்டுமல்லாமல் கடந்த முறையை விட அதிக இடங்கள் பிடிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தார். லக்னோ, ரேபரேலி, லக்கிம்பூர் உள்ளிட்ட … Read more

வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்காக வங்கி சேவை பெறுபவர்களை நுகர்வோராக கருத முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: வங்கி சேவைகளை வர்த்தக ரீதியாக பெறுபவரை நுகர்வோராக கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஸ்ரீகாந்த் ஜி மந்திரிகர் என்பவர் பங்கு சந்தை வர்த்தக புரோக்கராக உள்ளார். இவர் தனது தொழிலின் அபிவிருத்திக்காக கடன் கேட்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் விண்ணப்பித்தார். அதற்கு மாறாக அவருக்கு ‘ஓவர் டிராப்ட்’ பெறுவதற்கான வசதியை தருவதாக வங்கி கூறியது. இதையடுத்து, வங்கிக்கு எதிராக தேசிய நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் ஸ்ரீகாந்த் புகார் செய்தார். இதை விசாரித்த நுகர்வோர் … Read more

போர் பதற்றம் – உக்ரைனில் அமலாகிறது அவசர நிலை – துப்பாக்கி வைத்துக் கொள்ளவும் அனுமதி

உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்த தேசிய பாதுகாப்பு கவுன்சில் முடிவெடுத்துள்ளது. உக்ரைனின் 2 பகுதிகளை தன்னாட்சி பிராந்தியங்களாக ரஷ்யா அங்கீகரித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நிலைமையை கட்டுக்குள் வைப்பதற்காக அவசர நிலையை கொண்டு வர, நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைத்துள்ளதாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ஒலெக்சி டானிலோவ் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அவசர நிலை அமலாக்கத்தை நாடாளுமன்றம் முறைப்படி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த … Read more

உ.பி. தேர்தல் களம்: ’அவத்’ பிரதேச தொகுதிகள் அதிமுக்கியத்துவம் பெறுவதன் பின்புலம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அவத் பிரதேசத்தில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள தலைநகர் லக்னோவின் தொகுதிகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. உத்தரப் பிரதேசத்தின் 59 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று (பிப்.23) நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முகலாயர்கள் உள்ளிட்ட மன்னர்களின் ஆட்சியில் இந்த அவத் பிரதேசம் மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்கியது. அதேபோல், இந்த காலத்திலும் அவத் பகுதியின் தொகுதிகளில் இருந்து தான் நாட்டின் அதிகமான பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜவஹர்லால் நேரு, … Read more

சேரை இழுத்துப் போட்டு.. அது மீது ஏறி.. மாறி மாறி உக்கி போட்ட எம்எல்ஏ.. !

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் தான் ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டத்தில் திடீரென சரமாரியாக உக்கி போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இவர் மேடையில் உக்கி போடும் வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. ஆனால் கடும் கோபத்தில் உள்ள மக்களை ஏமாற்றி வாக்குகளைக் கவரும் போலி நாடகமே இது என்று காங்கிரஸ் கட்சி வர்ணித்துள்ளது. அந்த எம்எல்ஏவின் பெயர் பூபேஷ் செளபே . இவர் இவர் சோன்பஹ்தர் மாவட்டத்தில் உள்ள ராபர்ட்ஸ்கஞ்ச் … Read more

காரில் அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்திவிட்டு., பெண் காவலரை தாக்கிய நபர்.. <!– காரில் அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்திவிட்டு., பெண் கா… –>

புதுச்சேரியில், காரில் அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்தியதோடு, பெண் காவலரை தாக்கிவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த 19ம் தேதி தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, முன் சென்ற வாகனங்களின் மீது இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படை பெண் காவலர் ஜீவிதா, காரை மடக்கிப்பிடித்து காரில் இருந்தவனை காவல்நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். காரை ஓட்டி வந்த அந்த நபர், கிருமாம்பாக்கம் காவல்நிலையத்தில் நிறுத்தாமல் தப்பியோடுவதற்காக … Read more