போர் பதற்றம் – உக்ரைனில் அமலாகிறது அவசர நிலை – துப்பாக்கி வைத்துக் கொள்ளவும் அனுமதி

உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்த தேசிய பாதுகாப்பு கவுன்சில் முடிவெடுத்துள்ளது. உக்ரைனின் 2 பகுதிகளை தன்னாட்சி பிராந்தியங்களாக ரஷ்யா அங்கீகரித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நிலைமையை கட்டுக்குள் வைப்பதற்காக அவசர நிலையை கொண்டு வர, நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைத்துள்ளதாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ஒலெக்சி டானிலோவ் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அவசர நிலை அமலாக்கத்தை நாடாளுமன்றம் முறைப்படி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த … Read more

உ.பி. தேர்தல் களம்: ’அவத்’ பிரதேச தொகுதிகள் அதிமுக்கியத்துவம் பெறுவதன் பின்புலம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அவத் பிரதேசத்தில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள தலைநகர் லக்னோவின் தொகுதிகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. உத்தரப் பிரதேசத்தின் 59 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று (பிப்.23) நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முகலாயர்கள் உள்ளிட்ட மன்னர்களின் ஆட்சியில் இந்த அவத் பிரதேசம் மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்கியது. அதேபோல், இந்த காலத்திலும் அவத் பகுதியின் தொகுதிகளில் இருந்து தான் நாட்டின் அதிகமான பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜவஹர்லால் நேரு, … Read more

சேரை இழுத்துப் போட்டு.. அது மீது ஏறி.. மாறி மாறி உக்கி போட்ட எம்எல்ஏ.. !

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் தான் ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டத்தில் திடீரென சரமாரியாக உக்கி போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இவர் மேடையில் உக்கி போடும் வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. ஆனால் கடும் கோபத்தில் உள்ள மக்களை ஏமாற்றி வாக்குகளைக் கவரும் போலி நாடகமே இது என்று காங்கிரஸ் கட்சி வர்ணித்துள்ளது. அந்த எம்எல்ஏவின் பெயர் பூபேஷ் செளபே . இவர் இவர் சோன்பஹ்தர் மாவட்டத்தில் உள்ள ராபர்ட்ஸ்கஞ்ச் … Read more

காரில் அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்திவிட்டு., பெண் காவலரை தாக்கிய நபர்.. <!– காரில் அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்திவிட்டு., பெண் கா… –>

புதுச்சேரியில், காரில் அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்தியதோடு, பெண் காவலரை தாக்கிவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த 19ம் தேதி தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, முன் சென்ற வாகனங்களின் மீது இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படை பெண் காவலர் ஜீவிதா, காரை மடக்கிப்பிடித்து காரில் இருந்தவனை காவல்நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். காரை ஓட்டி வந்த அந்த நபர், கிருமாம்பாக்கம் காவல்நிலையத்தில் நிறுத்தாமல் தப்பியோடுவதற்காக … Read more

மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன

புதுடெல்லி: இந்திய விமானப்படையை பலப்படுத்துவதற்காக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் 2016-ல்  போடப்பட்டது.  இதன்படி 2022-ம் ஆண்டுக்குள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 விமானங்களை இந்தியாவிற்கு கொண்டுவர ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஏற்கனவே 32 ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், மேலும் 3 விமானங்கள் இந்தியா வந்தடைந்ததாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.  இதுவரை மொத்தம் 35 விமானங்கள் … Read more

ஏழைகளின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் கட்சிக்கு பாஜக: பிரதமர் மோடி பெருமிதம்..!

லக்னோ: ஏழைகளின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் கட்சிக்கு பாஜக என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் வாரிசு அரசியல் செய்யும் கட்சிகள் ஏழைகளை காலடியில் விழ செய்ததாகவும் குற்றம் சாட்டினார். உத்தர பிரதேசத்தில் இதுவரை மூன்று கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், பண்டா, ஃபதேபூர், ஹர்டோய், லக்கிம்பூர் கேரி, லக்னோ, ரேபரேலி, சீதாபூர், பிலிபித் மற்றும் உன்னாவ் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு உட்பட்ட 59 ெதாகுதிகளில் நான்காவது கட்டமாக இன்று (பிப். 23) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. … Read more

ஓபிசி பட்டியலில் கிறிஸ்தவ நாடார் சமூகத்தை சேர்க்க கேரள அரசு முடிவு

ஓபிசி பட்டியலில் கிறிஸ்தவ நாடார் சமூகத்தை சேர்க்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தென்னிந்திய ஐக்கிய திருச்சபையை சேர்ந்தவர்கள் நீங்கலாக ஓபிசி பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்.  முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பட்டியலில் சமூகத்தைச் சேர்க்க சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

தாவூத் தொடர்பு, பண மோசடி? – மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கைது பின்னணி

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாகவும், மகாராஷ்டிர சிறுபான்மை விவகார அமைச்சராகவும் இருந்த நவாப் மாலிக் இன்று அமலாக்க துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இன்று காலை முதல் 6 மணிநேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடந்து வந்த நிலையில், விசாரணையின் முடிவில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நிலையில் வெளியே அழைத்துவரப்பட்ட அவர், செய்தியாளர்களைச் சந்தித்ததும் கையை தூக்கி, “நான் இதற்கு தலை வணங்க மாட்டேன். நாங்கள் போராடி வெற்றி பெறுவோம். அனைவரையும் … Read more

போரை விட வாய் சிறந்தது: சசி தரூர் கிண்டல்!

உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனது படைகளை ரஷ்யா குவித்து வருகிறது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டனர். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைனை சேர்ப்பதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், அதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய படைகள் எல்லையில் குவிக்கப்பட்ட நிலையில், நேட்டோ படைகளும் குவிக்கப்பட்டுள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. … Read more

உக்ரைன் பதற்றம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் வரை உயர வாய்ப்பு <!– உக்ரைன் பதற்றம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை … –>

உக்ரைன் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றிற்கு 100 டாலரை நெருங்கும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை லிட்டருக்கு 8 ரூபாய் வரை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முன்பு 2014-ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 99 டாலராக அதிகரித்த நிலையில், அதன் பிறகு தற்போது கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், நாட்டில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ள … Read more