ஓபிசி பட்டியலில் கிறிஸ்தவ நாடார் சமூகத்தை சேர்க்க கேரள அரசு முடிவு

ஓபிசி பட்டியலில் கிறிஸ்தவ நாடார் சமூகத்தை சேர்க்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தென்னிந்திய ஐக்கிய திருச்சபையை சேர்ந்தவர்கள் நீங்கலாக ஓபிசி பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்.  முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பட்டியலில் சமூகத்தைச் சேர்க்க சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

தாவூத் தொடர்பு, பண மோசடி? – மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கைது பின்னணி

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாகவும், மகாராஷ்டிர சிறுபான்மை விவகார அமைச்சராகவும் இருந்த நவாப் மாலிக் இன்று அமலாக்க துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இன்று காலை முதல் 6 மணிநேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடந்து வந்த நிலையில், விசாரணையின் முடிவில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நிலையில் வெளியே அழைத்துவரப்பட்ட அவர், செய்தியாளர்களைச் சந்தித்ததும் கையை தூக்கி, “நான் இதற்கு தலை வணங்க மாட்டேன். நாங்கள் போராடி வெற்றி பெறுவோம். அனைவரையும் … Read more

போரை விட வாய் சிறந்தது: சசி தரூர் கிண்டல்!

உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனது படைகளை ரஷ்யா குவித்து வருகிறது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டனர். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைனை சேர்ப்பதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், அதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய படைகள் எல்லையில் குவிக்கப்பட்ட நிலையில், நேட்டோ படைகளும் குவிக்கப்பட்டுள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. … Read more

உக்ரைன் பதற்றம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் வரை உயர வாய்ப்பு <!– உக்ரைன் பதற்றம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை … –>

உக்ரைன் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றிற்கு 100 டாலரை நெருங்கும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை லிட்டருக்கு 8 ரூபாய் வரை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முன்பு 2014-ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 99 டாலராக அதிகரித்த நிலையில், அதன் பிறகு தற்போது கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், நாட்டில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ள … Read more

புவனேஷ்வரில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல இனி தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. இந்நிலையில், ஒடிசா மாநில தலைநகர் புவனேஷ்வரில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல கட்டுபாடுகளை தளர்த்தி அறிவித்துள்ளது. இதுகுறித்து புவனேஷ்வர் நகராட்சி ஆணையர் சஞ்சய் சிங் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:- வழிபாட்டு தலங்களுக்குச் செல்ல பக்தர்கள் கொரோனா தொற்று இரண்டு டோஸ் தடுப்பூசி சான்றிதழ்கள் அல்லது அடையாளச் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், வழிபாட்டு தலங்களின் அதிகாரிகள் … Read more

என்னை 25 நாட்களாக கஷ்டத்தில் ஆழ்த்திய ஒமிக்ரான் ஒரு ‘சைலண்ட் கில்லர்’- சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவலை

புதுடெல்லி: என்னை 25 நாட்களாக கஷ்டத்தில் ஆழ்த்திய ஒமிக்ரான் வைரஸ் ஒரு ‘சைலண்ட் கில்லர்’ என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலையுடன் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் தற்போது புதன் மற்றும் வியாழக் கிழமைகளில்  நேரடி விசாரணையும், திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காணொலி காட்சி மூலமும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. செவ்வாய்க் கிழமையில் பட்டியலிடப்பட்ட அனைத்து விஷயங்கள் குறித்து வழக்கறிஞர்கள் தரப்பில் ஆன்-ரெக்கார்ட் முறையில் விண்ணப்பம் செய்தால், அவர்களுக்கு அந்த நாளில் வீடியோ அல்லது டெலி-கான்பரன்சிங் … Read more

3 மாதங்களுக்கு பிறகு உயர காத்திருக்கும் பெட்ரோல், டீசல் விலை – எப்போது தெரியுமா?

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நாட்டில் உயராமல் இருக்கும் பெட்ரோல், டீசல் விலை, ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு உயரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் கிட்டத்தட்ட 100 டாலர்கள் அளவுக்கு தற்போது விற்பனையாகும் நிலையில், சட்டசபை தேர்தல்கள் முடிந்த பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் பதட்டம் உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மேலும் … Read more

பரஸ்பரம் புகழ்ந்து பேசிய அமித் ஷா, மாயாவிதி: உ.பி.யில் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு 4 கட்ட தேர்தல்கள் நடந்துவிட்டன. இன்னும் மூன்று கட்ட தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவை பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும், மாயாவதியை அமித் ஷாவும் பரஸ்பரம் புகழ்ந்து பேசியுள்ளது பல்வேறு ஊகங்களுக்கும் வழிவகுத்துள்ளது. முன்னதாக, அமித் ஷா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், “உத்தரப் பிரதேச அரசியலில் மாயாவதியின் முக்கியத்துவம் இன்னும் குன்றிவிடவில்லை” எனக் கூறியிருந்தார். இந்நிலையில், அதனைச் சுட்டிக்காட்டி மாயாவதியிடம் … Read more

பிப். 24 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாநில அரசு உத்தரவு!

கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில், நாளை வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் ஷிவமொகா மாவட்டத்தில், பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த இளம் நிர்வாகி ஹர்ஷா, அண்மையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த படுகொலைக்கு இந்து அமைப்புகள் கடும் … Read more

பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்தன – மத்திய அரசு <!– பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்த… –>

பிரான்ஸ் நாட்டில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரான்சிடம் இருந்து சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாயில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க 2016ஆம் ஆண்டில் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, 2020ஆம் ஆண்டில்  முதன்முறையாக 5 போர் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு விமானப் படையில் சேர்க்கப்பட்டன. அதன் பிறகு பல குழுக்களாக ரஃபேல் விமானங்களை பெற்ற நிலையில், பிரான்ஸ் விமான படை தளத்தில் இருந்து கிளம்பிய … Read more