3 மாதங்களுக்கு பிறகு உயர காத்திருக்கும் பெட்ரோல், டீசல் விலை – எப்போது தெரியுமா?

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நாட்டில் உயராமல் இருக்கும் பெட்ரோல், டீசல் விலை, ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு உயரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் கிட்டத்தட்ட 100 டாலர்கள் அளவுக்கு தற்போது விற்பனையாகும் நிலையில், சட்டசபை தேர்தல்கள் முடிந்த பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் பதட்டம் உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மேலும் … Read more

பரஸ்பரம் புகழ்ந்து பேசிய அமித் ஷா, மாயாவிதி: உ.பி.யில் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு 4 கட்ட தேர்தல்கள் நடந்துவிட்டன. இன்னும் மூன்று கட்ட தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவை பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும், மாயாவதியை அமித் ஷாவும் பரஸ்பரம் புகழ்ந்து பேசியுள்ளது பல்வேறு ஊகங்களுக்கும் வழிவகுத்துள்ளது. முன்னதாக, அமித் ஷா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், “உத்தரப் பிரதேச அரசியலில் மாயாவதியின் முக்கியத்துவம் இன்னும் குன்றிவிடவில்லை” எனக் கூறியிருந்தார். இந்நிலையில், அதனைச் சுட்டிக்காட்டி மாயாவதியிடம் … Read more

பிப். 24 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாநில அரசு உத்தரவு!

கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில், நாளை வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் ஷிவமொகா மாவட்டத்தில், பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த இளம் நிர்வாகி ஹர்ஷா, அண்மையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த படுகொலைக்கு இந்து அமைப்புகள் கடும் … Read more

பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்தன – மத்திய அரசு <!– பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்த… –>

பிரான்ஸ் நாட்டில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரான்சிடம் இருந்து சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாயில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க 2016ஆம் ஆண்டில் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, 2020ஆம் ஆண்டில்  முதன்முறையாக 5 போர் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு விமானப் படையில் சேர்க்கப்பட்டன. அதன் பிறகு பல குழுக்களாக ரஃபேல் விமானங்களை பெற்ற நிலையில், பிரான்ஸ் விமான படை தளத்தில் இருந்து கிளம்பிய … Read more

மகாராஷ்டிர மாநில மந்திரி நவாப் மாலிக் கைது

மகாராஷ்டிர மாநிலத்தின் மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான நவாக் மாலிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். இன்று காலை அவரது வீட்டிற்கு சென்று, அவரை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பிற்பகல் அவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அவரை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைக்காக  அழைத்துச் சென்றுள்ளனர். தாவூத் இப்ராஹிம் பண மோசடி வழக்குடன் தொடர்புடையாக எழுந்த குற்றச்சாட்டில் நவாப் மாலிக்கை அமலாக்கத்துறை  கைது செய்துள்ளது. … Read more

உத்தர பிரதேசத்தில் 4-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: மாலை 5 மணி நிலவரப்படி 57.45% வாக்குகள் பதிவாகின

லக்னோ: உத்தர பிரதேசத்தில் 4- ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 57.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. உத்தர பிரதேசத்தில் இதுவரை மூன்று கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், பண்டா, ஃபதேபூர், ஹர்டோய், லக்கிம்பூர் கேரி, லக்னோ, ரேபரேலி, சீதாபூர், பிலிபித் மற்றும் உன்னாவ் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு உட்பட்ட 59 ெதாகுதிகளில் நான்காவது கட்டமாக இன்று (பிப். 23) வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதிகளில் மொத்தம் 624 வேட்பாளர்கள் களத்தில் … Read more

குழந்தையை தத்தெடுக்க இனி இது தேவையில்லை! – நீதிமன்றம் சூப்பர் உத்தரவு

குழந்தையை தத்தெடுக்க நினைக்கும் தம்பதியருக்கு திருமணச் சான்றிதழ் தேவையில்லை என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ரீனா. திருநங்கையான இவர், தனது ஆண் நண்பரை கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதனிடையே, சமீபகாலமாக அவர்களுக்கு குழந்தையை தத்தெடுக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதையடுத்து, குழந்தையை தத்தெடுக்க அனுமதி வழங்கக் கோரி, அவர்கள் வாரணாசி மாவட்ட தாசில்தார் அலுவலகத்தை அணுகியுள்ளனர். அதற்கு, திருமணச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே குழந்தையை தத்தெடுக்க முடியும் … Read more

இந்து, முஸ்லிம் சகோதரர்களே… பெற்றோருக்கு நல்லப் பிள்ளையாக இருங்கள், அது போதும்: கொல்லப்பட்ட ஹர்ஷாவின் சகோதரி

பெங்களுரூ: “இந்து, முஸ்லிம் சகோதரர்கள் தங்களது பெற்றோருக்கு நல்லப் பிள்ளைகளாக இருங்கள்; மற்றதெல்லாம் வேண்டாம்“ என்று கர்நாடகாவில் கொல்லப்பட்ட ஹர்ஷாவின் சகோதரி வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடகாவின் ஷிமோகாவில் உள்ள சீகேஹ‌ட்டியில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஹர்ஷா (26) கடந்த 20-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆத்திரம் அடைந்த இந்துத்துவ அமைப்பினர் ஷிமோகா, பத்ராவதியில் நடத்திய போராட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகின. அப்பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. … Read more

36 மணி நேர மின் தடை: பொதுமக்கள் அவதி!

மின்சாரத் துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சண்டிகரில் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. சுமார் 36 மணி நேர மின் தடை காரணமாக தண்ணீர் கிடைக்காமல் பொது மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். சாலைகள் இயங்கும் சிக்னல் இயங்காததால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் மின்சாரத் தடையால் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. “மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்கள் உள்ளன. ஆனால், மருத்துவமனையின் 100 … Read more

கிராமங்களுக்கான டிஜிட்டல் இணைப்பு வசதி இன்றைக்கான தேவை – பிரதமர் மோடி <!– கிராமங்களுக்கான டிஜிட்டல் இணைப்பு வசதி இன்றைக்கான தேவை – … –>

கிராமங்களுக்கான டிஜிட்டல் இணைப்பு வசதி என்பது இலக்கு அல்ல அது இன்றைக்கான தேவை என குறிப்பிட்ட பிரதமர் மோடி, திறமையான இளைஞர்களை உருவாக்குவதே அரசின் லட்சியம் என தெரிவித்துள்ளார். ஊரக வளர்ச்சித்துறையில் மத்திய பட்ஜெட் ஏற்படுத்தும் ஆக்கப்பூர்வ விளைவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் பங்கேற்றார். அதில் பேசிய அவர், ஊரகப்பகுதிகளில் இணையதள வசதி வழங்கப்படுவதன் மூலம் அங்குள்ள இளைஞர்களின் திறன் அதிகரிக்கும் என குறிப்பிட்டார். மேலும், கிராமப்பகுதி நிலங்களை நவீன தொழில்நுட்பத்துடன் அளவிட்டு அதற்கான ஆவணங்களையும், … Read more