அமலாக்கத்துறையை பயன்படுத்தி பாஜக அரசு அதிகார அத்துமீறலில் ஈடுபடுவது குறித்து அவையில் பேச வேண்டும் : மாநிலங்களவை தலைவருக்கு கடிதம்!!

மும்பை : அமலாக்கத்துறையை பயன்படுத்தி அதிகார அத்துமீறலில் ஈடுபடும் போக்கு அதிகரித்து இருப்பதாகவும் மராட்டியத்தில் சிவசேனா ஆட்சியை கலைக்க ஒத்துழைக்குமாறு சிலர் தன்னை அணுகியதாகவும் சிவசேனா எம்.பி. சஞ்ஜய் ராவத் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், சிவசேனா எம்பிக்கள், முன்னணிநிர்வாகிகள் நிர்வாகிகள், அவர்களின் உறவினர்கள், நண்பர்களை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி துன்புறுத்துவது அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். 10, 17 ஆகிய … Read more

'முஸ்லிம் பெண்களை ஓரங்கட்டுவதை இந்தியத் தலைவர்கள் நிறுத்த வேண்டும்': ஹிஜாப் விவகாரத்தில் மலாலா கருத்து

முஸ்லிம் பெண்களை ஓரங்கட்டுவதை இந்தியத் தலைவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என பெண் கல்வி செயற்பாட்டாளரான மலாலா யூசுப்சாயி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் (முக்காடு), பருதா (முகத்திரை), புர்கா (முழு நீள உடை) அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால், 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர். ஹாசன் அரசு கல்லூரிக்கு நேற்று ஹிஜாப் அணிந்துவந்த மாணவியை … Read more

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக் கூடாதுன்னு சொல்கிறாரா பிரதமர்?.. பிரியங்கா கேள்வி

கொரோனா முதல் அலையின்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்களைக் கைவிட்டது பாஜக அரசு. கை கொடுத்தவை எதிர்க்கட்சிகளும், பிற தன்னார்வத் தொண்டர்களும். அவர்கள் யாரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவியிருக்கக் கூடாது என்று சொல்ல வருகிறாரா பிரதமர் நரேந்திர மோடி என்று கேட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா. பிரதமர் மோடி நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து அவர் ஆற்றிய உரை அது. அந்த உரையில் அவர் குறிப்பிட்ட … Read more

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் 8 லட்சத்து 25 ஆயிரம் வெளிநாட்டினர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வருகை.! <!– கொரோனா பரவலுக்கு மத்தியிலும் 8 லட்சத்து 25 ஆயிரம் வெளிநாட… –>

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் 2019 முதல் 2021 வரை 8 லட்சத்து 25 ஆயிரம் வெளிநாட்டினர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்தியானத் ராய் பதிலளிக்கையில், 26 ஆயிரத்து 599 பேர் விசாவுக்கான காலக்கெடு முடிந்தும் இந்தியாவில் தங்கி இருந்ததாகவும், அப்படி இருந்தவர்கள் குறித்து உண்மைத்தன்மை அறிந்து விசா நீட்டிப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்தார். Source link

2 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி பாறை இடுக்கில் சிக்கிய தவிக்கும் வாலிபர்: மீட்புப் பணியில் ராணுவம்

பாலக்காட்டை சேர்ந்தவர் பாபு (வயது28). இவரும் வேறு 3 நண்பர்களும் நேற்று முன்தினம் மலம்புழையில் காட்டுப்பகுதிக்குள் மலையேற சென்றனர். மதியம் பாபு மலையில் இருந்து இறங்கியபோது, பள்ளமான இடத்தில் பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்தார். அவருடன் சென்றவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதைத் தொடர்ந்து அவர்கள் மலையில் இருந்து இறங்கி மலம்புழை வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, மலை ஏற்ற வீரர்களும், விபத்து பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து சென்றனர். ஆனால் பாபு சிக்கியுள்ள … Read more

உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் :ஒன்றிய அரசு

டெல்லி : உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 2021ம் ஆண்டு 210 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் 2021ம் ஆண்டு 9790.36 டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும் ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், டி நிறுவனம் மீது 'உபா' சட்டத்தின் கீழ் என்ஐஏ வழக்கு

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது டி-கம்பெனி மீது உபா சட்டம் என்று அழைக்கப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ்என்ஐஏ வழக்கு பதிவு செய் துள்ளது. நிழல் உலக தாதாவும் 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவருமான தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவரது நிழல் உலக நிறுவனம் டி-கம்பெனி என அழைக்கப்படுகிறது. லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தாவூத் இப்ராஹிம் … Read more

சென்னை டூ திருப்பதி… போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் வரப்போகுது விடியல்!

நாட்டின் சாலை போக்குவரத்தில் நெடுஞ்சாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகள் மிகவும் முக்கிய பங்கு பெறுகின்றன. இந்த சாலைகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டே இந்த சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ( NHAI ) தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன்படி சென்னை – திருப்பதி இடையிலான, தேசிய நெடுஞ்சாலையில் அதிகரித்து வரும் வாகனங்களின் போக்குவரத்தை கவனத்தி்ல் கொண்டு, இந்த சாலையை, 20 கிலோமீட்டர் … Read more

ராஜஸ்தானில் ராணுவ சீருடையில் வலம் வந்து இந்தியாவின் தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய உளவாளி கைது.! <!– ராஜஸ்தானில் ராணுவ சீருடையில் வலம் வந்து இந்தியாவின் தகவல்… –>

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவுத்துறையைச் சேர்ந்த ஒருவர் இந்திய ராணுவ சீருடையில் வலம் வந்து ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்த நிலையில் ராஜஸ்தான் போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சக்திபால் சக் என்ற பெயரிட்ட அந்த நபர் ராஜஸ்தானின் சிறிய டவுண் ஒன்றில் எல்லைப்பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் ராணுவ சீருடையில் சென்று நட்புகொண்டு தகவல்களைப் பெற்று பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்ததாக போலீசார் தெரிவித்தனர். ராணுவ வாகனங்களின் புகைப்படங்கள், ரகசிய ஆவணங்கள் போன்றவை அவருடைய மொபைலில் … Read more

தேசியக் கல்விக் கொள்கை அமலாக்கப்பட வேண்டும் – குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

புதுடெல்லி: மகாராஷ்ட்ரா மாநில கல்வி சங்கத்தின் 160 ஆண்டுகள் வரலாறு குறித்த நூல் வெளியீடு நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பேசியதாவது: இந்த நாடு அறிந்துள்ள வீரமிக்க நாயகர்களின் கதைகளை நாம் நமது குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். நமது புகழ்மிக்க வரலாற்றால் நமது தாழ்வு மனப்பான்மையை வீழ்த்த வேண்டும்.வரலாறு நமக்கு கற்றுத் தருகிறது, அறிவை பிரகாசிக்க வைக்கிறது.  தேசத்தின் போற்றப்படாத நாயகர்களை கவுரவிக்கவும் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை பள்ளிக் குழந்தைகள் அறியப்பட வேண்டும். இந்தியாவின் … Read more