செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது பாத்திரம் கழுவும்படி கூறியதால் தாய் அடித்துக் கொலை: உ.பி-யில் 14 வயது மகள் ஆத்திரம்

நொய்டா: செல்போனில் பேசிக் கொண்டிருந்த மகளை பாத்திரம் கழுவும்படி கூறியதால், ஆவேசமடைந்த மகள் தனது தாயை அடித்துக் கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டா செக்டார் குடியிருப்பில் ரத்த வெள்ளத்தில் 34 வயதுடைய பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் ஏடிஜிபி ரன்விஜய் சிங் கூறுகையில், ‘கொலையான பெண்ணுக்கு 14 வயதுடைய 9ம் வகுப்பு … Read more

5 மணி நேர விசாரணைக்கு பின் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் கைது – நடந்தது என்ன?

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளுடன் சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி மகாராஷ்ட்ரா அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் நவாப் மாலிக். தேசியவாத காங்கிரஸின் முக்கிய தலைவராக கருதப்படும் இவர், பல ஆண்டுகளுக்கு முன்பு நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக பேச்சு அடிபட்டது. அந்த சமயத்தில், தாவூத் … Read more

'ஒமைக்ரான் சைலன்ட் கில்லர்… 25 நாட்களாக சிரமப்படுகிறேன்' – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ’ஒமைக்ரான் சத்தமில்லாமல் கொல்லும் கிருமி’ என்று விமர்சித்தார். உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங். இவர் உச்ச நீதிமன்ற பார் சங்க தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், கரோனா தொற்று எண்ணிக்கை குறைவதால் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் முழு வீச்சில் நேரடி விசாரணைகளைத் தொடங்க வேண்டும் என்று கூறினார். அதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற தலைமை … Read more

BREAKING: மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் அதிரடி கைது!

சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில், மகாராஷ்டிர மாநில அமைச்சர் நவாப் மாலிக்கை, அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவேசனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணி அரசுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் தொடக்கத்தில் இருந்தே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையே, மும்பை நிழல் உலக … Read more

ரஷ்யா – உக்ரைன் மோதல் விவகாரம் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் <!– ரஷ்யா – உக்ரைன் மோதல் விவகாரம் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்ச… –>

உக்ரைன் – ரஷ்யா இடையே நிலவும் போர் சூழல் மற்றும் உயரும் கச்சா எண்ணெய் விலை ஆகியவை நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மும்பையில் நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி கவுன்சிலின் உயர்மட்டக் குழு கூட்டம் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பேசிய அவர், உக்ரைனில் சர்வதேச அளவில் கவலைக்குரிய சூழல் நிலவி வருவதாகவும், இந்த பிரச்சனைக்கு தூதரக வழிமுறையில் தீர்வு காண வேண்டும் என … Read more

நேரடி பொதுத் தேர்வுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கான இரண்டு பருவத் தேர்வுகளை ஏப்ரல் 26-ம் தேதி முதல் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒடிசா- என்ஒய்சிஎஸ் மாணவர் சங்கத்துடன் இணைந்து குழந்தை உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான அனுபா ஸ்ரீவஸ்தவா சஹாய் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அனைத்து ஸ்டேட் போர்ட், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் (என்ஐஓஎஸ்) மூலம் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு … Read more

பிரான்ஸ் நாட்டில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தது

மும்பை: பிரான்ஸ் நாட்டில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளது. 36 போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்த நிலையில் இதுவரை 35 போர் விமானங்கள் வந்துள்ளது.

லக்கிம்பூரில் துணை ராணுவத்தினர் சூழ பாதுகாப்புடன் வாக்களித்த அமைச்சர் அஜய் மிஸ்ரா

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பலத்த பாதுகாப்புடன் வந்து வாக்களித்தார். அவரது பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார், துணை ராணுவப்படையினர் வந்திருந்தனர். வாக்களித்துவிட்டு வெளியில் வந்த அஜய் மிஸ்ராவிடம் கேள்விகள் எழுப்ப பத்திரிகையாளர்கள் குவிந்திருந்த நிலையில் எந்தக் கேள்வியையும் எதிர்கொள்ளாமல் வெறும் வெற்றி அடையாளத்தை விரல்களில் காட்டிவிட்டுச் அவர் கிளம்பிச் சென்றார். உத்தரப் பிரதேசத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் லக்கிம்பூர் தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. … Read more

கிராமங்களுக்கான டிஜிட்டல் இணைப்பு இன்றைக்கான தேவையாகும் – பிரதமர் <!– கிராமங்களுக்கான டிஜிட்டல் இணைப்பு இன்றைக்கான தேவையாகும் -… –>

நாட்டில் உள்ள கிராமங்களுக்கான டிஜிட்டல் இணைப்பு வசதி என்பது இலக்கு அல்ல அது இன்றைக்கான தேவை என குறிப்பிட்ட பிரதமர் மோடி, திறமையான இளைஞர்களை உருவாக்குவதே அரசின் லட்சியம் என்று தெரிவித்துள்ளார் இந்த ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கை, ஊரக வளர்ச்சித்துறையில் ஏற்படுத்தும் ஆக்கப்பூர்வமான விளைவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் உரையாற்றிய அவர், ஊரகப்பகுதிகளில் இணையதள வசதி வழங்கப்படுவதன் மூலம் அங்குள்ள இளைஞர்களின் திறன் அதிகரித்து அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் … Read more

மின்வாரிய ஊழியர்கள் ஸ்டிரைக்- 36 மணிநேரம் இருளில் மூழ்கிய சண்டிகர்

சண்டிகர்: மின்வாரியத்தை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து சண்டிகரில் மின்வாரிய ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் 3 நாட்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். இதனால் சண்டிகரில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால் பல இடங்கள் 2 நாட்களாக இருளில் மூழ்கி உள்ளன. குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. சாலைகளில் போக்குவரத்து சிக்னல்களும் இயங்காததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரவில் பொதுமக்கள் வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து இருளில் கடும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். … Read more