பிரான்ஸ் நாட்டில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தது

மும்பை: பிரான்ஸ் நாட்டில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளது. 36 போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்த நிலையில் இதுவரை 35 போர் விமானங்கள் வந்துள்ளது.

லக்கிம்பூரில் துணை ராணுவத்தினர் சூழ பாதுகாப்புடன் வாக்களித்த அமைச்சர் அஜய் மிஸ்ரா

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பலத்த பாதுகாப்புடன் வந்து வாக்களித்தார். அவரது பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார், துணை ராணுவப்படையினர் வந்திருந்தனர். வாக்களித்துவிட்டு வெளியில் வந்த அஜய் மிஸ்ராவிடம் கேள்விகள் எழுப்ப பத்திரிகையாளர்கள் குவிந்திருந்த நிலையில் எந்தக் கேள்வியையும் எதிர்கொள்ளாமல் வெறும் வெற்றி அடையாளத்தை விரல்களில் காட்டிவிட்டுச் அவர் கிளம்பிச் சென்றார். உத்தரப் பிரதேசத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் லக்கிம்பூர் தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. … Read more

கிராமங்களுக்கான டிஜிட்டல் இணைப்பு இன்றைக்கான தேவையாகும் – பிரதமர் <!– கிராமங்களுக்கான டிஜிட்டல் இணைப்பு இன்றைக்கான தேவையாகும் -… –>

நாட்டில் உள்ள கிராமங்களுக்கான டிஜிட்டல் இணைப்பு வசதி என்பது இலக்கு அல்ல அது இன்றைக்கான தேவை என குறிப்பிட்ட பிரதமர் மோடி, திறமையான இளைஞர்களை உருவாக்குவதே அரசின் லட்சியம் என்று தெரிவித்துள்ளார் இந்த ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கை, ஊரக வளர்ச்சித்துறையில் ஏற்படுத்தும் ஆக்கப்பூர்வமான விளைவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் உரையாற்றிய அவர், ஊரகப்பகுதிகளில் இணையதள வசதி வழங்கப்படுவதன் மூலம் அங்குள்ள இளைஞர்களின் திறன் அதிகரித்து அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் … Read more

மின்வாரிய ஊழியர்கள் ஸ்டிரைக்- 36 மணிநேரம் இருளில் மூழ்கிய சண்டிகர்

சண்டிகர்: மின்வாரியத்தை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து சண்டிகரில் மின்வாரிய ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் 3 நாட்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். இதனால் சண்டிகரில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால் பல இடங்கள் 2 நாட்களாக இருளில் மூழ்கி உள்ளன. குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. சாலைகளில் போக்குவரத்து சிக்னல்களும் இயங்காததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரவில் பொதுமக்கள் வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து இருளில் கடும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். … Read more

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சவால் ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு..!!

டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது நாட்டின் நிதி சிறத்தன்மைக்கு சவாலை ஏற்படுத்தி உள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிதி சிறத்தன்மை மேம்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் உக்ரைன் விவகாரம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரம் ஆகிய இரு முக்கிய பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் நிதி சிறத்தன்மைக்கு இவ்விரு பிரச்சனைகளும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளதாகவும், எனவே … Read more

உ.பி. தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 22.62% வாக்குப்பதிவு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இன்று 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி அங்கு 22.62% வாக்குப்பதிவாகியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பி, பிலிபிட் தொகுதியில் அதிகபட்சமாக வாக்குப்பதிவாகியுள்ளது. அங்கு 11 மணி நிலவரப்படி 27.43% வாக்குப்பதிவானது. அதனையடுத்து ஃபதேபூரில் 22.49% வாக்குப்பதிவாகியுள்ளது. ஹர்தோய் தொகுதியில் மிகக் குறைவாக 22.27% வாக்குப்பதிவாகியுள்ளது. 59 தொகுதிகளில் களம் காணும் 624 வேட்பாளர்கள்: இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் லக்கிம்பூர் தொகுதி மிகவும் … Read more

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு: அமைச்சரிடம் அமலாக்கத் துறை விசாரணை!

மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகளுடன், சட்ட விரோதப் பணப் பரிமாற்ற செய்தது தொடர்பான வழக்கில், மஹாராஷ்டிர மாநில அமைச்சர் நவாப் மாலிக்கிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மஹாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவேசனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணி அரசுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் தொடக்கத்தில் இருந்தே மோதல் போக்கு நிலவி … Read more

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை.. பெட்ரோல், டீசல் தட்டுபாடு.. 5 மணி நேரம் மின் வெட்டு.. <!– கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை.. ப… –>

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், எரிபொருள் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் வாகன எரிபொருள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இலங்கையின் பல இடங்களில் பெட்ரோல் நிரப்பும் மையங்கள் மூடப்பட்டதாலும், குறைந்த அளவிலான எரிபொருள் மிச்சம் இருப்பதாலும் எரிபொருள் நிரப்ப வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்திக்கு தேவைப்படும் எரிபொருளிலும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் ஒரு நாளைக்கு 2 முதல் 5 மணி நேரம் வரை மின் வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் … Read more

இருதய ரத்த நாளங்களை கொரோனா வைரஸ் சேதப்படுத்தும்- புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. ஆனாலும், புதிய வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா டெல்டா, ஒமைக்ரான் உள்ளிட்ட வகைகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பாதிப்புகள் தொடர்பாக ஆய்வுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இருதய ரத்த நாளங்களை கொரோனா வைரஸ் எப்படியெல்லாம் தாக்கும் என்பது தொடர்பான புதிய ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது. இங்கிலாந்தின் பிரிஸ்டோல் பல்கலைக் கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டு … Read more

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 22.62% வாக்குகள் பதிவு

லக்னோ:  உத்தரப்பிரதேசத்தில் 4-ம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடந்து வரும் நிலையில் காலை 11 மணி  நிலவரப்படி 22.62% வாக்குகள் பதிவாகியுள்ளது.