பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு!: விசாரணையை தொடங்கியது 5 பேர் கொண்ட விசாரணைக்குழு..!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அமைத்த 5 பேர் கொண்ட குழு விசாரணையை தொடங்கியுள்ளது. கடந்த மாதம் 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்றிருந்தார். மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்துவிட்டு சாலை மார்க்கமாக சென்ற பிரதமரின் வாகனம் போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்டது. இதனால் பயணம் ரத்து செய்யப்பட்டது. பிரதமரின் வருகை, திட்டம் … Read more

தேரா சச்சா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு 21 நாள் பரோல்: பஞ்சாப் தேர்தலில் ஆதாயம் தேடும் நடவடிக்கையா?

சண்டிகர்: கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் கைதியாக ஹரியாணா சுனாரியா சிறையில் உள்ள தேரா சச்சா தலைவர் ராம் ரஹீம் சிங்குக்கு 21 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, பஞ்சாப் தேர்தலை ஒட்டிய நகர்வாக இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஹரியாணா மாநிலத்தில் தேரா சச்சா சவுதா சிர்ஸா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவராக குர்மீத் ராம் ரஹீம் சிங் உள்ளார். இந்த அமைப்பின் மேலாளர் ரஞ்சித் சிங், 2002 ஜூலை … Read more

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து செல்ல கல்லூரி மாணவிகளுக்கு அனுமதி!

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அத்துடன், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர். மாணவிகளின் தாக்கல் செய்த மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. … Read more

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு சாதனங்கள் வாங்கியதில் 30 லட்ச ரூபாய் வரை முறைகேடு புகார் <!– புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு சாதனங்கள் வாங்கி… –>

புதுச்சேரியில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலின் போது கொள்முதல் செய்யப்பட்ட கொரோனா பாதுகாப்பு சாதனங்களில் 30 லட்ச ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக துணை நிலை ஆளுநரிடம் மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். சட்டப்பேரைவை தேர்தலுக்காக வாங்கிய கொரோனா பாதுகாப்பு சாதனங்களில் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் தெர்மா மீட்டர், பாதுகாப்பு கவசம், நான்கு சக்கர நாற்காலிகள் குறித்து கணக்குகள் இல்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்ததாகவும், … Read more

தரிசன டிக்கெட் இல்லாமல் சென்றதால் தடுத்து நிறுத்தம்- மறியலில் ஈடுபட்ட தமிழக பக்தர்கள் திருப்பதிக்கு அனுமதி

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரதசப்தமி விழாவை காண திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு திருப்பதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) ரத சப்தமி விழா நடைபெறுகிறது. ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளி காட்சியளிப்பார். மினி பிரம்மோற்சவமான இதனை காண ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள். கொரோனா விதிமுறையால் இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதியின்றி ரதசப்தமி விழா … Read more

'இன்று முதல் தமது பெயரிலும், தமது மனைவி பெயரிலும் சொத்து வாங்கமாட்டேன்'!: பஞ்சாப் காங். முதலமைச்சர் வேட்பாளர் சரண்ஜித் சிங் அறிவிப்பு..!!

சண்டிகர்: பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்‍கப்பட்டுள்ள சரண்ஜித் சிங் சன்னி, இன்று முதல் தமது பெயரிலும், தமது மனைவி பெயரிலும் எவ்வித சொத்தும் வாங்கப்போவதில்லை என்றும் எந்த தொழிலும் செய்யப்போவதில்லை என்றும் உறுதி அளித்துள்ளார். பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.1 17 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்‍கான தேர்தல் வரும் 20ம் தேதி … Read more

யாரேனும் ஏதாவது கோபத்தில் பேசுவதெல்லாம் இந்துத்துவம் ஆகிவிடாது: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விமர்சனம்

நாக்பூர்: யாரேனும் ஏதாவது கோபத்தில் பேசுவதெல்லாம் இந்துத்துவக் கொள்கை ஆகிவிடாது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார். இந்துத்துவமும் தேசிய ஒருமைப்பாடும் என்ற தலைப்பில் லோக்மத் மீடியா ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார். நாக்பூர் லோக்மத் பத்திரிகை பொன்விழா கொண்டாடியது. அதன் ஒருபகுதியாக நேற்று நடந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது: அண்மையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் தர்ம சன்சத் என்ற தலைப்பில் நடந்த இந்து மாநாட்டில் பேசப்பட்ட சில கருத்துகள் சர்ச்சையாகியுள்ளன. அவை … Read more

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ் – வெளியானது செம அறிவிப்பு!

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 12 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. தினமும், 15 ஆயிரம் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில், பத்தினம்திட்டா மாவட்டத்தில், உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு, வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்துச் செல்வர். தற்போது கொரோனா காலக் கட்டம் என்பதால், கோவிலுக்கு … Read more

டெல்லியில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்! <!– டெல்லியில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. மகிழ்… –>

டெல்லியில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுப் பரவல் குறைந்ததையடுத்துப் பள்ளிகளைத் திறக்க மாநில அரசு முடிவெடுத்தது. அதன்படி மாணவர்கள் இன்று மீண்டும் பள்ளிகளுக்குச் சென்றனர். மழலையர்ப் பள்ளி முதல் எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பிப்ரவரி 14ஆம் நாள் பள்ளிகள் திறக்கப்படும் எனத் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். குஜராத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் … Read more

குண்டாப்பூர் அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து செல்ல மாணவிகளுக்கு அனுமதி

குண்டாப்பூர்: கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக, இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்தும், இந்து மாணவிகள் காவி சால்வை அணிந்தும் கல்லூரிக்கு வந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடுப்பி மாவட்டம் குண்டாப்பூர் அரசுக் கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்ததையடுத்து, பர்தா அணிந்து வந்த மாணவிகள் வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் … Read more