அஜ்மீர் தர்க்காவுக்கு மலர்ப்போர்வை வழங்கிய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி.! <!– அஜ்மீர் தர்க்காவுக்கு மலர்ப்போர்வை வழங்கிய சிறுபான்மையினர… –>

ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள தர்க்காவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி சார்பில்  சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி மலர்ப் போர்வையை வழங்கினார். அஜ்மீரில் தர்க்காவில் உள்ள காஜா மொய்னுத்தீன் சிஷ்டி 810ஆவது உருசு விழா பிப்ரவரி ஒன்பதாம் நாள் நடைபெற உள்ளது. இதையொட்டித் தர்க்காவுக்குப் பிரதமர் மோடி சார்பில் மலர்ப்போர்வை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதை மத்தியச் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, தர்க்கா நிர்வாகத்திடம் இன்று முறைப்படி வழங்கினார்.  Source link

பாடகி லதா மங்கேஷ்கர் இறுதி ஊர்வலம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மும்பை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, பிரபல சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் (92) இன்று காலமானார்.  அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைத்துத் தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  இதற்கிடையே, லதா மங்கேஷ்கர் மறைவையடுத்து நாடு முழுவதும் இன்றும் நாளையும் 2 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் இரு நாட்களுக்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என மத்திய … Read more

செய்தி சேகரிக்க சென்ற போது கண்ணிவெடியில் சிக்கி பத்திரிகையாளர் பலி: ஒடிசாவில் நக்சல் கும்பல் அட்டூழியம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் ஒருவர் கண்ணிவெடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா மாநிலத்தில் இம்மாத இறுதியில் ஐந்து கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை பொது மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நக்சல் கும்பல் ஊடுருவிய மலைக் கிராமங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தி சேகரிக்க புவனேஸ்வரில் இருந்து வெளியாகும் முன்னணி ஒடியா நாளிதழின் நிருபர் ரோஹித் குமார் பிஸ்வால் என்பவர், கலாஹண்டி மாவட்டத்தின் கர்லகுண்டா பாலம் பகுதிக்கு சென்றார். அப்போது … Read more

ஹிஜாப் தடையால் பெண் கல்வி பாதிக்கப்படும்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி

பெங்களூரு: ஹிஜாப் தடையால் பெண் கல்வி மேலும் பாதிக்கப்படும் என ஐக்கிய ஜனதா தள தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக, கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கல்லூரி நிர்வாகம் தங்களது உடை … Read more

திருப்பதியில் இன்னும் 2 மாதத்தில் கொரோனா கட்டுப்பாடு இன்றி வழக்கம்போல் தரிசனம் <!– திருப்பதியில் இன்னும் 2 மாதத்தில் கொரோனா கட்டுப்பாடு இன்ற… –>

இன்னும் இரண்டு மாதத்தில் திருப்பதி கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுப் பக்தர்கள் வழக்கம்போல் தரிசிக்க அனுமதிக்கப்படும் எனத் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி திருப்பதி தேவஸ்தானத்தின் ஆலோசகர்கள் குழுத் துணைத்தலைவர்கள், உறுப்பினர்கள் பதவியேற்பு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் நடைபெற்றது. ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக இந்திரா ராஜேந்திரன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் ஆகியோர் உட்பட 24 பேர் பதவியேற்றுக் கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின் திருப்பதி தேவஸ்தானத் தலைவர் சுப்பாரெட்டி, தமிழ்நாடு … Read more

நானும் சுயசரிதை எழுதினால் பலரது முகமூடி கிழியும்- ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு பேட்டி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டது. கேரளாவில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் மற்றும் இங்கு பணிபுரிந்த ஸ்வப்னா சுரேஷ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை அமலாக்க துறையும் விசாரிக்க தொடங்கியதை தொடர்ந்து கேரள முதல் மந்திரி பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக பணிபுரிந்த மூத்த ஐ.ஏ.எஸ். … Read more

வாவா சுரேஷ் நாளை டிஸ்சார்ஜ்

திருவனந்தபுரம்: பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாவா சுரேஷ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

லதா மங்கேஷ்கர் மறைவு எதிரொலி: உ.பி. தேர்தல் அறிக்கை வெளியீட்டை தள்ளிவைத்தது பாஜக 

லக்னோ: பிரபல பின்னணிப் பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவை ஒட்டி, இன்று நடப்பதாக இருந்த உத்தரப் பிரதேச தேர்தல் அறிக்கை வெளியீட்டை பாஜக தள்ளிவைத்துள்ளது. கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. 20 நாட்களுக்கும் மேலாக கரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை அடுத்தடுத்த பல உறுப்புகளும் செயலிழக்க 8.30 … Read more

ஹிஜாப் தடை: ஆதரிக்கும் இஸ்லாமியர்கள்!

கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளிகள் சிலவற்றில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் (தலை மறைப்பு துணி) அணிய தடை விதிக்கப்பட்டது. அப்படி அணிந்த மாணவிகளை பள்ளிக்குள் வர அனுமதிக்கப்படவில்லை. இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்துகிறார்கள். இன்னொரு பக்கம், “அவர்கள் ஹிஜாப் அணிந்தால் நாங்கள் துண்டு அணிந்து வருவோம்” என்று இந்து மாணவிகள் சிலர் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். இந்த ஹிஜாப் தடையை பாஜக உள்ளிட்ட இந்துத்து அமைப்புகள் ஆதரிக்கின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. காங்கிரஸுடன் இணைந்து, … Read more

அதிவேகமாக சென்ற கார் எதிரே வந்த டிராக்டர் டிராலி மீது மோதி விபத்து… 3 பேர் உயிரிழப்பு <!– அதிவேகமாக சென்ற கார் எதிரே வந்த டிராக்டர் டிராலி மீது மோத… –>

ஹரியானா மாநிலம் களனூரிலிருந்து ரோஹ்தக் நகரை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிரே வந்த டிராக்டர் டிராலி மீது மோதியதில், 3 பேர் உயிரிழந்தனர். லஹ்லி கிராமத்திற்கு அருகே ரோஹ்தக் நகரை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார், எதிர்புறத்தில் இருந்து வந்த டிராக்டர் டிராலி மீது பலமாக மோதியது. இதில், 3 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி … Read more