1971 பாக்., போரில் வெற்றியை ஈட்டித் தந்த வீரர்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை

புதுடெல்லி: 1971-ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட போரில் இந்தியா வெற்றி பெற்ற தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களின் துணிச்சலைப் போற்றி உள்ளனர். அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக இந்திய ராணுவம் போரிட்டு வெற்றி பெற்றது. 13 நாட்கள் நடைபெற்ற இந்த போரில், பாகிஸ்தான் ராணுவம், இந்திய ராணுவத்திடம் சரணடைந்தது. பாகிஸ்தான் படைத் … Read more

இவிஎம் சர்ச்சை: உமர் அப்துல்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் பதிலடி

புதுடெல்லி: “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் மூலம் 100 எம்,பி.க்களைப் பெற்று நாடாளுமன்றத்தில் அமர்ந்த பின்னர் அதே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பற்றி இப்போது குறை கூறுவது தவறு” என்று கூறிய காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாக்கூர், “முதல்வரான பின்னர் கூட்டணி கட்சியினருடன் ஏன் இந்த அணுகுமுறை?” என்று வினவியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ், … Read more

'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க மாயாவதி வலியுறுத்தல்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து இண்டியா கூட்டணியில் … Read more

முதல்முறையாக அமைச்சரவை விரிவாக்கம்: மகாராஷ்டிராவில் 39 அமைச்சர்கள் பதவியேற்பு

நாக்பூர்: ம​காராஷ்டிர அமைச்​சரவை நேற்று விரிவாக்கம் செய்​யப்​பட்​டது. நாக்​பூரில் நடைபெற்ற விழா​வில் ஆளும் பாஜக, சிவசேனா, தேசி​யவாத காங்​கிரஸை சேர்ந்த 39 பேர் அமைச்​சர்​களாக பதவி​யேற்றுக் கொண்​டனர். மகாராஷ்டிர சட்டப்​பேரவை தேர்​தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்​டே​வின் சிவசேனா, அஜித் பவாரின் தேசி​யவாத காங்​கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்​றது. மொத்தம் உள்ள 288 தொகு​தி​களில் பாஜக கூட்​ட​ணிக்கு 230 இடங்கள் கிடைத்தன. பாஜக மட்டும் 132 இடங்​களில் வெற்றி பெற்​றது. மகாராஷ்டிரா​வின் புதிய முதல்​வராக … Read more

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கலாக இருந்த ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா தள்ளிவைப்பு

புதுடெல்லி: நாடாளு​மன்​றத்​தில் ‘ஒரே நாடு, ஒரே தேர்​தல்’ மசோதா தாக்கல் செய்​யப்​படுவதை மத்திய அரசு தள்ளி​வைத்​துள்ளது. நாடாளு​மன்ற குளிர்கால கூட்​டத்​தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி, வரும் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டம் தொடங்​கிய​தில் இருந்தே அதானி விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்​பூர் விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்​கட்​சிகள் அமளி​யில் ஈடுபட்டன. அதன்​பிறகு நடைபெற்ற கூட்​டங்​களில், இந்தியா​வுக்கு எதிராக செயல்​படும் சர்வதேச புலனாய்வு ஊடக அமைப்​புக்கு (ஓசிசிஆர்பி) நிதி​யுதவி அளிக்​கும் அமெரிக்க … Read more

தற்கொலை செய்துகொண்ட பெங்களூரு ஐ.டி. ஊழியரின் மனைவி, மாமியார், மைத்துனர் கைதானது எப்படி?

பெங்களூரு: பெங்​களூருவை சேர்ந்த ஐ.டி. ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை வழக்​கில் அவரது மனைவி, மாமி​யார், மைத்​துனர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். பிஹாரின் சமஸ்​திபூர் மாவட்டம் பெனி பகுதியை சேர்ந்​தவர் அதுல் சுபாஷ் மோடி (35). இவருக்​கும் உத்தர பிரதேசத்​தின் ஜவுன்​பூர் பகுதியை சேர்ந்த நிகிதா சிங்​கானி​யா​வுக்​கும் (30) கடந்த 2019 ஜூனில் திரு​மணம் நடந்தது. கர்நாடக தலைநகர் பெங்​களூரு​வில் உள்ள தனியார் ஐ.டி. நிறு​வனத்​தில் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) பொறி​யாளராக அதுல் பணியாற்றி வந்தார். திரு​மணத்​துக்கு பிறகு … Read more

ஜம்மு-காஷ்மீர் வழித்தடத்தில் மானிய கட்டணத்தில் ஹெலிகாப்டர் சேவை

உள்ளூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ஜம்மு-காஷ்மீர் வழித்தடத்தில் மானிய கட்டணத்தில் ஹெலிகாப்டர் சேவையை வழங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் மெந்தர் செக்டாரிலிருந்து பூஞ்ச் மற்றும் ஜம்மு பகுதிகளை இணைக்க மானிய கட்டணத்தில் ஹெலிகாப்ட்டர் சேவையினை வழங்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், விமான இயக்குநர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறி்த்த ஆய்வை மேற்கொண்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக … Read more

கேரளாவில் அரையாண்டு தேர்வு வினாத்தாள் கசிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்த வியாழக்கிழமை பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வும் பிளஸ் 1 கணிதத் தேர்வும் நடைபெற்றன. இந்த இரு தேர்வுகளின் வினாத்தாள்களும் கடந்த புதன்கிழமை வாட்ஸ்அப், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சில தனியார் டியூசன் மையங்கள் தங்களிடம் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வினாத்தாளை முன்கூட்டியே வினாத்தாள்களை வழங்கியிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது … Read more

உத்தரபிரதேச ரயில்வே அதிகாரியிடம் சைபர் கிரைம் கும்பல் ரூ.57 லட்சம் மோசடி

நொய்டா: உத்தரபிரதேசத்தில் பங்குச்சந்தையில் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசையை தூண்டி ரயில்வே அதிகாரி ஒருவரிடம் சுமார் ரூ.57 லட்சம் மோசடி செய்துள்ளனர். உ.பி.யின் கவுதம புத்தர் நகர் மாவட்டத்தை சேர்ந்த ரயில்வே அதிகாரி அனில் ரைனா. இவர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் பெரும் லாபம் ஈட்ட வாய்ப்புள்ளதாக எனக்கு செல்போனில் தகவல் வந்தது. அதன்படி தொடர்புகொண்டு நான் முதலீடு … Read more

டிஎம்சியின் பாபர் மசூதி vs பாஜகவின் ராமர் கோயில் – மே.வங்கத்துக்கு மாறுகிறதா அயோத்தி அரசியல்?

புதுடெல்லி: முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி கட்டவிருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் அறிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலடியாக பெர்ஹாம்பூரில் ராமர் கோயில் கட்டுவதாக பாஜக அறிவித்துள்ளது. இதனால், உ.பி.யில் முடிவுக்கு வந்த அயோத்தி அரசியல், மேற்குவங்க மாநிலத்துக்கு மாறுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்எல்ஏ, கடந்த வாரம் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில் அவர் முஸ்லிம்கள் அதிகம் வாழும் முர்ஷிதாபாத் மாவட்ட பெல்தங்காவில், பாபர் மசூதி கட்டப்படும் எனக் … Read more