சென்னையில் எரிபொருள் பேட்டரி தானியங்கி உற்பத்தி மையம்: நிதின் கட்கரி தகவல்

புதுடெல்லி: சென்னையில் உள்ள ஏஆர்சிஐ மையம் இருபது கிலோ வாட் திறன் கொண்ட எரிபொருள் பேட்டரிகளை தயாரிப்பதற்கான ஒருங்கிணைந்த தானியங்கி உற்பத்தி மையத்தை அமைத்துள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள அவர் கூறியதாவது: நாட்டில் வாகன எரிபொருளாக ஹைட்ரஜனை பயன்படுத்துவதற்கான அரசாணையை 16 செப்டம்பர் 2016-லேயே மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையின் நான்காவது இணைப்பில் சிஎன்ஜியுடன் 18% … Read more

2 வாரங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த தடை – மாநில அரசு அதிரடி உத்தரவு!

கர்நாடக மாநிலம் பெங்களூரில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள கல்லூரிகளுக்கு, ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மாணவர்கள் காவித் துண்டு போன்ற உடைகளை அணிந்து வந்தனர். இதனால், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரிக்குள் வர விடாமல் கல்லூரி நிர்வாகம் … Read more

பெண் ஒருவர் ஏடிஎம் மிஷினிலேயே விட்டுச் சென்ற பத்தாயிரம் ரூபாய் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த மனிதநேயமிக்க இளைஞர்.. .. <!– பெண் ஒருவர் ஏடிஎம் மிஷினிலேயே விட்டுச் சென்ற பத்தாயிரம் ர… –>

புதுச்சேரியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்ற நபர், வேறொரு பெண் ஒருவர் மிஷினிலேயே தெரியாமல் விட்டுச் சென்ற பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். முருங்கப்பக்கம் கிராமத்தில் உள்ள காமராஜர் வீதியை சேர்ந்த சாந்தி என்ற அந்த பெண் அப்பகுதியில் இருந்த ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கச் சென்ற நிலையில், ரகசிய எண்ணை கொடுத்த பிறகும் பணம் வராததால், வங்கியில் தகவல் தெரிவித்துவிட்டு வீட்டுக்கு சென்றிருக்கிறார். சிறிது நேரம் கழித்து ஏ.டி.எம்.மில் இருந்து பணம் வெளியே … Read more

நிலையான அரசுக்கும், நிலையற்ற கட்சிக்கும் இடையே போட்டி – கோவா தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு

பனாஜி: கோவா சட்ட சபைக்கு வரும் 14ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.இதையொட்டி அங்கு உச்சகட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.  வடக்கு கோவாவில் உள்ள பிச்சோலிம் தொகுதியில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கோவாவில் நிலையான பா.ஜ.க. அரசாங்கத்திற்கும், நிலையற்ற காங்கிரஸுக்கும் இடையிலான தேர்தல் இது.  என்னைப் பொறுத்தவரை, கோவா மக்களுக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன. … Read more

ஹீரோவுடன் நெருக்கமான காட்சி கணவர் ஒப்புதல் தந்தாரா? தீபிகா ஆவேசம்

மும்பை: ஹீரோவுடன் நெருக்கமான காட்சியில் நடிக்க கணவர் ரன்வீர் சிங் ஒப்புதல் தந்தாரா என்ற மீடியாவின் கேள்வியால் கோபம் அடைந்தார் தீபிகா படுகோன். தீபிகா படுகோன், சித்தாந்த் சதுர்வேதி நடித்துள்ள இந்தி படம் கெஹ்ராய்யான். இந்த படம் நாளை அமேசான் ஓடிடியில் வெளியாகிறது. இதில் சித்தாந்துடன் நெருக்கமான காட்சிகளில் படு கவர்ச்சியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். இதுவரை அவர் எந்த படத்தில் இப்படி நடித்ததில்லை. இதுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம் கேட்கப்பட்டது. இதுபோன்ற காட்சியில் நடிக்க கணவர் … Read more

கேரளாவில் காதலர் தினத்தன்று கரம்கோக்கும் திருநர் – திருநங்கை இணை – திருமணப் பதிவில் இது ஸ்பெஷல்!

கேரளாவில் எல்ஜிபிடிக்யூ+ சமூகத்தைச் சேர்ந்த சியாமா – மனு இணை, காதலர் தினத்தன்று திருநர் – திருநங்கை அடையாளங்களுடன் தங்கள் திருமணத்தை பதிவுச் செய்யவுள்ளனர். எல்ஜிபிடிக்யூ+ மீதான பொதுப் பார்வை சமீப ஆண்டுகளாகவே மாறியுள்ளது. குறிப்பாக இதுகுறித்த விவாதம் தொடர்ந்து பேசுபொருளாக மாறி வருவதால், இதனால் உருவான நேர்மறை விளைவுகள் சமூகம், சட்டம், குடும்ப ரீதியாகவும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில்தான் கேரளாவில் திருநர் மனு, திருநங்கை சியாமா இடையே காதலர் தினத்தன்று நடக்கும் திருமணம் கவனம் … Read more

விவசாயத்திற்கு தனி பட்ஜெட்? மத்திய அரசு தகவல்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக, ரயில்வே பட்ஜெட், மத்திய என தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒருங்கிணைந்த பட்ஜெட்டாக மத்திய அரசு தாக்கல் செய்து வருகிறது. அதேசமயம், இந்தியாவில் பிரதான தொழிலாக இருக்கும் விவசாயத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தனி பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் மூலம், விவசாயத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும், விவசாயத்துறை வளர்ச்சி விரைவு பெறும் என்பதாலும் … Read more

பிரதமரின் பேச்சைக் கண்டித்து போராட்டம்.. டிஆர்எஸ், பாஜக தொண்டர்கள் ஒருவரையொருவர் தாக்கியதால் பரபரப்பு <!– பிரதமரின் பேச்சைக் கண்டித்து போராட்டம்.. டிஆர்எஸ், பாஜக த… –>

தெலங்கானா மாநிலம் ஜன்கானில் தெலங்கானா ராஷ்டிர சமிதிக் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். ஆந்திர மாநிலப் பிரிவினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதைக் கண்டித்துத் தெலங்கானா ராஷ்டிர சமிதிக் கட்சியினர் கருப்புக்கொடி காட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவினர் அங்குத் திரண்டு வந்ததால் மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.  Source link

என்ஜின் கவர் இன்றி பறந்த விமானம் – விசாரணைக்கு உத்தரவு

மும்பை: மும்பை விமான நிலையத்திலிருந்து இன்று காலை அலையன்ஸ் ஏர் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. 4 ஆண்டு பழமையான இந்த விமானத்தில் சுமார் 70 பயணிகள் இருந்தனர். விமானம் பாதுகாப்பாக புஜ் நகரில் தரையிறங்கியது. மும்பை விமான நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு விமானம் புறப்பட்டபோது, என்ஜின் கவர் ஓடுபாதையில் விழுந்தது. விமானம் புறப்பட்ட பிறகு ஓடுபாதையில் இருந்து அந்த கவர் கண்டெடுக்கப்பட்டது என மும்பை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும், என்ஜின் … Read more

ஹிஜாப் அணிய அனுமதி கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்: இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

பெங்களூரு: சிறுபான்மை வகுப்பு மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி வழங்ககோரி தாக்கல் செய்துள்ள வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்ஷித் மாற்றி உத்தரவிட்டார். இஸ்லாமிய மாணவிகள் தாக்கல் செய்த மனு மீதான வழக்கில் இடைக்கால தடை விதிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சிறுபான்மை வகுப்பு மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு தடை விதித்து கடந்த 5ம் தேதி கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உடுப்பி அரசு முதல்நிலை கல்லூரி மாணவிகள் … Read more