இவை நல்லதல்ல… மாணவர் சமூகம் அமைதிகாக்க வேண்டும்: ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் அறிவுரை

பெங்களூரு: ஹிஜாப் விவகாரத்தில் மாணவர் சமூகம் அமைதி காக்குமாறு கர்நாடக உயர் நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், இது தொடர்பான வழக்கை நாளைக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை … Read more

பனிச்சரிவில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.. இந்திய ராணுவம் அறிவிப்பு!

பிப்ரவரி 6ஆம் தேதியன்று அருணாசலப் பிரதேச மாநிலம் காமெங் பகுதியில் உள்ள உயரமான பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஏழு ராணுவ வீரர்கள் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர்கள் ஏழு பேரும் உயிரிழந்துவிட்டதாக இந்திய ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து ஏழு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர், பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்ளிட்ட பலரும் இரங்கல் … Read more

கான்ஸ்டபிள் தகுதி தேர்வில் முறைகேடு : உடல் எடையை அதிகமாக காட்ட அடுக்கடுக்காக ஆடை அணிந்து வந்த பெண் <!– கான்ஸ்டபிள் தகுதி தேர்வில் முறைகேடு : உடல் எடையை அதிகமாக… –>

புதுச்சேரி காவல் துறையின் பெண் கான்ஸ்டபிள் பணியிடத்திற்கான உடல் தகுதி தேர்வில், உடல் எடையை அதிகமாக காட்ட அடுக்கடுக்காக 4 பேண்ட் அணிந்து வந்து எடையை அதிகரிக்க முறைகேட்டில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் தகுதி நீக்கம் செய்து எச்சரித்து அனுப்பினர். உடற்தகுதி தேர்வில் பங்கேற்ற ஒரு பெண் உடல் மெலிந்து இருந்தார். ஆனால், காவலர் உடல் தகுதிக்கு தேவையான 45 கிலோ எடை இருந்தார். போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பணியில் இருந்து பெண் … Read more

பால் பண்ணைத் தொழிலை ஊக்குவிக்க வட்டி மானியத்துடன் கடனுதவி – மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: பாராளுமன்ற மக்களவையில்,  உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய மீன்வளம், கால்நடைப்  பராமரிப்பு மற்றும்பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது: பால் பதப்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மாநில கூட்டுறவு மற்றும் கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்கள், பால் பண்ணைகள், சுயஉதவி குழுக்கள், விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு வட்டி மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.  தேசிய பால் பண்ணை மேம்பாட்டுத் … Read more

நீர்நிலைகளை நிர்மூலமாக்கும் ஆகாய தாமரையில் புடவை தயாரிப்பு: ஜார்கண்டில் புதிய முயற்சி

ஜம்ஷெட்பூர்:  ஜார்கண்ட் மாநிலத்தில் ஆகாய தாமரை செடிகள் தற்போது புடவைகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. ஆகாய தாமரை  ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் படர்ந்து வளரும் தாவரமாகும். இந்த செடிகள் நீரை ஆவியாக்கும் தன்மை கொண்்டவை. தண்ணீரில் மிதக்கும் இந்த தாவரத்தின் வேர்கள் தண்ணீரில் படர்ந்து வளர்வதன் மூலமாக தொடர்ந்து நீர் நிலைகளில் முழுவதுமாக பரவி விடுகின்றது. மிக கனமான, பசுமையான இலைகளை கொண்ட ஆகாய தாமரையின் பூக்கள் ஊதா நிறத்தில் இருக்கும். இந்த செடிகள் தண்ணீரை எளிதில் … Read more

ஸ்டார்ட் அப் உலகில் மூன்றாவது இடத்தில் இந்தியா: மாநிலங்களவையில் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் நிகழ்த்திய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு மாநிலங்களவையில் இன்று பிரதமர் மோடி, பதில் அளித்து பேசினார். பிரதமர் மோடி தனது உரையில், “சுதந்திரத்தின் 100 ஆண்டுகளைக் கொண்டாடும் போது அதனை எங்கே, கொண்டு செல்லவிருக்கிறோம், எப்படிக் கொண்டு செல்லவிருக்கிறோம் என்பதை சிந்திப்பதற்கு இது மிகவும் முக்கியமான நேரம். இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு கூட்டான பங்களிப்பும், கூட்டான உரிமை ஏற்பும் அவசியம். உலகம் இன்னமும் கரோனா பெருந்தொற்றுடன் போராடி வருகிறது. கடந்த 100 … Read more

3 கேஸ் சிலிண்டர் இலவசம்.. பென்சன் உயர்வு.. பாஜக தேர்தல் அறிக்கை என்ன சொல்கிறது?

கோவா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி இன்று பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் கோவாவின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் குறித்து வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. கோவா மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இன்று பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியுடன் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், கோவா பாஜக தலைவர் சதானந்த், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் … Read more

பெண் காவலர்களுக்கான சீருடைக்கு ஆண்களே அளவெடுத்ததால் சர்ச்சை <!– பெண் காவலர்களுக்கான சீருடைக்கு ஆண்களே அளவெடுத்ததால் சர்ச்சை –>

ஆந்திர மாநிலத்தில் பெண் காவலர்களுக்கான சீருடைக்கு ஆண்களே அளவெடுத்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. நெல்லூர் மாவட்டத்தில் சீருடை தைப்பதற்கு பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெண் காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கு சீருடை அளவெடுக்கும் பணியில் ஆண்கள் இருந்ததால் பெண் காவலர்கள் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பொறுப்பிலிருந்த தலைமைக்காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Source link

உ.பி தேர்தல் பிரசாரம்: சமாஜ்வாடி கட்சி தலைவர் ஆசம் கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

உத்தரப் பிரதேசம் மாநிலம் சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனால் வெற்றிப்பெறும் நோக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசம் … Read more

ஹிஜாப் விவகாரத்தில் மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

டெல்லி: ஹிஜாப் விவகாரத்தில் மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.  திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.