கொரோனா தொற்றுக்கு பிறகு சர்வதேச அளவில் தலைமை பொறுப்பை இந்தியா முன்னெடுக்கும் சூழல் உருவாகி உள்ளது – பிரதமர் <!– கொரோனா தொற்றுக்கு பிறகு சர்வதேச அளவில் தலைமை பொறுப்பை இந்… –>

கொரோனா தொற்றுக்கு பிறகு உலக நாடுகளின் எண்ணிங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, சர்வதேச அளவில் தலைமை பொறுப்பை இந்தியா முன்னெடுக்கும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து நாடாளுமன்றத்தின் மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு இரங்கல் தெரிவித்து பேசிய அவர், இசையால் அவர் தேசத்தை ஒருங்கிணைத்ததாக புகழாரம் சூட்டினார். இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் ஏழைகளுக்கு … Read more

ஜம்மு காஷ்மீர் – பாதுகாப்பு படையுடனான துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் ராணுவம், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதி திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார்.    இதற்கு பாதுகாப்புப் படையினர் கொடுத்த பதிலடி தாக்குதலில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார் என காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர். இதையும் படியுங்கள்…வீரர்கள் சவால் விடும் வகையில் விளையாட வேண்டும் – ரோகித் சர்மா

கடந்த 50 வருடங்களில் இப்படிப்பட்ட வளர்ச்சியை யாரும் கண்டது இல்லை; ஏழைகளை லட்சாதிபதியாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.! பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: 2014-2020ல் பணவீக்க விகிதம் 5%க்கும் குறைவாக உள்ளது என மக்களவையில் பிரதமர் மோடி பேசியுள்ளார். எதிர்க்கட்சிகள் பணவீக்கப் பிரச்சினையை இங்கு எழுப்பியுள்ளன, அவர்கள் அரசாங்கம் ஆட்சியில் இருக்கும்போதே இந்த விஷயத்தை எழுப்பினால் நன்றாக இருந்து இருக்கும். கொரோன தொற்று காலத்திலும் எங்கள் அரசாங்கம் பணவீக்கத்தை சமாளிக்க முயற்சிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 31 ஆம் தேதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி … Read more

ஹிஜாப் விவகாரம் | கர்நாடகாவில் காவித் துண்டுக்கு எதிராக நீலத் துண்டுடன் கோஷம் எழுப்பிய மாணவர்கள்

பெங்களூரு: கர்நாடகாவில் காவித் துண்டு அணிந்து வந்த மாணவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தலித் மாணவர்கள் நீல நிறத் துண்டை அணிந்து ‘ஜெய் பீம்’ கோஷம் எழுப்பினர். கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை … Read more

'ஆட்சி போனாலும் காங்கிரசின் ஆணவம் குறையவில்லை!' – பிரதமர் மோடி ஆவேசம்!

பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி பறிபோனாலும் அக்கட்சியின் ஆணவம் மட்டும் குறையவில்லை என, நாடாளுமன்றத்தில், பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்து உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் , கடந்த 31 ஆம் தேதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2022 – 23 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில் … Read more

லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல்.. ஒரு மணி நேரம் ஒத்திவைப்பு <!– லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும… –>

லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. இன்று காலை மாநிலங்களவை கூடியதும் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் குறிப்பை அவைத் தலைவர் வெங்கைய நாயுடு வாசித்தார். அப்போது, உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று லதா மங்கேஷ்கருக்கு மவுன அஞ்சலி செலுத்தியதை அடுத்து, ஒரு மணி நேரத்துக்கு அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், மாலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு … Read more

பல தேர்தல்களில் தோற்றாலும் காங்கிரஸ் கட்சி அகங்காரத்தை கைவிடவில்லை – பிரதமர் மோடி தாக்கு

புதுடெல்லி: மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதிலுரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனாவுக்கு பிறகு இந்தியா முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஏழைகளை லட்சாதிபதியாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏழைகளுக்கும் வங்கி கணக்கு வசதி கிடைக்கப் பெற்றுள்ளது. இன்று ஏழ்மையிலும் நேர்மையாக இருப்பவர்களுக்கு எரிவாயு சிலிண்டர் வசதி கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 1967ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை. தெலுங்கானா … Read more

தமிழகம்-கர்நாடகா இடையே சுமுக முடிவு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது திட்டத்திற்கு அனுமதி; ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: தமிழகம்-கர்நாடகா இடையே சுமுக முடிவு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது திட்டத்திற்கு அனுமதி என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கர்நாடக எம்.பி. எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அஷ்வினிகுமார் மக்களவையில் பதில் அளித்துள்ளார்.

ஓவைசி ஜி… 'இசட்' பிரிவு பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் – மாநிலங்களவையில் அமித் ஷா வலியுறுத்தல்

புதுடெல்லி: ஹைதராபாத் மக்களவை எம்.பி அசாதுதீன் ஒவைசியை மத்திய அரசின் ‘இசட்’ பிரிவு பாதுகாப்புச் சலுகையை ஏற்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் கடந்த வாரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு காரில் டெல்லி திரும்பிக் கொண்டிருந்த ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் கார் மீது 2 பேர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கார் சேதமடைந்தது. வேறொரு காரில் ஏறி ஒவைசி டெல்லி சென்றார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணையையும் … Read more

மனைவிமார்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு.. கணவர்களுக்கு சீட் கொடுத்த பாஜக.. !

உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் 2 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு சீட் கொடுக்க மறுத்த பாஜக தலைமை அவர்களுக்குப் பதில் அவர்களது கணவர்களுக்கு டிக்கெட் கொடுத்துள்ளது. நேற்று மாலை பாஜகவின் 9வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் முக்கிய வேட்பாளராக உ.பி. பாஜக மாநிலத் துணைத் தலைவர் தயா சங்கர் சிங் இடம் பெற்றுள்ளார். இவரை பல்லியா தொகுதியில் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. தயா சங்கர் சிங்கின் மனைவியான ஸ்வாதி சிங் கேபினட் அமைச்சராகவும் இருக்கிறார். அவர் … Read more