அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு – காங்கிரஸ் பிரதிநிதியாக வீரப்ப மொய்லி நியமனம்

புதுடெல்லி: தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 26-ம் தேதி, குடியரசு நாளன்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுத்து, பிற்படுத்தப்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு தொடங்கப்படும் என அறிவித்தார். இந்திய தேசிய காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு, தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிஜூ ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ், … Read more

புதுச்சேரியில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கொரோனா பரிசோதனை சாதனங்கள் மாயம்: புதுச்சேரி தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர் ரகுபதி மனு

புதுச்சேரி: புதுச்சேரியில் தேர்தல் நேரத்தில் வாங்கிய ரூ.30 லட்சம் மதிப்புள்ள கொரோனா பரிசோதனை சாதனங்கள் மாயமாகியுள்ளது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக அமைப்பை சார்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி பெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த விவரத்தை பெற்றுள்ளார். இதுகுறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உரிய விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை … Read more

விளக்கம் தேவையில்லை; மன்னிப்பு கோருங்கள்: ஹூண்டாய் நிறுவனத்துக்கு சிவசேனா எம்.பி. கெடுபிடி

காஷ்மீர் பிரிவினவாதிகளை ஆதரித்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் டீலர் ஒருவர் பதிவிட்ட ட்வீட் வைரலான நிலையில் அது குறித்து ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அளித்துள்ள விளக்கம் போதுமானதாக இல்லை எனக் கூறி மன்னிப்பு கோர வலியுறுத்தியுள்ளார் சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி. முன்னதாக @hyundaiPakistanOfficial என்ற ட்விட்டர் பக்கத்தில், காஷ்மீரின் விடுதலைக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்கிறோம் என்று பதியப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்தியளவில் #BoycottHyundai ட்ரெண்டானது. இந்திய அளவில் ஹூண்டாய் தயாரிப்புகளுக்கு … Read more

ஹிஜாப் சர்ச்சை: மதச்சார்பின்மை எனும் பாசாங்கு!

ஒரு மாதத்துக்கு முன்பு கர்நாடகாவில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் புர்கா அணிந்து வந்த ஆறு இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. இது சர்ச்சையைத் தோற்றுவிக்க, இந்துத்துவக் குழுக்கள் இஸ்லாமிய மாணவர்கள் தம் மதச்சின்னங்களை அணிந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரச்சாரம் செய்தனர். அடுத்து ஹிஜாப்பைக் கண்டிக்கும் நோக்கில் சில பள்ளி மாணவர்கள் காவித்துண்டுடன் பள்ளிக்கு வந்து பிரச்சினை கிளப்பினர். இரு நாட்களுக்கு முன்பு குந்தாபூரில் உள்ள பந்தர்கர்ஸ் கலை இலக்கிய கல்லூரியில் … Read more

சீருடை அரசாணையை மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் – கர்நாடக முதலமைச்சர் <!– சீருடை அரசாணையை மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் – கர… –>

சீருடை குறித்த அரசின் உத்தரவைப் பள்ளிகள், கல்லூரிகள், மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனக் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.  கர்நாடகத்தில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவியரை அனுமதிக்கப் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் மறுத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் கருத்தைச் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது, தனி மனித உரிமைகள், நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலேயே சீருடை குறித்த அரசின் உத்தரவு … Read more

சன்னியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது நாட்டுக்கே நல்ல சேதி – மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் இம்மாதம் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சி களமிறங்கியுள்ளது. சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய முன்னாள் முதல் மந்திரி அமரீந்தர் சிங், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறார். காங்கிரசுக்கு இந்தக் கூட்டணி கடும் சவாலை அளிக்கும் எனத் தெரிகிறது.   நவ்ஜோத் சிங் சித்து … Read more

பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு!: விசாரணையை தொடங்கியது 5 பேர் கொண்ட விசாரணைக்குழு..!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அமைத்த 5 பேர் கொண்ட குழு விசாரணையை தொடங்கியுள்ளது. கடந்த மாதம் 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்றிருந்தார். மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்துவிட்டு சாலை மார்க்கமாக சென்ற பிரதமரின் வாகனம் போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்டது. இதனால் பயணம் ரத்து செய்யப்பட்டது. பிரதமரின் வருகை, திட்டம் … Read more

தேரா சச்சா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு 21 நாள் பரோல்: பஞ்சாப் தேர்தலில் ஆதாயம் தேடும் நடவடிக்கையா?

சண்டிகர்: கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் கைதியாக ஹரியாணா சுனாரியா சிறையில் உள்ள தேரா சச்சா தலைவர் ராம் ரஹீம் சிங்குக்கு 21 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, பஞ்சாப் தேர்தலை ஒட்டிய நகர்வாக இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஹரியாணா மாநிலத்தில் தேரா சச்சா சவுதா சிர்ஸா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவராக குர்மீத் ராம் ரஹீம் சிங் உள்ளார். இந்த அமைப்பின் மேலாளர் ரஞ்சித் சிங், 2002 ஜூலை … Read more

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து செல்ல கல்லூரி மாணவிகளுக்கு அனுமதி!

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அத்துடன், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர். மாணவிகளின் தாக்கல் செய்த மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. … Read more

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு சாதனங்கள் வாங்கியதில் 30 லட்ச ரூபாய் வரை முறைகேடு புகார் <!– புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு சாதனங்கள் வாங்கி… –>

புதுச்சேரியில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலின் போது கொள்முதல் செய்யப்பட்ட கொரோனா பாதுகாப்பு சாதனங்களில் 30 லட்ச ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக துணை நிலை ஆளுநரிடம் மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். சட்டப்பேரைவை தேர்தலுக்காக வாங்கிய கொரோனா பாதுகாப்பு சாதனங்களில் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் தெர்மா மீட்டர், பாதுகாப்பு கவசம், நான்கு சக்கர நாற்காலிகள் குறித்து கணக்குகள் இல்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்ததாகவும், … Read more