பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு; நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும்.! ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவையடுத்து நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இரு நாட்களுக்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் (92) சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்பட பலரும் இரங்கல் … Read more

ஒருமித்த கருத்து ஏற்பட்டால் சமூக வலைதளங்கள் மீது கூடுதல் கட்டுப்பாடுகள்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

ஒருமித்த கருத்து ஏற்பட்டால் சமூக வலைதளங்கள் மீது கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டுவர அரசு தயார் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று முன்தினம் மாநிலங்களவையில் தெரிவித்தார். கடந்த ஆண்டு சமூக வலைதளங்கள் மீது மத்திய அரசுபுதிய கட்டுப்பாடுகளை விதித்தது. கருத்து சுதந்திரத்தைபறிக்கவே மத்திய அரசு சமூகவலைதளங்கள் மீது கட்டுப்பாடுகளை கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இதுகுறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் கூறும்போது, ‘‘சமூகவலைதளங்களை … Read more

நாளை முதல் கல்லூரிகள் திறப்பு: மாநில அரசு முடிவு!

கொரோனா பரவல் இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு அதிகரிக்கத் தொடங்கிய போது, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதையடுத்து, தொற்று குறைந்து கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டதும், இரண்டாம் அலை படு வேகமாக பரவியது. குறிப்பாக, வட மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடியது. இதனால், பள்ளி, கல்லூரிகளை அனைத்து மாநிலங்களும் மூடின. அதன் தொடர்ச்சியாக, மீண்டும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டதும், தென் … Read more

இந்தியாவில் 1 லட்சத்தை நோக்கி குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு <!– இந்தியாவில் 1 லட்சத்தை நோக்கி குறைந்த ஒருநாள் கொரோனா பாதி… –>

1 லட்சத்தை நோக்கி குறைந்த கொரோனா பாதிப்பு தினசரி கொரோனா மரணங்களும் குறைகிறது நாட்டின் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது கடந்த 24 மணி நேரத்தில், 1.07 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது கடந்த 24 மணி நேரத்தில், 2.13 லட்சம் பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 865 பேர் உயிரிழப்பு – மத்திய சுகாதாரத்துறை Source link

உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது. இதன்மூலம் இந்தியா, ஐந்தாவது முறையாக ஜூனியர் உலக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்திய அணிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்த போட்டியில் இந்திய அணியினர்  அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும், மிக உயர்ந்த நிலையிலான அவர்களின் ஆட்டத்திறன், இந்திய கிரிக்கெட்டின் … Read more

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்

மும்பை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். கொரோனா பாதிக்கப்பட்டு கடந்த 29 நாட்களாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

கேரள இளைஞரின் தள்ளுவண்டி டீக்கடை; வெளிநாடுகளிலும் கிளை திறக்க திட்டம்

கேரளா மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த பைசல் யூசுப் ஆரம்பித்த தள்ளுவண்டி டீக்கடையான ‘தி சாய் வாலா’, விரைவில் வெளிநாட்டிலும் கிளையை திறக்க உள்ளது. பள்ளிப்படிப்பை முடிக்காத பைசல், வேலைக்காக அலைந்துள்ளார். ஒரு வழியாக மும்பையில் ஒரு வேலை கிடைத்தது. அதை பற்றிக்கொண்டு அங்கிருந்து துபாய்க்குச் சென்றார். நாட்கள் ஓடின. நண்பர்கள் உதவியுடன் இங்கிலாந்தில் காஃபி இறக்குமதி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஏழு ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தார். ஆனாலும், தேயிலைமீது அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. விதவிதமான தேயிலைகளை, … Read more

முதல்வரின் முன்னாள் செயலருக்கு அனைத்தும் தெரியும்: ஸ்வப்னா சுரேஷ் அதிரடி!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தப்படுவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தூதரக முகவரிக்கு செல்வதாக இருந்த ரூ.13.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ கடத்தல் தங்கம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த புகாரில் கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் , சந்தீப் நாயர், … Read more

ராகுல் காந்திக்கு வரலாறு தெரியாதா?- ராஜ்நாத் சிங் கேள்வி

மதுரா: உத்தரபிரதேச மாநிலம், மதுராவில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நிருபர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவரிடம் சீன, பாகிஸ்தான் உறவு பற்றி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ள கருத்து குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராஜ்நாத் சிங் பதில் அளிக்கையில் கூறியதாவது:- முன்னாள் பிரதமர் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆட்சியின்போது 2 பெரிய ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளன. ராகுல் காந்திக்கு வரலாறு தெரியாதா? சீனாவுக்கு பாகிஸ்தான் ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கை விட்டுக்கொடுத்தபோது நேருதான் … Read more

கொரோனா விதிகளை கடைபிடித்து நேரடி விசாரணை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா 3ம் அலை அதிகரிக்க தொடங்கியபோது, தலைநகர் டெல்லியிலும் தினசரி பாதிப்புகள் அதிகளவில் பதிவானது. இதனால், கடந்த ஜனவரி 3ம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணைகள் நிறுத்தப்பட்டு, காணொலி மூலமாக விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்குள் நாள் குறைந்து வருகிறது. இதனால், உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை நேரடியாக விசாரிக்க வேண்டும் என, தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம் … Read more