மும்பையில் 3 சதவீத விவாகரத்துக்கு போக்குவரத்து நெரிசலே காரணம்-தேவேந்திர பட்னாவிஸின் மனைவி குற்றச்சாட்டு <!– மும்பையில் 3 சதவீத விவாகரத்துக்கு போக்குவரத்து நெரிசலே கா… –>

மும்பையில் நடக்கும் 3 சதவீத விவாகரத்துக்கு மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதே காரணம் என முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸின் (Devendra Fadnavis) மனைவி குற்றம்சாட்டியுள்ளார். குண்டும் குழியுமான சாலைகளில் பயணிப்பதால் பெரும் அவதிக்கு ஆளாவதாகத் தெரிவித்த அம்ருதா ஃபட்னாவில் (Amruta Fadnavis), போக்குவரத்து நெரிசலில் சிக்கி குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாததே 3 சதவீத விவாகரத்துக்கு காரணம் என்றார். இதற்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்த சிவ சேனா துணைத் தலைவர் பிரியங்கா சதுர்வேதி ((Priyanka … Read more

ராமானுஜரின் 216 அடி உயர சிலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலை ஹைதராபாத் முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.  பிரதமர் மோடி இன்று மாலை சிலையை திறந்து வைத்து நாட்டுடமையாக்குகிறார். வேத மின்னணு நூலகம், ஆராய்ச்சி மையம்,  ஸ்ரீ ராமானுஜரின் பல படைப்புகளை விவரிக்கும்  கல்விக்கூடம் ஆகியவையும் இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீ ராமானுஜாச்சார்யா ஆசிரமத்தைச் சேர்ந்த ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமிகளால் பஞ்சலோகத்தில் இந்த … Read more

பாஜகவுக்கு தாவிய மணிப்பூரி நடிகர்: மணிப்பூர் தேர்தலில் பரபரப்பு

இம்பால்: மணிப்பூரைச் சேர்ந்த நடிகர் சோமேந்திர சிங் என்பவர், தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். மணிப்பூரில் வரும் 27 மற்றும் மார்ச் 3ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆளும் பாஜக கட்சியில், ‘கைகூ’ என்று அழைக்கப்படும் மணிப்பூரி திரைப்படத்தில் நடித்த நடிகர்  ஆர்.கே.சோமேந்திர சிங் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த சிலர் நேற்று அம்மாநில முதல்வர் பிரேன் சிங் முன்னிலையில் பாஜகவில இணைந்தனர். அப்போது மணிப்பூர் பாஜக பொறுப்பாளர் சம்பித் பத்ரா, மாநில … Read more

ஹைதராபாத்தில் பிரமாண்ட ராமானுஜர் சிலை திறப்பு: பிரதமர் மோடி பங்கேற்பு

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் சிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஹைதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில், வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இடத்தில் பத்ம பீடத்தின் மீது 216 அடிஉயரத்தில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை இன்று திறந்து வைக்கப்பட உள்ளது. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். ரூ.1,000 … Read more

'இந்தியாவில் இன்று பிரதமர் இல்லை!' – மோடியை டேமேஜ் செய்த ராகுல்!

இந்தியாவில் இன்று பிரதமர் இல்லை என்றும், மக்கள் பேச்சை கேட்காத ராஜா தான் இருக்கிறார் என்றும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, வரும் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அந்த மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் களை … Read more

பனிப்பொழிவை ரசிக்க ஹிமாச்சலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் <!– பனிப்பொழிவை ரசிக்க ஹிமாச்சலுக்கு படையெடுக்கும் சுற்றுலா ப… –>

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் பனிப்பொழிவின் தீவிரம் அதிகரித்து வருவதற்கு மத்தியிலும் பனிப்பொழிவை ரசிக்க சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் அங்கு படையெடுத்து வருகின்றனர். ஷிம்லாவில் இன்று வெப்பநிலை மிக மிக குறைந்து மைனஸ் 2 புள்ளி 1 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி உள்ளது. அந்நகரில் இந்த ஆண்டில் பதிவாகிய மிகக்குறைந்த பட்ச வெப்பநிலை இதுவாகும். இதே போல, Lahaul-spiti மாவட்டத்தில் உள்ள keylong பகுதியில் வெப்பநிலை மைனஸ் 12 புள்ளி 5 டிகிரி செல்சியஸ் ஆகவும், கின்னார் மாவட்டத்தில் … Read more

இந்தியா முழுவதும் 3-ல் ஒரு பங்கு கடற்கரை கடலரிப்பால் சேதம்- மத்திய மந்திரி தகவல்

புதுடெல்லி: இந்தியா மூன்று புறமும் கடல்களால் சூழப்பட்ட தீபகற்பம். இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபி கடல் என 3 கடல்களும் இந்தியாவின் அரண்களாக உள்ளன. கடலால் சூழப்பட்ட இந்தியாவின் கடற்கரைகள் அனைத்தும் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய பகுதிகளாகும். சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் நகர்புறத்தில் உள்ள 2-வது நீண்ட கடற்கரை என்ற சிறப்பு கொண்டது. இதுபோல கோவா, கேரள மாநிலங்களிலும் பல அழகிய கடற்கரைகள் உள்ளன. இந்த கடற்கரை பகுதிகள் அனைத்திலும் 2004-ம் … Read more

சிங்கத்திற்கு உணவளித்த கவர்ச்சி நடிகையின் ‘கணக்கு’ முடக்கம்: ரசிகர்கள் அதிர்ச்சி

மும்பை: சிங்கத்திற்கு உணவளித்த ஒருசில நாளில் நடிகை நோரா ஃபதேஹியின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலிவுட் கவர்ச்சி நடிகை நோரா ஃபதேஹி, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு கிளுகிளுப்பை ஏற்படுத்துவார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம் அவரது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு பதிலளித்தும் வருவார். இந்நிலையில் நேற்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை அவரது ரசிகர்களால் பார்க்க … Read more

ராமானுஜர் சிலை திறப்பு: பிரதமருக்கு வரவேற்பு; தெலங்கானா முதல்வர் புறக்கணிப்பு

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள ராமானுஜரின் 216 அடி உயர ‘சமத்துவ சிலை’ திறப்பு விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்காமல் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்தார். ஹைதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில், வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இடத்தில் பத்ம பீடத்தின் மீது 216 அடி உயரத்தில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை … Read more

வாரத்தில் 5 நாட்கள் வேலை – அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்ற அறிவிப்புக்கான அரசாணையை, மாநில அரசு பிறப்பித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டின் 73வது குடியரசு தினமான கடந்த மாதம் 26 ஆம் தேதி, சத்தீஸ்கர் மாநில அரசின் கொள்கை முடிவுகளை, முதலமைச்சர் பூபேஷ் பாகேல் அறிவித்தார். அதன்படி, அரசு ஊழியர்களின் செயல் திறன் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் முயற்சியில், மாநில அரசு வாரத்தில் ஐந்து … Read more