தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது!: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்..!!

டெல்லி: தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நியூட்ரினோ திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நியூட்ரினோ திட்ட அமைவிடம், மதிகெட்டான் – பெரியார் புலிகள் இடம்பெயர்வு பாதையில் அமைந்துள்ளதால் காட்டுயிர் வாரிய அனுமதி வழங்க முடியாது என தேனி மாவட்ட வனத்துறை பரிந்துரைத்துள்ளதாக … Read more

”எல்லாத்துக்கும் ’நேரு’தான் காரணமா?; இன்னுமா அவர சொல்லிட்டு இருக்கீங்க?” – மன்மோகன்சிங்

எல்லா பிரச்னைகளுக்கும் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவையே பிரதமர் மோடி தலைமையிலான அரசு குற்றம்சாட்டுவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ”அரசியல் காரணங்களுக்காகவும், பொய்யை மறைத்தும் நாட்டை ஒருபோதும் காங்கிரஸ் பிளவுபடுத்தவில்லை. மக்கள் ஒருபுறம், பணவீக்கம், வேலையிழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். மறுபுறம் நாட்டை ஏழரை ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் … Read more

உ.பி. தேர்தலில் தடம் பதிப்பாரா ஒவைசி: முஸ்லிம் வாக்கு யாருக்கு?

ஹைதராபாத் எம்.பி.யும், ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசி பல்வேறு மாநிலங்களில் கட்சியை விரிவுப்படுத்தி வருகிறார். ஒரு சில மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்கேற்பதன் மூலம் தனது கட்சியின் கால்தடத்தை நாடுதழுவிய அளவில் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கையில் ஒவைசி தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறார். 2019 ஆம் ஆண்டில் அவரது கட்சி ஹைதராபாத்திற்கு வெளியே முதல் முறையாக ஒரு மக்களவைத் தொகுதில் வென்றது. அக்கட்சியின் வேட்பாளர் அவுரங்காபாத்தில் சிவசேனா வேட்பாளரை தோற்கடித்தார். ஒவைசி கட்சிக்கு … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்: ஐந்து ஆண்டுகளுக்கு இலவச பொருட்கள்!

உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்துக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அம்மாநிலத்தில், பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளிடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன. இந்த நிலையில், ரேபரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் … Read more

உக்ரைன் – இந்தியா விமானங்கள் கட்டுப்பாடு நீக்கம் <!– உக்ரைன் – இந்தியா விமானங்கள் கட்டுப்பாடு நீக்கம் –>

இந்தியா – உக்ரைன் இடையே இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை, இருக்கைகள் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு இருந்த கட்டுப்பாடுகளை விமானப் போக்குவரத்து அமைச்சகம் நீக்கியுள்ளது. கொரோனா சூழலில் நாடுகளிடையே ஒரு நாளில் இயக்கும் விமானங்கள் எண்ணிக்கை, இருக்கைகள் எண்ணிக்கை ஆகியன குறித்துத் தற்காலிக உடன்பாடுகள் செய்துகொள்ளப்பட்டன. உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் படையெடுக்கக் கூடும் எனக் கருதப்படுவதால், அங்குள்ள இந்தியர்கள் நாடு திரும்புவதற்காக வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் ஒருபகுதியாக உக்ரைன் – இந்தியா இடையே விமானங்கள் … Read more

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: வீடுகள் முன்பு பொங்கலிட்ட பெண்கள்

திருவனந்தபுரத்தில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு மாசிமாதம் பொங்கல் விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா இன்று நடந்தது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக பொது இடத்தில் பொங்கலிட கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. எனவே பெண்கள் அனைவரும் வீடுகளிலேயே பொங்கலிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதன்படி இன்று காலை 10.50 மணிக்கு கோவிலில் உள்ள பண்டார அடுப்பில் தந்திரி தீ மூட்டி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். … Read more

விமான கட்டணம் 3மடங்கு உயர்வு: உக்ரைனில் இருந்து தாயகம் திரும்ப இந்திய மாணவர்கள் ஆர்வம்

புதுடெல்லி: போர் பதற்றம் காரணமாக உக்ரைனில் உள்ள இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் உக்ரைனில் இருந்து இந்தியா வருவதற்கான விமான கட்டணம் 3 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 20,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உக்ரைனில் தங்கி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை படித்து வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைன்-ரஷ்யா இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளதால்  பெரும்பாலான மாணவர்கள் இந்தியா திரும்ப முனைப்பு காட்டி வருகின்றனர். ஆனால் இந்தியா திரும்புவதற்கான விமான … Read more

ரத்தத்தை உறைய வைக்கும் பனியில் உன்னத பணி – வைரலாகும் வீடியோ

இந்தோ-திபெத் எல்லைப் பகுதியில் உறைய வைக்கும் பனிப்பொழிவுக்கு இடையே எல்லை பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபடும் காட்சி வெளியாகியுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 15 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலைப்பகுதியில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. பூஜ்ஜியம் டிகிரி செல்ஷியசிற்கும் கீழ் வெப்பநிலை நிலவும் நிலையில், அதற்கு மத்தியிலும் எல்லை பாதுகாப்புப் படையினர், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரத்தத்தை உறைய வைக்கும் பனியில், பாதுகாப்புப் படையினர் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு வருவதை பாராட்டி, … Read more

உக்ரைனுக்கு எத்தனை விமானங்கள் வேண்டுமானாலும் இயக்கலாம்: ஏர் பபுள் கெடுபிடியை தளர்த்தியது மத்திய அரசு

புதுடெல்லி: ’போர் பதற்றத்தில் உள்ள உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்டுக் கொண்டு வர ஏதுவாக உக்ரைனுக்கு எத்தனை விமானங்கள் வேண்டுமானாலும் இயக்கிக் கொள்ளலாம்’ என்று ஏர் பபுள் கெடுபிடிகளைத் தளர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. எந்த நேரமும் ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என்ற போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்கள், குறிப்பாக இந்திய மாணவர்கள் வெளியேறலாம் என்று மத்திய அரசு அண்மையில் அறிவுறுத்தியது. ரஷ்யா, உக்ரைன் சர்ச்சை வலுத்து வரும் நிலையில் … Read more

மோடி அரசு தோற்றுப் போய் விட்டது.. மன்மோகன் சிங் கடும் தாக்கு

விவசாயிகள் பிரச்சினை, வெளியுறவுக்கொள்கை என எல்லா முனைகளிலும் மத்திய பாஜக அரசு தோற்றுப் போய் விட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இந்தியாவில் புதிய மறுமலர்ச்சியைக் கொண்டு வந்த முக்கியமான வெகு சில பிரதமர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவர். இவரது காலத்தில்தான் இந்தியாவில் தொழில் வளர்ச்சி அதிகரித்தது, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் வேகம் பெற்றன. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார் மன்மோகன் சிங். இதுகுறித்து … Read more