உக்ரைனில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்துவர எத்தனை விமானங்களை வேண்டுமானாலும் இயக்கலாம்!: ஒன்றிய அரசு அனுமதி

டெல்லி: உக்ரைனில் இருந்து எவ்வளவு விமானங்களை வேண்டுமானாலும் இந்தியாவுக்கு இயக்கலாம் என்று விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையே எந்த நேரத்திலும் போர் மூளலாம் என்ற அபாயம் நீடிப்பதால் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் உக்ரைனில் இருந்து வெளியேற தங்கள் நாட்டு மக்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. உக்ரைனில் இருந்து இந்தியர்கள் அங்கு தேவையில்லாமல் உள்நாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே உக்ரைனில் … Read more

சித்ரா ராமகிருஷ்ணனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை

தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மும்பையிலுள்ள தேசிய பங்குச்சந்தையின் தலைமை அலுவகத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றியவர் சித்ரா ராமகிருஷ்ணன். அப்போது தேசிய பங்குச்சந்தையில் முறைகேடாக பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் மட்டுமன்றி coal allocation scam என்று சொல்லக்கூடிய பல இடைத்தரகர்கள் பயனடையும் வகையில் பங்குச்சந்தையின் விதிமுறைகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, ஏற்கெனவே … Read more

'ஹிஜாப் சர்ச்சையல்ல, முஸ்லிம் பெண்களை பின்னோக்கி இழுக்கும் சதி வலை': கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்

“ஹிஜாப் சர்ச்சையல்ல முஸ்லிம் பெண்களை பின்னோக்கி இழுக்கும் சதி வலை” என கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவி துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகளை அணியக்கூடாது அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் போலீஸ் பாதுகாப்புடன் க‌ல்லூரிகள் திறக்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி ஹிஜாபுக்கு தடை விதித்ததால் மாணவிகள் வகுப்புக்களை புறக்கணித்தனர். இந்நிலையில், … Read more

சபரிமலையில் பிரபல நடிகருடன் இளம் பெண் தரிசனம்?

சபரிமலை கோயிலின் கருவறைக்குள் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 12-ந் தேதி திறக்கப்பட்டது. 13-ந் தேதி முதல் வழக்கமான பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது. 5 நாள் சிறப்பு பூஜைகளுக்கு பின் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று அடைக்கப்படுகிறது. முன்னதாக, சபரிமலை கோயிலில் தரிசனத்துக்கு வந்த பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி இளம் பெண் ஒருவருடன் … Read more

உ.பி.,ரயில் நிலையத்தில் உடைமைக்குள் 426 ஆமைகளை மறைத்து எடுத்துச் சென்ற நபர் கைது <!– உ.பி.,ரயில் நிலையத்தில் உடைமைக்குள் 426 ஆமைகளை மறைத்து எட… –>

உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் ரயில் நிலையத்தில் உடைமைக்குள் ஆமைகளை மறைத்து எடுத்து வந்த ஒருவனை ரயில்வே போலீசார் கைது செய்தனர். ரயில் நிலையத்தில் போலீசார் பயணிகளின் உடைமைகளை சோதித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவன் தனது பைக்குள் 426 ஆமைகளை வைத்திருந்தான். இது தொடர்பாக அவனிடம் போலீசார் விசாரித்தபோது, மேற்குவங்கத்தில் அவற்றை விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்வதாக கூறியுள்ளான். இதையடுத்து அவனைக் கைது செய்த போலீசார், ஆமைகளை பறிமுதல் செய்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். Source link

போலீஸ் உடன் மோதல்: கை விலங்குடன் வரிசையாக உட்கார வைக்கப்பட்ட பெண்கள்..!

பீகார் மாநிலத்தில் மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. மணல் கொள்ளைகளை தடுக்க ஆளில்லா விமானங்கள் மூலம் சட்டவிரோத சுரங்கங்கள், குவாரிகள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. மணல் சுரங்கங்களை வரைமுறைப்படுத்த அவற்றை ஏலம் விட அரசு முடிவு செய்தது. அதன்படி கயா மாவட்டத்தில் உள்ள மணல் சுரங்கங்கள், குவாரிகளை ஏலம் விட அதிகாரிகள் சென்றனர். அப்போது சட்டவிரோத மணல் குவாரிகளில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். … Read more

ஹிஜாப் அணிய வேண்டும் என குரானில் இல்லை!: போராடும் மாணவிகள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்..கேரள ஆளுநர் பேச்சு

திருவனந்தபுரம்: மாணவ, மாணவிகளின் சீருடையை தீர்மானிக்கும் அதிகாரம் பள்ளி, கல்லூரிகளுக்‍கு உண்டு என்றும் ஹிஜாப்பிற்காக போராடும் மாணவிகள் தங்களது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவி துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகளை அணியக்கூடாது என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் போலீஸ் பாதுகாப்புடன் க‌ல்லூரிகள் திறக்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற … Read more

உ.பி: திருமண வீட்டில் நேர்ந்த சோகம் – கிணற்றில் தவறி விழுந்த 13 பெண்கள் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசத்தில் கிணற்றின் இரும்பு வலை உடைந்ததில் அதன் மீது நின்று கொண்டிருந்த 13 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். குஷிநகர் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தவர்கள் அங்கிருந்த கிணற்றின் இருந்த இரும்பு வலையின் மீது நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அதிக பாரத்தால் கிணற்றின் இரும்பு வலை உடைந்து அதன் மீது நின்று கொண்டிருந்த 13 பேரும் கிணற்றுக்குள் விழுந்து மூழ்கினர். இந்த விபத்தில் 13 பெண்கள் உயிரிழந்த நிலையில் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் … Read more

உ.பி. திருமண விழாவில் விபத்து: கிணற்றில் தவறி விழுந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 13 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் திருமண விழாவில் நடந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 13 பேர் பலியாகினர். உ.பி. மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் நேற்றிரவு ஒரு திருமண விழா நடந்தது. இந்விழாவில் கலந்து கொண்டவர்கள் கிணற்றின் மீதிருந்த சிமென்ட் ஸ்லாபில் நின்றிருந்தனர். அப்போது பாரம் தாங்காமல் அந்த ஸ்பாப் உடைந்தது. அதில் நின்றிருந்தவர்கள் கிணற்றில் விழுந்தனர். இவர்களில் 13 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். முதல் தகவலை நேற்றிரவு வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கம், திருமண நிகழ்ச்சியில் … Read more

நாட்டுக்காக உயிர் நீத்த என் குடும்பத்தினர்.. கேலி செய்கிறது பாஜக.. பிரியங்கா குமுறல்

நாட்டுக்காக சேவை செய்து உயிரையும் தியாகம் செய்த எனது குடும்பத்தினரை பாஜகவினர் தினசரி கேலி செய்து வருகிறார்கள் என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் தேர்தல் பிரசாரம் செய்து பேசினார் பிரியங்கா காந்தி. அப்போது மறைந்த காங்கிரஸ் தலைவர்களை பாஜகவினர் கேலி செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். பிரியங்கா காந்தி பேசுகையில், “எனது குடும்பத்தினர் இந்த நாட்டுக்காக சேவையாற்றி உயிரை விட்டுள்ளனர். இதை நாங்கள் எப்போதும் தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை. ஆனால் … Read more