திருப்பதியில் ரூ.1.50 கோடிக்கு உதயாஸ்தமன சேவை டிக்கெட்: தேவஸ்தானம் வெளியிட்ட 1 மணி நேரத்தில் ரூ.70 கோடிக்கு பக்தர்கள் முன்பதிவு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று உதயாஸ்தமன சேவை டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் வெளியிட்டது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1 கோடி முதல் ரூ.1.50 கோடி வரை பக்தர்கள் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், இந்த டிக்கெட் ஆன்லைனில் வெளியான ஒரு மணி நேரத்தில் ரூ.70 கோடி வரை கட்டணம் வசூல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முதல் உதயாஸ்தமன சேவை டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. சுவாமிக்கு அபிஷேகம் … Read more

மேகாலயாவில் அனுமதியின்றி வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட வெடிபொருள் பறிமுதல் <!– மேகாலயாவில் அனுமதியின்றி வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட … –>

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட 305 கிலோ ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 24 அலுமினிய எலக்ட்ரானிக் டெட்டனேட்டர் பாக்கெட்டுகளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். மேகாலயாவின் ரி-போய் மாவட்டத்தின் வழியாக வெடிமருந்து கடத்திச் செல்லப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பைர்னிஹாட் போலீஸ் அவுட்போஸ்ட் அருகே படைப்பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தச் சாலையில் வந்த வாகனத்தை சோதனையிட்ட போது அதில் 305 கிலோ ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 24 அலுமினிய எலக்ட்ரானிக் டெட்டனேட்டர் … Read more

ஹிஜாப் பின்னணியில் சதி: கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் கருத்து

திருவனந்தபுரம் : கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கர்நாடகாவில் நடந்து வரும் ஹிஜாப் விவகாரத்தின் பின்னணியில் சதி உள்ளது. ஷபானு வழக்கை தோல்வியடைய வைத்தவர்கள் தான் இதன் பின்னணியில் செயல்பட்டு வருகின்றனர்.முத்தலாக் தடையால் வேதனை படுபவர்கள் தான் ஹிஜாப் விவகாரத்தை பெரிதாக்குகின்றனர். இதுபோன்ற விவகாரங்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடை ஏற்படுத்தும். முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என குரானில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. பள்ளிகள், கல்லூரிகள் … Read more

டெல்லி, குருகிராம், பெங்களூருவில் உள்ள சீன செல்போன் கம்பெனியில் வருமான வரித்துறை சோதனை

புதுடெல்லி: வரி ஏய்ப்பு தொடர்பாக, டெல்லி, குருகிராம், பெங்களூருவில் உள்ள ஹூவாய் சீன செல்போன் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வரும் சீன செல்போன் நிறுவனமான ஹூவாய், வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில், டெல்லி, குருகிராம் மற்றும் பெங்களூருவில் உள்ள இந்த நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு முதல்  அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, இந்திய வணிகங்கள் … Read more

கவனக்குறைவு, மது பாட்டில், தலையில் பலத்த அடி… – நடிகர் தீப் சித்து உயிரிழப்பு குறித்து வெளிவந்த தகவல்

சோனிபட்: சமூக ஆர்வலரும், பஞ்சாப் நடிகருமான தீப் சிங் சித்து உயிரிழந்த விபத்துக்குக் காரணம், கவனக்குறைவாக செயல்பட்டதுதான் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சோனிபட் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரி குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வெடித்த கலவரத்தில், செங்கோட்டையில் அத்துமீறிக் கொடி ஏற்றப்பட்டது. இதனை ஏற்றியவர் பஞ்சாபி நடிகர் தீப் சிங் சித்து. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு பகுதி விவசாயிகளைத் தூண்டி ஊர்வலத்தில் மாற்றங்கள் செய்ததாக … Read more

"ஐடி தலைநகரத்தில்" கலவரத்தை கடை விரிக்கும் பாஜக.. மாஜி அமைச்சர் பரபர தகவல்

அமைதியான, பலவகையிலும் முன்னேறிய மாநிலமான கர்நாடகத்திற்கு பாஜக செய்து கொண்டிருப்பது மிகவும் அவமானகரமானது என்று முன்னாள் கர்நாடக அமைச்சர் கிருஷ்ண பைரே கெளடா கூறியுள்ளார். கர்நாடகத்தில் சமீபத்தில் ஹிஜாப் தொடர்பான சர்ச்சை வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் இது பேசு பொருளானது. சில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து இஸ்லாமிய மாணவிகள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டதால் போராட்டங்கள் வெடித்தன. போராட்டங்கள் முற்றி வன்முறை உருவாகும் சூழல் ஏற்பட்ட நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக … Read more

பஞ்சாப் நடிகரும் சமூக ஆர்வலருமான தீப் சித்து கார் விபத்தில் உயிரிழப்பு.! <!– பஞ்சாப் நடிகரும் சமூக ஆர்வலருமான தீப் சித்து கார் விபத்தி… –>

பஞ்சாப் நடிகரும் சமூக ஆர்வலருமான தீப் சித்து கார் விபத்தில் உயிர் இழந்தார். ஹரியானா மாநிலம் சோனாபட் அருகே அவர் சென்றுக் கொண்டிருந்த கார் லாரி மீது பலமாக மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செங்கோட்டையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற டிராக்டர் பேரணியின் போது தீப் சித்து, விவசாயிகள் செங்கோட்டையில் கொடி ஏற்றிய போது நிகழ்ந்த வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக அவர் முழு மூச்சுடன் போராட்டங்களில் கலந்துக் … Read more

அவர் என்னை கலா என்று அழைக்கிறார் – சரண்ஜித் சிங் சன்னி குறித்து கெஜ்ரிவால் புகார்

மொஹாலி: பஞ்சாப் தேர்தல் பிரச்சாரத்தின் போது கெஜ்ரிவால் குறித்து ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனால் ஆம் ஆத்மிக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், மொஹாலியில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாவது: உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து மக்கள் பஞ்சாப் மாநிலத்திற்கு வருவதைத் தடுக்குமாறு அவர் ( பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி) வேண்டுகோள் விடுக்கிறார். அவர் என்னை கலா (கருப்பு) என்று அழைக்கிறார்.  … Read more

உக்ரைன் எல்லையில் படைகளை வாபஸ் பெற்றதாக ரஷ்யா சொல்வதை நம்ப முடியாது: அமெரிக்கா, நேட்டோ கருத்து; எந்நேரமும் தாக்குதல் நடக்கும்

புதுடெல்லி: உக்ரைன் எல்லையில் படைகளை வாபஸ் பெற்று வருவதாக ரஷ்யா கூறுவதை நம்ப முடியாது என அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் தெரிவித்துள்ளன. எந்த நேரத்திலும் திடீர் தாக்குதலில் அது ஈடுபடக் கூடும் என கூறியுள்ள அவை, அப்படி நடந்தால் சரியான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளன. இதனால், உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் நீடிக்கிறது.அமெரிக்கா, நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா, அந்நாட்டை தாக்குவதற்காக 3 எல்லைகளிலும் சுற்றிவளைத்து 1.50 லட்சம் … Read more

கேரளா: எம்எல்ஏ தோழரை கரம்பிடிக்கும் இந்தியாவின் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன்

திருவனந்தபுரம்: இந்தியாவின் இளம் வயது மேயர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான திருவனந்தபுரத்தின் மேயர் ஆர்யா ராஜேந்திரன், இளம் எம்எல்ஏவை திருமணம் கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தின் மேயர் ஆர்யா ராஜேந்திரன். 21 வயதிலேயே மேயராகி, இந்தியா முழுவதும் பேசப்படும் இளம் தலைவரானவர் இந்த ஆர்யா. கடந்த ஆண்டு நடந்த கேரள உள்ளாட்சித் தேர்தலில் முடவன்முகல் வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்ட ஆர்யா ராஜேந்திரன் வெற்றி பெற்று மாநகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து இவரை மாநகராட்சி … Read more