கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், பரிசோதனை தொடர்பாக புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா அறிகுறி உள்ள நபர்கள், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்து இணை நோயுடன் போராடுகிறவர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வெளிநாடு செல்கிற தனி நபர்கள், வெளிநாடுகளில் இருந்து  வருவோர் அனைவரும் ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்கள்படி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மருத்துவமனைகளில் மருத்துவர் முடிவின்படி கொரோனா … Read more

பல்வேறு உட்பிரிவுகள் உள்ளதால் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கலாம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

புதுடெல்லி: தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் வந்தன. அப்போது, நீதிபதி நாகேஸ்வர ராவ், ‘இந்த வழக்கை அரசியல் சாசன உயர் அமர்வுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. அதனால், மனுதாரர்கள் வாதங்களை முன் வைக்கலாம்,’ என தெரித்தார்.இதையடுத்து, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, குமணன் ஆகியோர், ‘தமிழகத்தில் அமலில் … Read more

குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்; 40 கி.மீ. வேகத்தில் மட்டுமே பயணம்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

இருசக்கர வாகன பயணத்தில் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்றும், குழந்தைகளை அழைத்துசெல்லும்போது மணிக்கு 40 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது என்றும் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் 6 இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் உயிரிழக்கின்றனர். இதில் பெரும்பாலான உயிரிழப்புகள், ஹெல்மெட் அணியாததால் ஏற்படுகின்றன. இதை தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து செல்பவர் களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மத்திய, … Read more

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் – அரசு ஊழியர்கள் செம ஹேப்பி!

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், சிரோமணி அகாலி தளம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என, அக்கட்சித் தலைவர்ச சுக்பிர் சிங் பாதல் தெரிவித்து உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. … Read more

 ஜார்க்கண்டில் பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரியால் நிகழ்ந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள்.! <!–  ஜார்க்கண்டில் பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்த ச… –>

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராம்கர் மாவட்டத்தில் நிகழ்ந்த கோர விபத்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. சரக்கு லாரி ஒன்று வேகமாக வந்த போது பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் சென்றுக்கொண்டிருந்த பல்வேறு வாகனங்களை மோதித் தள்ளிய அந்த லாரி ஒரு காரை நசுக்கி தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்           Source link

ஒடிசா கல்யாண மன்னன் மீது மேலும் 3 பெண்கள் புகார்

புவனேஸ்வர்:  ஒடிசா மாநிலம் கேந்திரா பாரா மாவட்டத்தை சேர்ந்தவர் 66 வயதான பிதுபிரகாஷ் சுலைன். இவர் தன்னை ஹோமியோபதி டாக்டர் என கூறி கடந்த 2002-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டுவரை தொடர்ச்சியாக  பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடுத்தர, படித்த, வசதி படைத்த பெண்களை மோசடி செய்து ஏமாற்றி மணந்துள்ளார்.  ரமேஷ் சந்திர ஸ்வைன், டாக்டர் ரமணி ரஞ்சன் ஸ்வைன் என பல்வேறு பெயர்களில் அவர் பெண்களிடம் பழகியுள்ளார்.  இவரது வலையில் படித்த பெண்கள், வக்கீல், ஆசிரியை … Read more

நடிகர் ரவி கிஷன் மீது காங்., பெண் நிர்வாகி ஆபாச புகார்

நொய்டா: உத்தரபிரதேச காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர் பங்குரி பதக், பாஜ எம்பியும் நடிகருமான ரவி கிஷன் மீது ஆன்லைனில் துன்புறுத்தல், மிரட்டி பணம் பறித்தல் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார்.பாலிவுட் நடிகரும், உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜ எம்பியுமான ரவி கிஷன், இந்தி மற்றும் போஜ்புரி, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அவர் மீது காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவரான பங்குரி பதக் நொய்டா போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், ‘நொய்டாவில் நடந்த வாக்குப் பதிவுக்கு அடுத்த … Read more

'காலிஸ்தான் பிரதமராக வருவேன்' – கெஜ்ரிவால் கூறியதாக சொல்லும் வீடியோவை வெளியிட்டது பாஜக!

‘பஞ்சாப் முதல்வராகவோ அல்லது காலிஸ்தானின் பிரதமராகவோ நான் வருவேன்’ என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாக குமார் விஸ்வாஸ் பேசிய வீடியோவை பாஜக வெளியிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20ம் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்காக காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மாளவியா தனது ட்விட்டர் பக்கத்தில், ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், அதன்பின் பாஜகவில் இணைந்தவருமான குமார் விஸ்வாஸ் … Read more

சீன தொலைத்தொடர்பு நிறுவனம் ஹூவாய் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை

புதுடெல்லி: சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய்க்கு சொந்தமாக இந்தியாவில் உள்ள அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லி, குருகிராம், பெங்களூருவில் உள்ள அலுவலகங்களில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் நேற்று முதல் சோதனை நடந்து வருகிறது. நிதி ஆவணங்கள், வரவு செலவு புத்தகங்கள், ஹூவாயின் இந்திய வணிகம், பணப்பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் குறித்து சோதனை நடைபெற்றது. இந்நிலையில் தற்போது நடக்கும் சோதனை குறித்து ஹூவாய் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: ‘‘வருமான வரித்துறை அதிகாரிகள் … Read more

காங்கிரஸோட "டூப்ளிகேட்"தான் ஆம் ஆத்மி.. பஞ்சாபில் மோடி அதிரடி!

பாஜகவும், ஆம் ஆத்மியும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என்று பிரியங்கா காந்தி பேசுகிறார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியோ, காங்கிரஸ் கட்சியின் நகல்தான் ஆம் ஆத்மி என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார். பஞ்சாப் தேர்தல் களத்தில் தேசியக் கட்சிகளான பாஜகவும் சரி, காங்கிரஸும் சரி, இரு கட்சிகளும் கண்டு நடுங்கும் கட்சியாக மாறி நிற்கிறது ஆம் ஆத்மி. இக்கட்சிதான் சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களை வெல்லும் என்று கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் … Read more