திருப்பதி அஞ்சனாத்திரி மலையில் உள்ள அனுமன் பிறந்த இடத்தில் பூமி பூஜை

திருமலை: திருப்பதி, ஏழுமலைகளில் ஒன்றான அஞ்சனாத்திரி மலையில்தான் அனுமன் பிறந்ததாகக் கருதப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்வெட்டு, புவியியல் மற்றும் அறிவியல் சான்றுகளுடன்  அஞ்சனாத்திரியே அனுமனின் அவதாரத் தலம் என்று உறுதிப்படுத்தப்படுத்தி உள்ளது. இதையடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளை சார்பில் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி பர்வதத்தில் அனுமன் பிறந்த இடத்தை புனித தலமாக மாற்றும் பூமி பூஜை நேற்று நடைபெற்றது. விசாக ஸ்ரீ சாரதா பீடத்தின் ஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி,  ராம ஜென்மபூமி, ஹனுமான் ஜென்ம பூமி தலைவர் … Read more

இசை அமைப்பாளர் பப்பி லஹிரி மரணம்

மும்பை: பாலிவுட் இசை அமைப்பாளர் பப்பி லஹிரி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69.கடந்த ஆண்டு கொரோனா நோயால் பப்பி லஹரி பாதிக்கப்பட்ட நிலையில், மும்பையிலுள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். பிறகு குணமடைந்த நிலையில் அவர் தனது வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மும்பையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது … Read more

4 வயதுக்கு கீழான குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் – மத்திய அரசின் புதிய விதிமுறை

இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் 4 வயதுக்கு கீழான குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்ற விதிமுறை அடுத்தாண்டு முதல் அமலுக்கு வருகிறது இரு சக்கர வாகனத்தில் செல்லும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மோட்டார் வாகனச்சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் 4 வயதுக்கு கீழான குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை வரும் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி … Read more

குடுச்சி மூலிகையால் கல்லீரல் பாதிக்கும் என்பது தவறானது: மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: ‘ஜிலோய் / குடுச்சி மூலிகை கல்லீரலைப் பாதிக்கும் என ஊடகங்களில் சில பிரிவினர் மீண்டும் தவறான கருத்தை வெளியிட்டுள்ளனர். ஜிலோய் / குடுச்சி மூலிகை பாதுகாப்பானது, தற்போது கிடைக்கும் தரவுகளின்படி குடுச்சி எந்தவித நச்சுத்தன்மையையும் ஏற்படுத்தாதது’ என்று ஆயுஷ் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ”ஆயுர்வேதத்தில் குடுச்சியானது புத்துணர்ச்சிக்கு சிறந்த மூலிகை என கூறப்படுகிறது. எந்தவித நச்சுப் பாதிப்பும் ஏற்படுவதில்லையென்று குடுச்சியின் சாறு தொடர்பான ஆய்வு அறிக்கையில் … Read more

குறைந்து வரும் கொரோனா – மாநிலங்களுக்கு மத்திய அரசு திடீர் உத்தரவு!

கொரோனா பரவல் குறைந்து வருவதால், கூடுதல் கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த அவதாரமான ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் இந்தியாவுக்கு பரவி கொரோனா பரவலை அதிகரிக்கச் செய்தது. இதன் காரணமாக, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில், தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம், … Read more

மூதாட்டி மரச்சட்டத்தால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ; ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது <!– மூதாட்டி மரச்சட்டத்தால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ; ஜ… –>

சென்னை அம்பத்தூர் பகுதியில் மூதாட்டி ஒருவர் மரச்சட்டத்தால் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளான். அயப்பாக்கம் அருகே கடந்த 14ஆம் தேதி இரவில் நிர்மலா என்ற மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த நிலையில், நள்ளிரவில் மரச்சட்டத்தால் அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். சிசிடிவி கேமராவில் பதிவான நபரை தேடி வந்த போலீசார், செவ்வாய்கிழமை நள்ளிரவில் அம்பத்தூர் ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித் திரிந்த ஒரு நபரைப் பிடித்து விசாரித்தனர். ஜார்கண்டைச் சேர்ந்த … Read more

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மதுபானம் கடத்திய சுங்க துறை கண்காணிப்பாளர் கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வெளிநாட்டு மதுபானங்கள் கடத்தி வரப்படுவதாக சுங்க துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் வெளிநாட்டு மதுபானங்கள் கடத்தலில் சில சுங்க துறை அதிகாரிகளே ரகசியமாக ஈடுபடுவதாக உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உள்ள டியூட்டி பிரீஷாப்பின் தலைமை நிர்வாக அதிகாரி … Read more

'ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே வழித்தடம்' என்பதே எங்களது நோக்கம்: உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

டெல்லி: சர்வதேச சோலார் கூட்டமைப்பின் வழியாக ‘ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே வழித்தடம்’ என்பதே எங்களது நோக்கம் என டி.இ.ஆர்.ஐ. உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். எப்போதும் உலகளாவிய கட்டமைப்பிலிருந்து தூய்மையான ஆற்றல் கிடைப்பதை உறுதிசெய்ய நாம் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார். அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியர்களின் எரிசக்தி தேவை இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார். இந்த எரிசக்தியை மறுப்பது என்பது லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மறுப்பதற்கு சமம் என … Read more

உ.பி: ஒவைசி கார்மீது துப்பாக்கிசூடு நடத்தியதாக கைதானவரின் குடும்பத்தை சந்தித்த பாஜக தலைவர்

அசாதுதீன் ஓவைசியின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் கைதாகி சிறையில் உள்ள தாத்ரியைச் சேர்ந்த சச்சின் சர்மாவின் குடும்பத்தினரை, உத்தரப்பிரதேச மாநில தொழிலாளர் நல வாரியத்தின் தலைவரான சுனில் பரலா நேரில் சென்று சந்தித்தார். முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசில் அமைச்சருக்கு இணையான பதவியை வகிக்கும் உத்தரப்பிரதேச மாநில தொழிலாளர் நல வாரியத்தின் தலைவரான சுனில் பரலா, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசியின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் … Read more

அரசு ஏன் ஹிஜாப்பை மட்டும் குறிவைக்கிறது? – கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் தரப்பு வாதம்

பெங்களூரு: ‘வளையல்கள் உள்ளிட்ட 100 அடையாளங்களை அணிந்துகொண்டு மாணவிகள் கல்வி நிலையங்களுக்கு வருகிறார்கள். ஆனால், அரசு ஏன் ஹிஜாப்பை மட்டும் குறிவைக்கிறது?’ என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஹிஜாப் தடைக்கு எதிராக உடுப்பி இஸ்லாமிய மாணவிகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் விசாரணை இன்று தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இஸ்லாமிய … Read more