சர்வதேச சோலார் கூட்டமைப்பின் வழியாக 'ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே வழித்தடம்' என்பதே எங்களது நோக்கம் : மோடி
டெல்லி: சர்வதேச சோலார் கூட்டமைப்பின் வழியாக ‘ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே வழித்தடம்’ என்பதே எங்களது நோக்கம் என டி.இ.ஆர்.ஐ. உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியர்களின் எரிசக்தி தேவை இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார். இந்த எரிசக்தியை மறுப்பது என்பது லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மறுப்பதற்கு சமம் என தெரிவித்தார்.