உ.பி: உறவினர் திருமணத்திற்கு விடுமுறை மறுக்கப்பட்டதால் ரயில்வே ஊழியர் எடுத்த விபரீத முடிவு

உத்தரப்பிரதேசத்தில் உறவினரின் திருமணத்திற்கு விடுமுறை மறுக்கப்பட்டதால் விரக்தியடைந்த ரயில்வே ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் தனது மைத்துனரின் திருமணத்திற்கு விடுமுறை மறுக்கப்பட்டதால் ரயில்வே டிராக்மேன் ஒருவர் தண்டவாளத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவரது கடைசி தருணங்களின் வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர் தனது சக ஊழியர்களிடம் தனக்கு நேர்ந்த துயரத்தைப் பற்றி கூறுவதைக் கேட்க முடிந்தது. வரும் 19-ஆம் தேதி நடக்கும் திருமணத்தில் அவர் கலந்து கொள்ளவிருந்ததாகக் கூறப்படுகிறது. மாய்த்துக் … Read more

‘‘காங்கிரஸ் ஒரிஜினல், ஆம் ஆத்மி ஜெராக்ஸ்’’-  பிரதமர் மோடி கிண்டல் 

சண்டிகர்: காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் ஒரே பக்கம் நின்று மல்யுத்தம் ஆடுகின்றன, அவர்களின் சண்டை வெறும் கண்துடைப்பு, காங்கிரஸ் ஒரிஜினல், ஆம் ஆத்மி ஜெராக்ஸ் என பிரதமர் மோடி கிண்டல் செய்தார். பஞ்சாபில் பிப்ரவரி 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்தநிலையில் பஞ்சாபின் பதான்கோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: பாகிஸ்தானில் இருந்து கர்தார்பூரை மீட்க காங்கிரஸுக்கு மூன்று வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் … Read more

பங்குச் சந்தை ஊழல்: இமயமலை சாமியாரும் இமாலய ஊழலும்

பங்குச் சந்தை என்றாலே சாதாரண மக்களுக்கு மர்மம் நிறைந்த இடம். அங்கு எப்படி வர்த்தகம் நடக்கிறது, எவ்வளவு பணம் புரள்கிறது, யார் சம்பாதிக்கிறார்கள், யார் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதெல்லாம் த்ரில்லர் வகைப் படங்களுக்கு இணையானது. யார் யோக்கியர், யார் அயோக்கியர் என்பதை இயல்பாகக் கண்டுபிடிக்க முடியாது. இந்தியப் பங்குச் சந்தைகளின் ஒழுங்காற்று மையமான செபி கடந்த வெள்ளியன்று 190 பக்க அளவில் ஒரு புகார் உத்தரவை வெளியிட்டிருக்கிறது. அதன் மையமான விஷயம் என்னவென்றால் தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் … Read more

ஒருவர் கூட பசியால் வாடக் கூடாது என்பதற்காக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகப் பிரதமர் பேச்சு <!– ஒருவர் கூட பசியால் வாடக் கூடாது என்பதற்காக அரசு அனைத்து ம… –>

ஒருவர் கூடப் பசியால் வாடக் கூடாது என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கொரோனா சூழலில் நாடு முழுவதும் ஏழைகளுக்கு இலவச உணவுதானியங்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். பாஜக காலூன்றும் இடங்களில் எல்லாம் காங்கிரஸ் துடைத்தெறியப்படுவதாகத் கூறினார். காங்கிரஸ் அசல் என்றால் ஆம்ஆத்மி அதன் நகல் என்று சாடிய பிரதமர், பஞ்சாபில் காங்கிரசும் டெல்லியில் ஆம் ஆத்மியும் ஊழலில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். … Read more

ஊழல் செய்வதில் காங்கிரஸ் அசல் என்றால் ஆம் ஆத்மி நிழல் – பிரதமர் மோடி விளாசல்

பஞ்சாப் மாநில தேர்தல் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. இதன் முடிவு மார்ச் 10-ம் தேதி வெளியிடப்படுகிறது. மூன்று முனைப் போட்டியுடன் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பத்தோன்காட் பகுதியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:- பஞ்சாப் நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதே சமயம் எதிர்க்கட்சிகள் பஞ்சாபை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். கேப்டன் … Read more

நாடு முழுவதும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணிவது கட்டாயம்

டெல்லி: நாடு முழுவதும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள்,  இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது ஹெல்மெட் அணிவது கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அறிவிப்பு வெளியான நாளில் இருந்து ஓராண்டு கழித்து புதிய வழிகாட்டு நெறிமுறை நடைமுறைக்கு வரும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 4வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணிக்கும் இரு சக்கர வாகனத்தை மணிக்கு 40 கி.மீ வேகத்திற்கு மேல் இயக்க கூடாது என ஒன்றிய அரசு கூறியுள்ளது.

கேரளா: இளம் வயது எம்.எல்.ஏ.வை மணக்கிறார் இந்தியாவின் இளம் வயது மேயர் ஆர்யா!

கேரளாவில் எம்.எல்.ஏ. சச்சின் தேவுக்கும், திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக இருப்பவர் ஆர்யா ராஜேந்திரன். 21 வயதில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றதன் மூலம் இந்தியாவிலேயே மிகக்குறைவான வயதில் மேயர் பதவியேற்ற பெண் என்ற பெருமையை இவர் பெற்றவர் ஆவார். இவருக்கும், பாலுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான சச்சின் தேவுக்கும் திருமணம் நடக்க உள்ளது. 28 வயதாகும் சச்சின் தேவ், கேரள சட்டப்பேரவையில் … Read more

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த கல்லூரி மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு: நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி நடவடிக்கை

பெங்களூரு: கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தால் மூடப்பட்டிருந்த கல்லூரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று திறக்கப்பட்ட நிலையில், இன்று கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் அனுமதிக்கப்படவில்லை. ஹிஜாப் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முன்னதாக இவ்விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம், ”கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகளை அணியக்கூடாது” என உத்தரவிட்டது. இதனையடுத்து, கடந்த திங்கள்கிழமை 10-ம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது … Read more

"ரெண்டும் ஒன்னுதான்".. பிரியங்கா பிரசாரம்.. சீமானைப் பார்த்து திமுக சொன்ன அதே வார்த்தை!

தமிழகத்தில் பாஜகவும், நாம் தமிழர் கட்சியும் ஒன்றுதான் என்று எப்படி திமுக பிரசாரம் செய்ததோ அதே பாணியில், பாஜகவும், ஆம் ஆத்மியும் ஒன்றுதான் என்று பஞ்சாபில் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார். தமிழகத்தில் தேர்தல் என்று வந்து விட்டால் போதும் நாம் தமிழர் கட்சியை குறி வைத்து திமுகவினர் கலகலப்பாக பிரசாரத்தில் குதித்து விடுவார்கள். நாம் தமிழர் கட்சிக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும், பாஜகவுக்கு போடும் ஒட்டு என்று திமுகவினர் பிரசாரம் செய்தனர். திமுக கூட்டணியினரும் அதே … Read more

டெல்லியில் பக்தர்களுடன் சேர்ந்து பக்திக் கீர்த்தனைகளைப் பாடிய பிரதமர் மோடி.! <!– டெல்லியில் பக்தர்களுடன் சேர்ந்து பக்திக் கீர்த்தனைகளைப் ப… –>

குரு ரவிதாஸ் பிறந்த நாளையொட்டி டெல்லி கரோல்பாக்கில் உள்ள கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி, பக்தர்களுடன் சேர்ந்து கீர்த்தனைகளைப் பாடி வழிபட்டார். டெல்லி கரோல்பாக்கில் உள்ள குரு ரவிதாஸ் கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு நடத்தினார். அப்போது அங்குப் பக்திக் கீர்த்தனைகளைப் பாடிய குழுவினருடன் பிரதமரும் அமர்ந்து பாடல்களைப் பாடினார்.  Source link