கர்நாடகாவில் ஒரு வாரத்திற்கு பின் பள்ளி, கல்லூரிகள் திறப்பு..ஹிஜாபை அகற்ற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்!!

பெங்களூரு : கர்நாடகாவில் ஒரு வாரத்திற்கு பின் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு வந்த இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாபை அகற்ற மறுத்து போராட்டத்தில் இறங்கினர். கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஹிஜாப் அணிவதற்கு எதிராகவும் ஆதரவாகவும் போராட்டங்கள் வெடித்தன. சில இடங்களில் போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கில் கல்வி நிறுவனங்களுக்கு மதம் சார்ந்த உடைகளை அணிந்து வர கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து … Read more

'டர்பன் அணிந்தால் நீங்கள் சர்தாரா? – மோடி, கெஜ்ரிவாலை சாடிய பிரியங்கா காந்தி

பஞ்சாப் மாநிலத்துக்கு பிரசாரத்துக்கு வந்தால் பிரதமர் மற்றும் கெஜ்ரிவால் டர்பன் அணிந்து இருப்பார்கள். தலைப்பாகை அணிவதால் யாரும் சர்தார் ஆக மாட்டார்கள் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ரூப்நகர் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பரப்புரை மேற்கொண்டார். பின்னர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ”பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் வந்தால் … Read more

குரு ரவிதாஸ் ஜெயந்தி: டெல்லி கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்; பக்தர்களுடன் கீர்த்தனையில் பங்கேற்பு

புதுடெல்லி: 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்தி இலக்கிய கவிஞர் குரு ரவிதாஸின் பிறந்தநாளை ஒட்டி டெல்லி கரோல்பாகில் உள்ள ரவிதாஸ் கோயிலில் பிரதமர் நரேந்திர் மோடி தரிசனம் செய்தார். குரு ரவிதாஸ் திரு உருவச்சிலைக்கு அவர் தீப ஆராதனை காட்டி பூஜைகள் செய்தார். பின்னர் அங்கிருந்த பக்தர்களுடன் அமர்ந்து, அவர்கள் பாட்டுப்பாட அதற்கேற்ப இசைக்கருவி ஒன்றை இசைத்து கீர்த்தனையில் ஆர்வமுடன் பங்கேற்றார். பிரதமர் மோடி தனது தலையில் துணி ஒன்றையும் கட்டியிருந்தார். ரவிதாஸ் ஏற்படுத்திய ரவிதாஸியா … Read more

7 மாநிலங்கள்… 14 திருமணங்கள்… மன்மத ராசாவின் லீலைக்கு எண்ட் கார்டு போட்ட டெல்லி பெண்!

ஒடிசா மாநிலம், கேந்திரபாரா மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ் சந்திர ஸ்வைன். 1982 இல் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார், தமது மனைவியுடனான 20 ஆண்டுகால மணவாழ்க்கைக்கு பிறகு 2002 இ்ல் இவர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். மனுஷன் அதோடு நிற்கவில்லை. அதன்பிறகுதான் தமது ஆட்டை ஆரம்பித்துள்ளார். மேட்ரிமோனியல் வலைதளங்கள் மூலம் நடுத்தர வயது பெண்களை குறி வைத்து அவர்களை வலைப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். விவகாரத்து ஆன பெண்களிடம் தம்மை ஒரு மருத்துவராக அறிமுக செய்து கொண்டு பேச்சு … Read more

இந்தியாவில் புதிதாக 30,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.! <!– இந்தியாவில் புதிதாக 30,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.! –>

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று சற்று அதிகரித்து 30 ஆயிரத்து 615 ஆக பதிவாகி உள்ளது. ஒரே நாளில் கொரோனா பாதித்த 514 பேர் உயிரிழந்திருப்பதுடன், 82 ஆயிரத்து 988 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் 2 புள்ளி 45 சதவீதமாக இருப்பதுடன், நாடு முழுவதும் 3 லட்சத்து 70 ஆயிரத்து 240 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். Source link

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நாளை பொங்கல் வழிபாடு

திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழாவில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு ஒரே இடத்தில் பொங்கல் வழிபாடு நடத்துவார்கள். இது சர்வதேச அளவில் புகழ் பெற்றதுடன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. அதன்படி ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலின் வருடாந்திர பொங்கல் விழா கடந்த 9-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அபிஷேகம், … Read more

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபர் கைது

டெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள அஜித் தோவல் இல்லத்திற்குள் நுழைய முயன்ற நபரிடம் காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டில் இலங்கை… 40,000 டன் பெட்ரோல், டீசலை கொடுத்த இந்தியா

கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டால் தவிக்கும் இலங்கைக்கு 40 ஆயிரம் டன் பெட்ரோல், டீசலை இந்தியா அனுப்பியுள்ளது. இலங்கையில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததை அடுத்து அங்கு இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டதால் அத்தியாவசிய பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க இந்தியா 40,000 டன் பெட்ரோல், டீசலை விநியோகம் செய்துள்ளது. இந்திய தூதர் கோபால் பாக்லே இந்திய எண்ணெய் கழகம் வழங்கிய 40,000 டன் எரிபொருளை இலங்கை அரசிடம் ஒப்படைத்தார். இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே … Read more

மீண்டும் 30,000ஐ தொட்ட அன்றாட கரோனா பாதிப்பு: பரவல் விகிதம் 2.45% ஆக அதிகரிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று 27,409 என்றளவில் அன்றாட கரோனா தொற்று பதிவாகியிருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இது சற்றே அதிகரித்து மீண்டும் 30,000ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,615 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று மீண்டும் தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்தது. நேற்று புதிதாக 756 பேருக்கு தொற்று உறுதியானது. * அன்றாட … Read more

கே.சி.ஆரின் எழுச்சி… ஆஹா.. இந்த டிவிஸ்ட்டை எதிர்பார்க்கவே இல்லையே.. மோடி குஷிதான்!

தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ் சமீப காலமாக சந்தேகத்திற்கிடமான வகையில் பேசத் தொடங்கியுள்ளார். இதை பலரும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்துள்ளனர். அவரு தற்போதைய நோக்கம் தேசிய அரசியில் புகுவது, மாநிலத்தை தனது மகனிடம் ஒப்படைப்பது என்பதுதான் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இத்தனை நாட்களாக மத்திய அரசையோ அல்லது பிரதமர் மோடியையோ திட்டாமல் அமைதியாக தான் உண்டு, தனது தெலங்கானா உண்டு என்று இருந்து வந்தவர் கே.சி.ஆர். ஆனால் சமீப … Read more