ஜம்மு காஷ்மீரில் அதிகாலையில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அதிகாலையில் லேசான நிலநடுக்கம்  உணரப்பட்டது. பால்காமிலிருந்து 15 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது.

இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 30,615 பேருக்கு கொரோனா; 514 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில், 30,615 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கும் தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,615 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 27,409 ஆக இருந்தநிலையில், அது இன்று 11% உயர்ந்து பதிவாகியுள்ளள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 82,988 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் … Read more

ம.பி.யில் விஎச்பி போராட்டத்தால் மாணவிகள் ஹிஜாப் அணிந்து அரசு கல்லூரிக்கு வர தடை

போபால்: ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குள் நுழைய மாணவிகளுக்கு தடைவிதிக்கப்பட்ட சம்பவம் மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே ம.பி.யில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் தாட்டியா மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரிக்கு கடந்த வாரம் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் … Read more

காங்கிரசில் வீழ்ந்த அடுத்த விக்கெட் – முன்னாள் மத்திய அமைச்சர் ராஜினாமா!

காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய சட்டத் துறை அமைச்சருமான அஸ்வனி குமார், அக்கட்சியில் விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்தத் தலைவர்கள் விலகி வருவது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பாஜகவுக்கு எதிராக கட்சியை வலுவாக கட்டமைக்க முடியாமல் அக்கட்சி திணறி வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சியில் இருந்து மூத்தத் தலைவர்கள் ராஜினாமா செய்து கட்சித் தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி … Read more

5 ஆண்டு தீவிர காதல்- காதலர் தினத்தில் தம்பதியான திருநங்கைகள்

திருவனந்தபுரம்: திருச்சூர் சாலக்குடியை சேர்ந்தவர் மனு கார்த்திகா. திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சியாமா. இருவரும் திருநங்கைகள் ஆவர். மனு கார்த்திகா திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுதுறையில் செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சியாமா கேரள சமூக நலத்துறையில் திருநங்கையருக்கான பிரிவில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தீவிரமாக காதலித்து வந்தனர். ஆனால் நிலையான வேலை, அதற்கேற்ற வருமானம் கிடைத்த பின்னரே திருமணம் செய்து கொள்வது … Read more

பஞ்சாபி நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழப்பு : விவசாயிகளை தூண்டிவிட்டதாக இருமுறை கைது செய்யப்பட்டவர்!!

சண்டிகர் : விவசாயிகளின் போராட்டத்தின் போது, டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய பஞ்சாப் நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் செங்கோட்டையை நோக்கி விவசாயிகள் முன்னேறினர். செங்கோட்டையில் இருந்த கம்பத்தில் விவசாயிகள் கொடி ஏற்றியதில் சர்ச்சையாகி பாதுகாப்புப் படையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. போராட்டத்தில் உடன் இருந்து விவசாயிகளை தூண்டிவிட்டதாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் தீப் … Read more

லாலு பிரசாத் குற்றவாளி: 5-வது கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு

ராஞ்சி: 5-வது கால்நடைத் தீவன ஊழல் வழக்கிலும் பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. பிஹார் முதல்வராக லாலு பிரசாத் பதவி வகித்த காலத்தில் கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட தீவனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ தரப்பில் 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் லாலு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கை … Read more

ஆயிரக்கணக்கில் போலீஸ் புகார்.. பெரும் சிக்கலில் ராகுல் காந்தி.. பாஜக வார்னிங்!

ராகுல் காந்தி போட்ட ஒன்றிய அரசு என்ற ட்வீட்டைத் தொடர்ந்து அவர் மீது அஸ்ஸாம் பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் சரமாரியாக போலீஸில் புகார் கொடுத்து வருகின்றன. ராகுல் மீது 1000க்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக அஸ்ஸாம் பாஜக கூறியுள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தனது வீடியோ உரையின்போது உ.பி. மக்கள் வாக்களிக்கும்போது தவறு செய்து விட்டால், உ.பி. ஒரு கேரளாவாகவோ அல்லது காஷ்மீராகவோ அல்லது மேற்கு வங்காளமாகவோ மாறி விடும் என்று … Read more

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிதாக 60000 வீடுகள்.! <!– பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிதாக 60000 வீடு… –>

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 5 மாநிலங்களில் 60,000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 5 மாநிலங்களில் 60,000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆந்திரா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. Source link

தலைப்பாகை அணிபவர் எல்லாம் சர்தார் ஆக முடியாது – மோடி, கெஜ்ரிவால் குறித்து பிரியங்கா காந்தி பேட்டி

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலையொட்டி ரூப்நகர் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்தார். பின்னர் அமிர்தசரஸ் நகரில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: பிரதமர் மற்றும் கெஜ்ரிவால் பஞ்சாப் வந்தால் மேடையில் டர்பன் (தலைபாகை) அணிந்து இருப்பார்கள். மேடையில் தலைப்பாகை அணிவதால் யாரும் சர்தார் ஆக மாட்டார்கள். உண்மையான சர்தார் யார் என்று அவர்களிடம்  (மோடி, கெஜ்ரிவால்) சொல்லுங்கள். இந்த தலைப்பாகையின் … Read more