மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தால், 5 ஆண்டுகளுக்கு விவசாயிகள் மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை ; மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா <!– மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தால், 5 ஆண்டுகளுக்கு விவசாயிகள் … –>

உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், 5 ஆண்டுகளுக்கு விவசாயிகள் மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துத்துள்ளார். திபியபுரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், வருகிற மார்ச் 10 ஆம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் போது பாஜக வெற்றி வெற்றி பெற்றால், 18 ஆம் தேதி ஹோலி பண்டிகையின் போது இலவச எரிவாயு சிலிண்டர்கள் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தார். 7 கட்டங்களாக … Read more

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த மதரஸா ஆசிரியர் கைது

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் பத்தனம் திட்டாவில் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக மதரஸா பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.  குற்றம் சாட்டப்பட்டவர் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஸ்வாலிஹ் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. பெற்றோர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் ஆசிரியரை கைது செய்து காவலில் வைத்தனர். பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் 11க்கும் குறைவான வயதுடையவர்கள்.அந்த குழந்தைகளிடம் ரகசிய வாக்குமூலத்தை பதிவு செய்ய போலீசார் … Read more

கார் ஏற்றி விவசாயிகள் படுகொலை சிறையில் இருந்து ஆசிஷ் விடுதலை

லக்கிம்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர்கேரியில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களின் மீது ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதி 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.  இந்த வழக்கில் ஆசிஷ் மித்ரா உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த வாரம் ஜாமீன் வழங்கியது. இதற்கான சட்ட நடைமுறைகள் முடிந்து, … Read more

பஞ்சாபி நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழப்பு

பஞ்சாப் மாநில நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். ஹரியானா மாநிலம் சோனிபட் அருகே இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இதனை சோனிபட் போலீசார் உறுதி செய்துள்ளனர். 2021 குடியரசு தினத்தன்று செங்கோட்டை வன்முறை வழக்கில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.  37 வயதான அவர் 2015 முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மொத்தம் ஆறு படங்களில் அவர் நடித்துள்ளார்.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் தீப் சிங் சித்து உயிரிழப்பு

டெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வெடித்த கலவரத்தில் தொடர்புடைய பஞ்சாபி நடிகர் தீப் சிங் சித்து கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரியில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வெடித்த கலவரத்தில், செங்கோட்டையில் அத்துமீறிக் கொடி ஏற்றப்பட்டது. இதனை ஏற்றியவர் பஞ்சாபி நடிகர் தீப் சிங் சித்து. இவர்தான் ஒரு பகுதி விவசாயிகளைத் தூண்டி ஊர்வலத்தில் மாற்றங்கள் செய்ததாக அப்போது குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. … Read more

மூன்று மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க சதி… சிவசேனா பகீர் தகவல்!

சிவசேனை எம்பி சஞ்சய் ராவத் , மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பாஜகவைச் சேர்ந்த சில தலைவர்கள் என்னை தொடர்பு கொண்டு, மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க உதவிமாறு அழைப்பு விடுத்தனர். இல்லாவிட்டால் அதன் எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்தனர். அதற்குப் பிறகுதான் அமலாக்கத் துறை அதிகாரிகள் எனக்கு நெருக்கமானவர்களுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கினர். உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்க மத்திய விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இதற்கெல்லாம் நாங்கள் … Read more

ரூ.22,842 கோடி மோசடி – கப்பல் கட்டும் நிறுவன இயக்குநர்களை பிடிக்க சிபிஐ தீவிரம் <!– ரூ.22,842 கோடி மோசடி – கப்பல் கட்டும் நிறுவன இயக்குநர்களை… –>

22,842 கோடி ரூபாய் மோசடி வழக்கில் குஜராத் கப்பல் கட்டும் நிறுவன இயக்குநர்களை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து சிபிஐ தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. சூரத்தில் கப்பல் கட்டுமான தளங்களைக் கொண்டு இயங்கி வரும் ஏ.பி.ஜி. நிறுவனத்தின் மீது கடந்த 2019ஆம் ஆண்டு சில வங்கிகள் கடன் மோசடி புகார்களை அளித்தன. அந்தப் புகார்கள் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 28 வங்கிகளில் கடன் பெற்று ஏ.பி.ஜி நிறுவனத்தின் இயக்குநர்கள் ரிஷி அகர்வால், … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலை தீவிரவாதிகளின் வீட்டில் காணலாம்: ராகுல் காந்தி அதிரடி பிரசாரம்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ராஜ்புராவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில் பிரதமர் மோடி மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக தாக்கினார். தலைவர்களின் முகத்தைப் பார்த்து ஏமாறாமல், அவர்களுக்குப் பின்னால் இருந்து செயல்படும் “மறைந்திருக்கும் சக்திகளை” புரிந்து கொள்ள அவர்களின் நடவடிக்கைகளை பார்க்க வேண்டும் என்று வாக்காளர்களிடம் ராகுல் காந்தி … Read more

நாட்டின் எல்லைகள் குறித்த பதிவு விவகாரம்: ராகுல்காந்தி மீது தேசதுரோக வழக்கு?: அசாம் மாநில போலீஸ் தகவல்

கவுகாத்தி: ராகுல் காந்தியின் டுவிட்டர் பதிவில் வடகிழக்கு மாநிலங்கள் எதையும் குறிப்பிடாததால், நாட்டின் ஒற்றுமையை சீர்குலைப்பதாக குற்றம்சாட்டி அசாம் மாநில பாஜக உறுப்பினர்கள் காவல்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்களை அளித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக போலீஸ் தேச துரோக வழக்கு பதிய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த 10ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட டுவிட்டில், ‘நமது ஒன்றியத்தில்தான் பலம் உள்ளது. நமது கலாசாரங்களின் ஒன்றியம். நமது பன்முகத்தன்மையின் ஒன்றியம். நமது மொழிகளின் ஒன்றியம். நமது … Read more

மகாராஷ்டிரா: பிளாஸ்டிக் கண்டெய்னருக்குள் தலை சிக்கியதால் தவிக்கும் சிறுத்தை!

மகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் கண்டெய்னருக்குள் தலை மாட்டிக்கொண்ட சிறுத்தைக்குட்டியை மீட்க வனத்துறையினர் தேடிவருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திலுள்ள பத்லாபூர் பகுதியில் சிறுத்தைக்குட்டி ஒன்று தென்பட்டது. காரில் சென்ற ஒரு நண்பர்கள் குழு வீடியோ பதிவிட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வைரலாகிவருகிறது. அதில் பிளாஸ்டிக் கண்டெய்னருக்குள் தலை மாட்டிக்கொண்ட சிறுத்தைக்குட்டி சிரமப்பட்டிருக்கிறது. அவர்கள் அதனைக் காப்பாற்ற அருகே சென்றபோது அது காட்டுக்குள் ஓடிவிட்டது. சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோவைப் பார்த்த மகாராஷ்டிரா வனத்துறையினர், சிறுத்தைக்குட்டியை … Read more