‘ராவ் சாப் நல்லா சண்ட போடுறீங்க’: கேசிஆருக்கு ஆதரவு தெரிவித்த தேவகவுடா

தெலங்கானா முதல்வராக இருக்கும் கே.சந்திரசேகர ராவ் காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். தெலுங்கு தேசம் கட்சியில் மூத்த அமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்த அவர், தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்காக 2001ஆம் ஆண்டில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி எனும் கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து பல ஆண்டுகள் போராட்டத்துக்கு பின்னர், 2014ஆம் ஆண்டில் தெலங்கானா மாநிலம் உதயமானது. புதிய மாநிலத்தில் தனது தலைமையிலான ஆட்சியையும் கே.சந்திரசேகர ராவ் அமைத்தார். ஆனால், ஐந்தாண்டுகள் முழுமையடைவதற்கு எட்டு … Read more

கடலில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்களை காப்பாற்றிய காவலரை நேரில் அழைத்து பாராட்டி கவுரவித்த கூடுதல் டி.ஜி.பி <!– கடலில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்களை காப்பாற்றிய காவலரை… –>

புதுச்சேரியில், கடலில் குளித்துக் கொண்டிருந்த போது ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்களை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர் சவுந்தரராஜனை, கூடுதல் டி.ஜி.பி., நேரில் அழைத்து பாராட்டி கவுரவித்தார். கிருஷ்ணகிரியை சேர்ந்த விஷ்ணு, சபரிஷ் ஆகிய இளைஞர்கள், நேற்று புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே உள்ள கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்த கடலோர காவல் படை காவலர் சவுந்தரராஜன் சீருடையுடன் கடலில் இறங்கி இருவரையும் … Read more

ரெயில்வே கேட் மூடியிருக்கையில் அலட்சியமாக கிராசிங்… நூலிழையில் உயிர் தப்பிய வாலிபர்

மும்பை: இருசக்கர வாகனத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ரெயில் வந்ததால் பைக்கை தண்டவாளத்தில் போட்டுவிட்டு ஓடியதால் வாலிபர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ரெயில்வே கேட் மூடப்பட்டிருக்கும் நிலையில், இளைஞர் ஒருவர் பைக்கில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்கிறார். அப்போது ரெயில் அதிவேகமாக வருவதை கண்ட அவர், தண்டவாளத்திலேயே பைக்கை போட்டுவிட்டு எகிறி குதித்து ஓட்டம் பிடித்தார். இதனால் அவரது பைக் மீது ரெயில் பயங்கரமாக … Read more

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை: முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது சிபிஐ

டெல்லி: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்தது. இயற்கைக்கு மாறான உயிரிழப்பு என்று முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்த நிலையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சையை அடுத்த மைக்கேல்பட்டி தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக குற்றச்சாட்டு … Read more

மக்களவைத் தேர்தலில் நாடெங்கிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம் – சிவசேனா அதிரடி அறிவிப்பு

அடுத்த மக்களவைத் தேர்தலில் நாடெங்கிலும் வேட்பாளர்களை களமிறக்க உள்ளதாக மகாராஷ்டிராவில் ஆளுங்கட்சியாக உள்ள சிவசேனா தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸின் வரிசையில் சிவசேனாவும் தேசிய அரசியலில் தீவிரம் காட்ட முனைந்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் சிவசேனா கட்சி நாடெங்கும் வேட்பாளர்களை களமிறக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே தலைமையில் சிவசேனா நாடெங்கும் கால் பதிக்கும் என்றும், … Read more

‘‘நீங்கள் பெரிய போரில் ஈடுபட்டுள்ளீர்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’’- மம்தா அணியில்  இணையும் தேவகவுடா

ஹைதராபாத்: ‘‘வாழ்த்துக்கள், நீங்கள் பெரிய போரில் ஈடுபட்டுள்ளீர்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவை சந்தித்து பேசிய முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகவுடா கூறினார். மத்தியில் பாஜகவிற்கு மாற்றாக புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவுக்கு பின்னர் … Read more

மார்ச் 18 முதல் இலவச கேஸ்: மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகின்றன. ஆனால், தற்போது ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி அவற்றின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை இருந்தாலும், கடந்த காலங்களை ஒப்பிடும் போது விலை மலை போல் ஏறியுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில், உங்கள் வீடுகளுக்கு மார்ச் 18ஆம் தேதி முதல் இலவச கேஸ் வந்து சேரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்துக்கு … Read more

ராஜஸ்தானில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரம் – சிபிஐ விசாரணை கோரி போராட்டம் நடத்திய பா.ஜ.கவினரை விரட்டியடித்த போலீசார் <!– ராஜஸ்தானில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த … –>

ராஜஸ்தான் மாநிலத்தில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரி போராட்டம் நடத்திய பா.ஜ.க.வினரை போலீசார் தண்ணீரை பீய்ச்சி விரட்டியடித்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அங்கு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள் கசித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து, இரண்டாம் நிலை தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி எதிர்க்கட்சியான பா.ஜ.க.வினர் ஜெய்ப்பூரில் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை சுற்றி போலீசார் பேரிகார்டுகள் அமைத்து கண்காணித்தனர். சிலர் … Read more

மகாராஷ்டிரா உள்ளிட்ட 3 மாநில அரசுகளை கவிழ்க்க சதி நடக்கிறது: சஞ்சய் ராவத் பரபரப்பு பேட்டி

மும்பை: மகராஷ்டிர அரசைக் கவிழ்ப்பதற்காக மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துவதாக சிவ சேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி உள்ளார். மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி தலைவர்களை குறிவைத்து மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்துவதாகவும், இந்த அழுத்தங்களுக்கெல்லாம் அடிபணிய மாட்டோம் என்றும் அவர் கூறினார். “பாஜகவைச் சேர்ந்த சில தலைவர்கள் என்னை தொடர்பு … Read more

மருத்துவர், வக்கீல், தொழிலதிபர் எனக்கூறி 7 மாநிலத்தை சேர்ந்த 14 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன் கைது

* நடுத்தர வயது, விவாகரத்து பெற்றவர்களை குறிவைத்து மடக்கியது எப்படி?புவனேஸ்வர்: மருத்துவர், வக்கீல், தொழிலதிபர் எனக்கூறி 7 மாநிலத்தை சேர்ந்த 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட கல்யாண மன்னனை புவனேஸ்வர் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஒடிசா மாநிலம் தலைநகர் புவனேஸ்வர் காவல்துறை துணை ஆணையர் உமாசங்கர் தாஷ் கூறுகையில், ‘டெல்லி, பஞ்சாப், அசாம், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட ஏழு மாநிலங்களைச் சேர்ந்த 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட … Read more