பாறை இடுக்கில் சிக்கி மீட்கப்பட்ட வாலிபர் மீது வனத்துறை வழக்கு

திருவனந்தபுரம்: கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மலம்புழாவில் குரும்பாச்சி மலை பகுதி உள்ளது. செரடு பகுதியை சேர்ந்த பாபு என்ற வாலிபர் தனது நண்பர்களுடன் கடந்த 7-ந் தேதி மலைக்கு சென்றார். மலையேறும்போது கால் வழுக்கி தவறி விழுந்தார். அதிர்ஷ்டவசமாக பாறை இடுக்கில் சிக்கி கொண்டார். அவருடன் சென்ற நண்பர்கள், இதுபற்றி தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று பாபுவை மீட்க முயன்றனர். ஆனால் பாபு சிக்கி இருந்த பகுதி ஆபத்தான பாறை … Read more

கடந்த 2014ம் ஆண்டிலேயே எனது ஹெலிகாப்டர் பறக்க அனுமதிக்கவில்லை: பஞ்சாப் பிரசாரத்தில் மோடி பேச்சு

ஜலந்தர்: கடந்த 2014ம் ஆண்டிலேயே எனது ஹெலிகாப்டர் பஞ்சாப்பில் பறக்க அனுமதிக்கவில்லை என்று ஜலந்தரில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 117  தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின்   பஞ்சாப் லோக் காங்கிரஸ், சுக்தேவ் சிங் திண்ட்சாவின்  சிரோமணி அகாலி தளம்  (சன்யுக்த்) ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள … Read more

ம.பி.யிலும் ஹிஜாப் எதிர்ப்பு – விஷ்வ இந்து பரிஷத் போராட்டத்தால் கல்லூரியில் அதிரடி தடை

கர்நாடகாவை தொடர்ந்து மத்திய பிரதேசத்துக்கும் ஹிஜாப் எதிர்ப்பு பரவி இருக்கிறது. அங்கு ஒரு கல்லூரியில் ஹிஜாபுக்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ்வ இந்து பரிஷத் நடத்திய போராட்டத்தால், கல்லூரி நிர்வாகம் சர்ச்சைக்குரிய உத்தரவை பிறப்பித்துள்ளது. கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக ஹிஜாப் விவகாரம் பெரும் புயலை கிளப்பி வந்தது. உடுப்பி, மாண்டியா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருதரப்பு மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் … Read more

‘‘பிஹாரை கொள்ளையடித்தவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்’’- சுஷில் மோடி வரவேற்பு

பாட்னா: கால்நடைத் தீவன 5-வது ஊழல் வழக்கிலும் லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதை பிஹார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி வரவேற்றுள்ளார். பிஹாரை கொள்ளையடித்தவர்கள் இப்போது தண்டிக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார். பிஹார் முதல்வராக லாலு பிரசாத் பதவி வகித்த காலத்தில் கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட தீவனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ தரப்பில் 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் லாலு பிரசாத் … Read more

லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி – சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

கால்நடை தீவன ஊழல் தொடர்பான 5வது வழக்கில், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், 1991 – 1996 ஆம் ஆண்டு வரை பீகார் மாநில முதலமைச்சராக பதவி வகித்தார். அப்போது, கால்நடைகளுக்கு தீவனம் வாங்கிய விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரித்து குற்றப் பத்திரிகை … Read more

ம.பி முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா

மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ஷிவ்ராஜ் சிங் கவுகான் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- தொற்று அறிகுறிகள் தென்பட்டதால், கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டேன். அதில், கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. எனக்கு சாதாரண அறிகுறிகளே உள்ளன. அதனால் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். எனது பணிகளை காணொளி மூலம் செய்வேன். நாளை நடைபெறவுள்ள சந்த் சிரோமணி ரவிதாஸ் … Read more

மாடலாக மாறிய 60 வயதான கூலித் தொழிலாளி: இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்

கேரளா: கேரளாவில் 60 வயதான கூலித் தொழிலாளி ஒருவர் மாடலாக மாறி, இணையத்தை கலக்கி வருகிறார். வெண்ணைகாடு பகுதியைச் சேர்ந்த மம்மிக்கா என்ற தினக்கூலித் தொழிலாளியின் புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. தினமும் லுங்கி மற்றும் சட்டையில் வலம் வரும் இவர், தற்போது கோட்டு சூட்டுடன் இருக்கும் இவரது புகைப்படம் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. மம்மிக்காவிற்கு சிகை அலங்காரம் செய்து, வித்தியாசமான முறையில் அவரது புதிய தோற்றத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். … Read more

சன்சத் யூடியூப் தொலைக்காட்சி ஹேக் செய்யப்பட்டதாக தகவல்

நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சன்சத் யூடியூப் தொலைக்காட்சி ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மர்ம நபர்களால் யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக சன்சத் டிவி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாட்டை களைய யூடியூப் நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது என்றும் சன்சத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இதையும் படிக்க: பாறை இடுக்கில் சிக்கிய இளைஞரை மீட்கும் பணிக்கு ரூ.75 லட்சம் செலவுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் காங்கிரஸில் இருந்து திடீர் விலகல்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஸ்வினி குமார் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மத்திய சட்டத் துறை அமைச்சராக இருந்தவர் அஸ்வனி குமார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் உள்ளிட்டோருக்கு நெருக்கமானவர். காங்கிரஸ் சார்பில் பல்வேறு வழக்குகளில் வழக்கறிஞராகவும் ஆஜராகி வந்தார். அஸ்வினி குமார் இந்தநிலையில் அஸ்வினி குமார் காங்கிரஸில் இருந்து … Read more

மோடி வீட்டில் வந்து பிறந்த "சுஷ்மா சுவராஜ்"… பிரதமர் பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த பாஜக தலைவருமான சுஷ்மா சுவராஜின் 70வது பிறந்த நாளையொட்டி ஒரு சுவாரஸ்யமான தகவலை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பு முதல் பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்தவர் சுஷ்மா சுவராஜ் . மிகுந்த நிதானத்துடன் கூடியவர். நிறைந்த அனுபவம் கொண்டவர். மிகச் சிறந்த பேச்சாளர். கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி மறைந்தார் சுஷ்மா சுவராஜ். அப்போதுதான் பாஜக 2வது முறையாக ஆட்சிக்கு வந்து 2 … Read more