தோரந்தா கருவூல ஊழல் வழக்கு: லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பு- நீதிமன்றம் அதிரடி

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4ல் 3 வழக்குகளில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என அறிவித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக ஏற்கனவே 14 ஆண்டுகள் சிறை தண்டனையில் இருக்கும் லாலு பிரசாத், உடல்நலக் குறைவு காணமாக ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இந்நிலையில் தோரந்தா கருவூலத்தில் இருந்து ரூ.139 கோடி ஊழல் செய்த வழக்கு தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை கடந்த ஜனவரி மாதம் 29-ம் தேதி நடைபெற்றது. அப்போது தீர்ப்பை ஒத்திவைத்து … Read more

வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டு வழக்கை ஏன் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக்கூடாது: உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீட்டு வழக்கை ஏன் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக்கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அரசியல் சாசன பிரச்சனைகள் குறித்து அரசியல் சாசன அமர்வு தான் முடிவு செய்ய முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீட்டில் தான் வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு தரப்படுகிறது என தெரிவித்தது.    

மும்பை: ரயிலில் அடிபட்டு சுக்குநூறான பைக்; நூலிழையில் தப்பிய ஓட்டுநர் – வைரல் வீடியோ

மும்பையில் ரயில் வரும்போது தண்டவாளத்தை கடக்க முயன்றவரின் பைக் சுக்குநூறாக சிதறிய நிலையில், பைக் ஓட்டியவர் நூலிழையில் உயிர்தப்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மும்பையில் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் வரும்போது இருபக்கமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ரயில்வே கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், விதிகளை மீறி கதவுகளுக்குள் புகுந்து தண்டவாளத்தை கடக்க முயன்ற நபரின் மோட்டார் சைக்கிள் ரயிலில் சிக்கி சின்னாபின்னமானது. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மீது பைக் மோதி நொறுங்கும் வீடியோ காட்சிகள் தற்போது … Read more

7 மாநிலங்களில் 14 பெண்களை மணந்தவர் கைது: ஒடிசா போலீஸ் வலையில் சிக்கியதன் பின்னணி

புவனேஸ்வர்: ஒடிசாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 48 ஆண்டுகளில் 7 மாநிலங்களைச் சேர்ந்த 14 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது. கடைசியாக அவர் திருமணம் செய்த பெண் அந்த நபரின் தில்லுமுல்லு போக்கை அறிந்து போலீஸில் புகார் கூற, போலீஸார் அந்த நபரை கைது செய்தனர். ஒடிசா மாநிலம் கேந்தரப்பா மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நபருக்கு இப்போது வயது 60-ஐ கடந்துள்ளது. அவருடைய திருமண நாடகங்கள் குறித்து ஒடிசா போலீஸார் கூறியது: ‘காமேஷ் சந்திர … Read more

மாத ஓய்வூதியம் அதிகரிப்பு – அரசு ஊழியர்கள் செம ஹேப்பி!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் மாத குடும்ப ஓய்வூதியத்தை அதிகரித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் ஜெய் ராம் தாக்குர் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை கருத்தில் கொண்டு, ஆளும் பாஜக அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. … Read more

ராகுல் காந்தியின் ட்வீட் பதிவுக்கு எதிராக 1000 பேர் போலீசில் புகார்- பாஜக

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 10-ம் தேதி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், எங்கள் ஒன்றியத்தில் பலம் உள்ளது. நமது கலாச்சாரங்களின் ஒன்றியம். எங்கள் பன்முகத்தன்மை ஒன்றியம். எங்கள் மொழிகளின் ஓன்றியம். எங்கள் மக்கள் ஒன்றியம். நமது மாநிலங்களின் ஒன்றியம். காஷ்மீர் முதல் கேரளா வரை. குஜராத்தில் இருந்து மேற்கு வங்கம் வரை இந்தியா அதன் அனைத்து வண்ணங்களிலும் அழகாக இருக்கிறது. இந்தியாவின் ஆன்மாவை அவமதிக்காதீர்கள.. என்று குறிப்பிட்டிருந்தார். இந்த … Read more

முன்னாள் ஒன்றிய சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகல்

டெல்லி: முன்னாள் ஒன்றிய சட்ட அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அஸ்வினி குமார் கட்சியிலிருந்து விலகினார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் மூலம் தகவல் அளித்துள்ளார்.   

மாடலாக மாறிய 60 வயது கூலித்தொழிலாளி: இணையத்தில் வைரல்

கேரளாவில் 60 வயதான கூலித் தொழிலாளி ஒருவர் மாடலாக மாறி, இணையத்தை கலக்கி வருகிறார். வெண்ணைகாடு பகுதியைச் சேர்ந்த மம்மிக்கா என்ற தினக்கூலித் தொழிலாளியின் புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. தினமும் லுங்கி மற்றும் சட்டையில் வலம் வரும் இவர், தற்போது கோட்டு சூட்டுடன் இருக்கும் இவரது புகைப்படம் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. மம்மிக்காவிற்கு சிகை அலங்காரம் செய்து, வித்தியாசமான முறையில் அவரது புதிய தோற்றத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். இதையும் … Read more

உஜ்ஜைனியில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலின் எஞ்சிய பகுதிகள் கண்டுபிடிப்பு

உஜ்ஜைனி: மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள பட்நகர் தாலுகா, கல்மோரா என்ற கிராமத்தில் அகழ்வுப் பணிகள் நடந்து வருகின்றன. மாநில தொல்பொருள் ஆய்வுத் துறை சார்பில் டாக்டர் விஷ்ணு தர் வாகன்கர் ஆராய்ச்சி நிலையம் இந்த அகழ்வுப் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சுமார் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலின் எஞ்சிய பகுதிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆய்வு அதிகாரி டாக்டர் துருவேந்திர ஜோதா கூறியதாவது: 2 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட நில அளவைப்பணியின்போது … Read more

திருப்பதி பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்: நாளை முதல் அமல்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய இலவச தரிசனம், கட்டண தரிசனம், விஐபி தரிசனம், விவிஐபி தரிசனம் என பல்வேறு முறைகள் இருக்கின்றன. இதில் சாதாரண மக்கள் இலவச தரிசனத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாகவே தரிசன டிக்கெட்டுகள் விற்பனையாகிவந்த நிலையில் நாளை முதல் நேரடியாக விற்பனையாக உள்ளது. இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. “திருப்பதி … Read more