காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்: உ.பி. 23%, கோவா 26%, உத்தராகண்ட் 19%

லக்னோ: உத்தராகண்ட், கோவா சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. உ.பி.யில் 2ஆம் கட்ட தேர்தலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி, உத்தரப் பிரதேசத்தில் 23.03 % வாக்குப்பதிவாகியுள்ளது. கோவாவில் 26.63 % மற்றும் உத்தராகண்டில் 18.97% வாக்குப்பதிவாகியுள்ளது. கோவா மாநிலத்தில் விறுவிறு வாக்குப்பதிவு: கோவா சட்டப்பேரவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 11 மணி நிலவரப்படி கோவாவில் 26.63 % வாக்குப்பதிவாகியுள்ளது. “கோவா … Read more

ஆளுநர்களுக்கு எதிராக.. அணி திரளும் முதல்வர்கள்.. மமதா போடும் பலே பிளான்!

ஆளுநர்களுக்கு எதிராக பாஜக அல்லாத முதல்வர்களை அணி திரட்டத் திட்டமிட்டுள்ளார் மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி . அவரது இந்த அதிரடியின் பின்னணியில் பாஜகவுக்கு எதிரான வலுவான அணியை உருவாக்கும் திட்டம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அகில இந்திய அளவில் அதிரடியான முதல்வர் ஒருவரைப் பார்த்து ரொம்ப காலமாகி விட்டது. முன்பு என்.டி. ராமாராவ் இருந்தார். தனக்கோ தனது அரசுக்கோ ஏதாவது பிரச்சினை வந்தால் டெல்லியை முகாமிட்டு அதிர வைத்து விடுவார். 1984ம் ஆண்டு என்டிஆர் சிகிச்சைக்காக … Read more

பள்ளிக்கு வந்த சிறுமியரிடம் ஹிஜாப்பை எடுத்துவிட்டு உள்ளே வரும்படி கூறிய ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர் <!– பள்ளிக்கு வந்த சிறுமியரிடம் ஹிஜாப்பை எடுத்துவிட்டு உள்ளே … –>

கர்நாடகத்தின் மாண்டியாவில் ஒரு பள்ளியில் ஹிஜாப்புடன் வந்த சிறுமியரை உள்ளே அனுமதிக்கும்படி பெற்றோரும், ஹிஜாப்பை எடுத்துவிட்டு வரும்படி ஆசிரியரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கர்நாடகத்தில் பத்தாம் வகுப்பு வரையுள்ள பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாண்டியாவில் உள்ள ஒரு பள்ளிக்கு ஹிஜாப் அணிந்த சிறுமியரைப் பெற்றோர் அழைத்து வந்தனர். வாயிலில் நின்ற ஆசிரியர் ஹிஜாப்பை அகற்றிவிட்டு உள்ளே வரும்படி மாணவியரைக் கேட்டுக்கொண்டார்.   அதை ஏற்க மறுத்த பெற்றோர் முதலில் உள்ளே அனுமதிக்கும்படியும், வகுப்புக்குச் சென்றபின் ஹிஜாப்பை அகற்றிக்கொள்ளலாம் … Read more

மேகதாது அணை திட்டம் – தமிழகத்தின் எதிர்ப்பில் நியாயமில்லை என்கிறார் தேவகவுடா

பெங்களூரு: காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணையைக் கட்ட கர்நாடகா அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  இந்த அணை கட்டப்பட்டால் தமிழக டெல்டா விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழக அரசு மேகதாது அணைத் திட்டத்திற்கு தொடர்ந்து  எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்த மத்திய சுற்றுச்சூழல்துறை  இணை மந்திரி அஸ்வினி குமார், மேகதாது அணை  கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு – கர்நாடகா இடையே சுமூக  முடிவு எட்டப்பட்டால்  மட்டுமே … Read more

ரவிதேஜா படம் மீது வழக்கு

புதுடெல்லி: ரவிதேஜா நடித்துள்ள கில்லாடி படம் மீது பாலிவுட் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். ரவிதேஜா நடிப்பில் தெலுங்கில் சமீபத்தில் வெளியான படம் கில்லாடி. இதே பெயரில் இந்தியில் ஒரு படம் வெளியானது. அதில் அக்‌ஷய் குமார் நடித்திருந்தார். அந்த படத்தை ரதன் ஜெயின் தயாரித்து இருந்தார். இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரத்தன் ஜெயின் தாக்கல் செய்த மனுவில், ‘கில்லாடி என்ற பட பெயர் இந்தியா முழுமைக்கும் பொதுவானது. அந்த தலைப்பை நான் பதிவு செய்து … Read more

பிஎஸ்எல்வி சி-52: வெற்றிகரமாக செலுத்திய விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: பிஎஸ்எல்வி சி52 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு இந்திய விண்வெளி விஞ்ஞானிகளைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3 செயற்கைக்கோள்களை சுமந்தவாறு பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் இன்று (பிப்.14) காலை விண்ணில் சீறிப் பாய்ந்தது. 2022ல் இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோளான பிஎஸ்எல்வி சி-52 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. மொத்தம் 1,710 கிலோ எடை கொண்ட ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளான இஓஎஸ்-04 , வேளாண்மை, மண்ணின் ஈரப்பதம், நீர்வளம் போன்றவற்றுக்கு தேவையான உயர்தர வரைபடங்களை அனைத்து காலநிலைகளிலும் … Read more

ஹிஜாப்: எல்லோர் கைகளிலும் கறை

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவது தடை செய்யப்பட்ட விவகாரம் தீயாய் பற்றி எரிகிறது. இதில் யார் தரப்பில் தவறு என்று யோசித்தால், அத்தனை தரப்பினர் கையிலும் கறை இருப்பதை உணர முடியும். அரசு தரப்பு செய்த தவறு என்ன? உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் (மேல்நிலைப்பள்ளி) மாணவ-மாணவிகள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. ஆனால், இங்கு பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த … Read more

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர்ப்பதற்றம் காரணமாக இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி <!– ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர்ப்பதற்றம் காரணமாக இன்று இந்த… –>

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர்ப்பதற்றம் காரணமாக இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. வாரத்தின் முதல் நாளான இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியது முதலே பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்திருந்தன. இந்நிலையில் இன்றைய வணிக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,747 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 56,406 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 532 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 16,843 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் … Read more

எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரசுக்கு இடம் இல்லை – மம்தா பானர்ஜி உறுதி

கொல்கத்தா:  மத்தியில் பாஜகவிற்கு மாற்றாக புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.  ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவுக்கு பின்னர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதலமைச்சர்கள் சந்திப்பு டெல்லிக்கு வெளியே நடைபெறும் என்று மம்தா பானர்ஜி உடனான தொலைபேசி உரையாடலுக்கு பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் இந்த சந்திப்பில் … Read more

டெல்லியில் போராட்டம் நடத்த சென்ற தமிழக விவசாயிகளை தடுத்து திரும்பி அனுப்பிய போலீசார்

புதுடெல்லி: நெல், கரும்புக்கு அடிப்படை ஆதார விலையை உயர்த்தக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த திருச்சியிலிருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் ரயில் மூலம் நேற்று காலை புதுடெல்லி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர். ரயில் நிலையத்திலேயே அவர்கள் ஒன்றிய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த டெல்லி போலீசார் தமிழக விவசாயிகள் அனைவரையும் தடுத்து … Read more