திருப்பதிக்கு ஒகே… ஆனால் பாலாஜிக்கு நோ… வலுக்கும் எதிர்ப்பு!

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திரா, தெலங்கானா என்று இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. ஹைதராபாத்தை தலைநகராக கொண்ட தெலங்கானா மாநிலம் மொத்தம் 31 மாவட்டங்களை கொண்டுள்ளது. அதேசமயம், ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 13 மாவட்டங்களே உள்ளன. இந்த 13 மாவட்டங்களும் அதிக பரப்பளவு கொண்டவையாக இருப்பதாலும், மாவட்ட தலைநகரங்கள் வெகு தொலைவில் உள்ளதாலும் அன்றாடம் அரசு சார்ந்த பணிகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உளளிட்ட இடங்களுக்கு செல்ல பொதுமக்கள் அதிக தூரம் பயணிக்க … Read more

ஏர் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக துருக்கி ஏர்லைன்சின் முன்னாள் தலைவர் நியமனம் <!– ஏர் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக துருக்கி ஏர்… –>

ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநராகத் துருக்கி ஏர்லைன்சின் முன்னாள் தலைவர் இல்கர் ஐசி நியமிக்கப்பட்டுள்ளார். அரசிடம் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாட்டா குழுமம் விலைக்கு வாங்கியது. இதையடுத்து ஏர் இந்தியா நிர்வாகத்தை ஜனவரி 27ஆம் நாள் டாட்டா குழுமம் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் இன்று ஏர் இந்தியா இயக்குநரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் டாட்டா சன்ஸ் தலைவர் சந்திரசேகரனும் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தின் முடிவில் ஏர் இந்தியாவின் … Read more

கொரோனா தடுப்பூசி டோஸ்கள் எண்ணிக்கை 173 கோடியை தாண்டியது

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் பயனாளர்களுக்கு போட ப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணக்கை 173 கோடியே 38 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு, இதுவரை 5 கோடியே 24 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், ஒரு கோடியே 63 லட்சம் பேர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதார மந்திரி … Read more

அமைதியாக நடந்த ஒரேகட்ட தேர்தல் கோவா-79%, உத்தரகாண்ட்-62% வாக்குப்பதிவு: உ.பி.யில் 2ம் கட்டமாக 55 இடங்களிலும் நடந்தது

புதுடெல்லி: கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் நேற்று ஒரே கட்டமாக எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இதில், கோவாவில் 79% வாக்குகளும், உத்தரகாண்டில் 62% வாக்குகளும் பதிவாகின. உத்தரபிரதேசத்தில் 55 தொகுதிகளுக்கு நடந்த 2ம் கட்ட தேர்தலில் 60% வாக்குகள் பதிவாகின. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை கடந்த மாதம் 8ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, உத்தரப்பிரதேசத்தில் 7 … Read more

சாமியாரிடம் பங்குச் சந்தை ரகசியங்களை பகிர்ந்த முன்னாள் அதிகாரி – செபி குற்றச்சாட்டு

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, பங்குச் சந்தை தொடர்பான ரகசிய தகவல்களை சாமியார் ஒருவரிடம் பகிர்ந்ததாக பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபி குற்றம்சாட்டியுள்ளது. சித்ரா ராமகிருஷ்ணா தேசிய பங்குச் சந்தையின் தலைமை பொறுப்பை வகித்தபோது, இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவரிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்றதாக செபி தெரிவித்துள்ளது. அந்த சாமியாரிடம் வணிக ரீதியிலான திட்டங்கள், நிர்வாக கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்கள், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் குறித்த முன்கூட்டிய … Read more

தினமும் 15,000… திருப்பதியில் நாளை முதல் தரிசன டோக்கன்கள் விநியோகம் – 2 டோஸ் செலுத்தியோருக்கே அனுமதி

திருப்பதி: திருப்பதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் சர்வ தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும், 2 தடுப்பூசிகள் சான்றிதழுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை இலவச தரிசனம் மூலம் தரிசிக்க நாளை செவ்வாய்க்கிழமை, காலை 9 மணி முதல் திருப்பதியில் 3 இடங்களில் தினமும் 15,000 டோக்கன்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது. கரோனா தொற்று பரவும் அபாயம் இருந்ததால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலசவ … Read more

எல்ஐசி பங்குகள் விரைவில் விற்பனை… ஆக்ஷனில் இறங்கிய மத்திய அரசு!

நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை விற்று, அதன் மூலம் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி திரட்டப்படும் என்று மத்திய அரசு தொடர்ந்து தெரிவித்து வந்தது. மத்திய அரசின் இந்த முடிவுகக்கு கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனாலும் எல்ஐசி பங்குகளை விற்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏஐ) அண்மையில் அனுமதி அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 1 ஆம் தேதி, … Read more

விவசாய இடுபொருட்களைக் குறைந்த விலையில் அரசு வழங்கி வருகிறது – பிரதமர் நரேந்திர மோடி <!– விவசாய இடுபொருட்களைக் குறைந்த விலையில் அரசு வழங்கி வருகிற… –>

விவசாயத்துக்குத் தேவையான இடுபொருட்களை உலகச் சந்தையைவிடக் குறைந்த விலையில் அரசு வழங்கி வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜலந்தரில் தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், கோவிலில் வழிபாடு நடத்தத் தாம் விரும்பிய நிலையில், அதற்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய இயலாது என மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தெரிவித்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார். பஞ்சாபில் 23 இலட்சம் விவசாயிகளுக்கு உழவர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், இயற்கை வேளாண்மையைச் சிறப்பாகச் செயல்படுத்த அரசு திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.   … Read more

பாடல் ஒலிப்பரப்புவதில் ஏற்பட்ட மோதல்: திருமண வீட்டில் குண்டு வீசி வாலிபரை கொன்ற கும்பல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த தோட்டடா பகுதியில் உள்ள ஒருவருக்கு நேற்று திருமணம் நடந்தது. திருமண வீட்டில் ஒலி பெருக்கி கட்டி பாடல்கள் ஒலிப்பரப்பபட்டது. அப்போது அங்கு வந்த சிலர், பாடல்களை சத்தமாக வைக்க கூடாது என்று கூறினர். இதனால் திருமண வீட்டில் இருந்தவர்களுக்கும், அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை மூண்டது. சிறிது நேரத்தில் தகராறு முற்றி மோதல் மூண்டது. அப்போது அங்கு ஒரு கும்பல் வேனில் வந்தனர். அதில் இருந்து … Read more

ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ.-வாக இல்கர் அய்சி நியமனம்: டாடா அறிவிப்பு

டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநராக இல்கர் அய்சி நியமனம் செய்யப்பட்டிருப்பதாக டாடா தெரிவித்திருக்கிறது. துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான இல்கர் அய்சி, ஏர் இந்தியாவின் சி.இ.ஓ.வாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.