வாசலோடு நிறுத்தி… பர்தாவைக் கழற்றிய டீச்சர்.. கர்நாடகத்தில் மீண்டும் பரபரப்பு!

கர்நாடகத்தில் இன்று பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டபோது ஹிஜாப் தொடர்பான பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கின. கர்நாடகத்தில் சில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் போடுவது தடை செய்யப்பட்டது. இதையடுத்து பிரச்சினை உருவாகி போராட்டங்கள் வெடித்தன. இதைத் தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்த நிலையில் இன்று 10ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு வருகை தந்தனர். ஆனால் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளை வாசலோடு நிறுத்தி அதை … Read more

கோவா, உத்ரக்காண்ட் மாநிலங்களில் அமைதியாக நடைபெற்றது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு <!– கோவா, உத்ரக்காண்ட் மாநிலங்களில் அமைதியாக நடைபெற்றது சட்டம… –>

கோவா, உத்ரக்காண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளளது. கோவாவில் மொத்தமுள்ள நாற்பது தொகுதிகளுக்கும், உத்தரகாண்டில் 70 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துச் சென்றனர். கோவா மாநிலத்தில் 78 சதவீதமும், உத்தரகாண்டில் 60 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல், உத்தர பிரதேத்தில் 2ஆம் கட்டமாக 55 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில் அங்கு 61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தலில் … Read more

கோவாவில் 78 சதவீதம், உத்தரகாண்டில் 59 சதவீத வாக்குப்பதிவு

பனாஜி: 70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கும், 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதேபோல், 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் இன்று 2ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. 55 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர் காலையில் வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருந்தது. அதன்பின்னர் விறுவிறுப்படைந்தது. பகல்  1 மணி நிலவரப்படி கோவாவில் 44.63 சதவீத வாக்குகளும், உத்தரகாண்டில் 35.21 சதவீத … Read more

ஏழுமலையானை தரிசிக்க இலவச டிக்கெட் திருப்பதியில் நாளை முதல் விநியோகம்

திருமலை: திருப்பதியில் நாளை முதல் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தற்போது அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த டிக்கெட்டுகள் அனைத்தும் ஒரு மாதத்திற்கு முன்னதாக தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. டிக்கெட் வெளியிட்ட 10 நிமிடங்களில் ஒரு மாதத்திற்கு உண்டான டிக்கெட்டுகள் … Read more

அமெரிக்காவுக்கு சென்ற கப்பலில் இருந்து கேரள சமையல் கலைஞர் மாயம்! அதிர்ச்சியில் உறவினர்கள்

தென் ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற சரக்குக் கப்பலில் பணிபுரிந்த இந்திய ஊழியர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் ஜஸ்டின் குருவில்லா (28). இவர் கடந்த 4 ஆண்டுகளாக ‘எம்.டி. ஸ்ட்ரீம் அட்லாண்டிக்’ என்ற சரக்கு கப்பலில் சமையல் கலைஞராக பணிபுரிந்து வந்தார். இந்த கப்பலானது கடந்த 31-ம் தேதி தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் இருந்து புறப்பட்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜஸ்டின் குருவில்லா நாள்தோறும் … Read more

ஆளுநர்கள் விவகாரத்தில் எதிர்க்கட்சி முதல்வர்கள் சந்திப்புக் கூட்டம்: காங்கிரஸை அழைக்க மம்தா மறுப்பு

கொல்கத்தா: ஆளுநர்களின் நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க, பாஜக அல்லாத எதிர்க்கட்சி முதல்வர்கள் சந்திப்புக் கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளது. எந்தவொரு மாநிலக் கட்சியுடனும் காங்கிரஸ் கட்சி இணக்கமாக இல்லை. அக்கட்சி தனக்கான பாதையில் தனித்து செயல்படுவதால், எங்களுக்கான பாதையில் நாங்கள் செல்கிறோம். பாஜகவுக்கு எதிராக, … Read more

பிரதமர் மோடியால் யாருக்கு பலன்? – ராகுல் காந்தி கடும் தாக்கு!

பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டு மக்களுக்கு எந்த பயனுமில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதலில், 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த … Read more

கடலில் குளித்த இளைஞர்கள் இருவரை இழுத்துச் சென்ற அலை.. நண்பர்களின் உதவியுடன் காப்பாற்றிய காவலர் <!– கடலில் குளித்த இளைஞர்கள் இருவரை இழுத்துச் சென்ற அலை.. நண்… –>

புதுச்சேரியில் கடலில் குளித்தபோது ராட்சத அலையால் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் இருவரை காவலர் ஒருவர் துணிந்து காப்பாற்றினார். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விஷ்ணு, சபரிஷ் என்ற இளைஞர்கள் நண்பர் திருமணத்தில் பங்கேற்பதற்காக புதுச்சேரி சென்றுள்ளனர். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மேலும் சில நண்பர்களுடன் தலைமைச் செயலகம் எதிரேயுள்ள கடல் பகுதியில் குளித்துள்ளனர். அப்போது இருவரையும் ராட்சத அலை ஒன்று இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. உடன் சென்ற நண்பர்கள் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் படை காவலர் … Read more

பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்து 4 பேர் பலி

இடாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலம் கிரா டாடி மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன், சுமார் 20 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. டாலியில் இருந்து நேற்று மாலை பாலின் நோக்கி சென்றபோது குமே பாலத்தின் அருகே, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்துள்ளது. இதில், வேனில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்த முதல்வர் பேமா காண்டு, வேதனை தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்க 4 மாநிலங்களுக்கு ரூ.1,154.90 கோடி நிதி ஒதுக்கீடு: ஒன்றிய அரசு

டெல்லி: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்க 4 மாநிலங்களுக்கு ரூ.1,154.90 கோடி நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஆந்திரா மாநிலத்துக்கு ரூ.225.60 கோடி, பீகார் மாநிலத்துக்கு ரூ.769 கோடி, குஜராத் மாநிலத்துக்கு ரூ.165.30 கோடி, சிக்கிம் மாநிலத்துக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.