இந்தியா வரும் பயணிகளுக்கு இனி 7 நாள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் இல்லை – மத்திய அரசு <!– இந்தியா வரும் பயணிகளுக்கு இனி 7 நாள் தனிமைப்படுத்துதல் கட… –>

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானப் பயணிகளுக்கான கட்டுப்பாடு தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. நாட்டில் தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், வெளிநாட்டு பயணிகள் 7 நாட்கள் கட்டாய வீட்டுத் தனிமைக்கு பதில், 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தி தங்களே தாங்களே கண்காணித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. பயணத்திற்கு 72 மணி நேரங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் அல்லது இருதவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட … Read more

வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தொடங்கும்- பஞ்சாப் மாநிலத்தில் மோடி பிரசாரம்

ஜலந்தர்: பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி முதல் முறையாக நேரடியாக பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். ஜலந்தரில் நடந்த பிரசார கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:- பஞ்சாப் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும். மாநிலத்தில் வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தொடங்கும்.  மாநில மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக சாத்தியமான அனைத்து பணிகளையும் மேற்கொள்வோம் என … Read more

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவியின் தந்தை சிபிசிஐடி விசாரணையை மட்டுமே … Read more

அமைதியாக நடைபெறும் கோவா தேர்தல் – புதிய கட்சிகளால் எகிறும் எதிர்பார்ப்பு

40 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட கோவாவுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணிக்கு தேர்தல் நிறைவடைய உள்ளது.   ஒட்டுமொத்தமாக தேர்தல் களத்தில் 301 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் மாநிலத்தை ஆளும் பாஜக தனித்து களம் காண்கிறது. காங்கிரஸ் கட்சி 37 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. மேலும், அதன் கூட்டணிக் கட்சியான கோவா முன்னேற்ற கட்சி மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி கட்சி … Read more

2 கோடீஸ்வரர்களுக்காக பிரதமர் மோடி கடினமாக உழைக்கிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 

சண்டிகர்: 2 கோடீஸ்வரர்களுக்காக பிரதமர் மோடி கடினமாக உழைக்கிறார், ஆனால் பஞ்சாப் விவசாயிகள் ஓராண்டாக பசியுடன் இருந்தனர் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். பஞ்சாபில் பிப்ரவரி 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. பஞ்சாபில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி இந்த முறை ஆட்சி அமைக்க முயல்கிறது. பாஜக ஆதரவில் பஞ்சாபில் ஆட்சி செய்த சிரோமணி அகாலி தளம், 3 வேளாண் சட்ட திருத்த மசோதாக்கள் பிரச்சினையில் பிரிந்தது. … Read more

'மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம்!' – முதல்வர் திடீர் பேட்டி!

பஞ்சாப் மற்றும் நாட்டின் பாதுகாப்பு பிரச்னைகளில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில், மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற … Read more

செயற்கைக்கோள் மூலம் இணையதள சேவை வழங்க உள்ள ஜியோ <!– செயற்கைக்கோள் மூலம் இணையதள சேவை வழங்க உள்ள ஜியோ –>

நாடு முழுவதும் செயற்கைக்கோள் மூலம் நேரடியாக இணையதள சேவை வழங்க உள்ளதாக ரிலையன்சின் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. லக்சம்பர்கை சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமாக எஸ்.இ.எஸ். உடன் இணைந்து ஜியோ நிறுவனம் இந்த சேவையை வழங்க உள்ளது. இதற்காக, ஜியோ விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் என்ற பெயரில் புதிதாக நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்.இ.எஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் இணைப்புகளை ஜியோ நிறுவனம் பயன்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியா மற்றும் சுற்றியுள்ள நாடுகளின் இணையதள நிறுவனங்களுக்கும், … Read more

பாறை இடுக்கில் சிக்கிய வாலிபரை மீட்க ரூ.75 லட்சம் செலவு

திருவனந்தபுரம்: கேரளாவின் பாலக்காட்டை அடுத்த செரடு பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 23 ). மலை ஏறுவதில் ஆர்வம் கொண்ட பாபு, கடந்த 7-ந் தேதி மாலை தனது நண்பர்களுடன் மலம்புழா பகுதியில் உள்ள மலைக்கு சென்றார். அங்கு மலை ஏறும்போது, கால் தவறி கீழே விழுந்தார். இதில் செங்குத்தான பாறை ஒன்றின் இடையே சிக்கி கொண்டார். அங்கிருந்தபடி தன்னை மீட்கும்படி வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கு தகவல் அனுப்பினார். அவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் … Read more

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்த மாணவிகள்: ஆசிரியர்கள், பெற்றோர்கள் இடையே வாக்குவாதம்

பெங்களூரு: ஹிஜாப் சர்ச்சைகளுக்கு மத்தியில் கர்நாடகாவில் 5 நாட்களுக்கு பிறகு உயர்நிலை பள்ளிகள் இன்றுமுதல் திறக்கப்பட்டன. பள்ளி வளாகம் வரை ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் பின்னர் அதை அகற்றிய பிறகு வகுப்புகளில் பங்கேற்றனர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி கர்நாடகத்தில் இன்று முதல் உயர்நிலை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.பள்ளி வளாகம் வரை ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் வகுப்பறைக்கு செல்லும் முன்னர் ஹிஜாப்பை அகற்றிவிட்டு வகுப்புகளில் பங்கேற்றனர். மாண்டியாவில் உள்ள உயர்நிலை பள்ளியில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஹிஜாப் … Read more

"விரைவில் மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரேவை சந்திப்பேன்" – கே.சந்திரசேகர் ராவ்

பாரதிய ஜனதாவுக்கு எதிராக வலுவான மாற்று அணி அமைப்பது தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரை விரைவில் சந்திக்க உள்ளதாக தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் பேசிய தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ், விரைவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோரை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். உத்தவ் தாக்கரேவை சந்திப்பதற்காக விரைவில் மும்பை செல்ல உள்ளதாக … Read more