பாஜக ஆட்சியில் பாதுகாப்பாக இருப்பதாக இஸ்லாமிய பெண்கள் உணர்கின்றனர் – பிரதமர் மோடி பேச்சு <!– பாஜக ஆட்சியில் பாதுகாப்பாக இருப்பதாக இஸ்லாமிய பெண்கள் உணர… –>

உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் பாதுகாப்புடன் இருப்பதாக இஸ்லாமியப் பெண்கள் உணர்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கான்பூர் தேகட் என்னுமிடத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், உத்தரப்பிரதேசத்தில் முன்பிருந்த ரவுடிக் கும்பல்கள் உயிருக்கு அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். மீண்டும் அவர்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடாமல் இருக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பாஜக ஆட்சியில் பாதுகாப்பு என உணர்வதால் இஸ்லாமியப் பெண்கள் அதிகம்பேர் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்வதாகக் குறிப்பிட்டார். 2017ஆம் ஆண்டுக்கு முன் … Read more

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு நமது விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். விவசாயம், வனம் மற்றும் தோட்டங்கள், மண்ணின் ஈரப்பதம், மற்றும் நீரியல், வெள்ளம் ஆகியவற்றிற்காக அனைத்து வானிலை நிலைகளிலும் உயர் படங்களை இ.ஓ.எஸ்.-04 செயற்கைகோள் அனுப்பும் என்று தெரிவித்துள்ளார். இதையும் படியுங்கள்…தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்- … Read more

கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு: மாண்டியாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்க மறுப்பு..!!

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஹிஜாப், காவி உடை அணியும் பிரச்னை உடுப்பியில்தான் முதன் முதலில் வெடித்தது. இந்த போராட்டத்தின் தாக்கம் மாநிலம் முழுவதும் பரவியது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டது. இப்பிரச்னை தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை கடந்த வாரம் வியாழக் கிழமை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த … Read more

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு – தந்தைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு 4 வாரத்தில் பதிலளிக்க தந்தைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தஞ்சை மாணவியின் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, யாரேனும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், அதில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என மாணவியின் தந்தை தரப்பில், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கினை சிபிஐக்கு மாற்றி … Read more

காங்கிரஸை அழிக்க ராகுல், பிரியங்கா மட்டுமே போதும்: யோகி ஆதித்யநாத் கிண்டல்

லக்னோ: காங்கிரஸை அழிக்க ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா மட்டுமே போதும் என்று கிண்டல் செய்துள்ளார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத். 403 தொகுதிகளைக் கொண்டஉத்தரப் பிரதேசத்தில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் கடந்த 10-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக சஹாரன்பூர், பிஜ்னோர், மொரதாபாத், சம்பல், ராம்பூர், அம்ரோஹா,படாவுன், பரெய்லி மற்றும் ஷாஜஹான்பூர் ஆகிய 9 மாவட்டங்களுக்குட்பட்ட 55 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி … Read more

ஒரு நாள்.. ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமர் ஆவார்.. ஓவைசி

அனைவரும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக ஹிஜாப் அணிந்த பெண் பதவியில் அமருவார் என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார். கர்நாடக ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் எதிரொலித்துள்ளது. உத்தரப் பிரதேச தேர்தலிலும் இதை வைத்து பிரசாரம் நடந்துள்ளது. இந்த நிலையில் ஓவைசி பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தனது டிவிட்டரில் அந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ஒரு பெண் ஹிஜாப் அணிய முடிவு செய்து … Read more

புல்வாமா தாக்குதல் வீரர்களின் தைரியமும், தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் உந்து சக்தியாக உள்ளது – பிரதமர் மோடி <!– புல்வாமா தாக்குதல் வீரர்களின் தைரியமும், தியாகமும் ஒவ்வொர… –>

புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, வீரர்களின் தைரியமும், தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் உந்து சக்தியாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி பாதுகாப்பு படையினரின் வாகனங்களை குறிவைத்து ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதனை நினைவுகூர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களின் தைரியமும், தியாகமும் இந்தியாவை வளமானதாக மாற்ற ஒவ்வொரு இந்தியருக்கும் … Read more

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி52 ராக்கெட்- கவர்னர் தமிழிசை வாழ்த்து

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:- ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி-52 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்-4-ஐ சிறப்பாக உருவாக்கி வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தஞ்சை மாணவி மரணம் தொடர்பான அரசின் மேல்முறையீட்டு வழக்கு!: தந்தை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..!!

டெல்லி: தஞ்சை பள்ளி மாணவி மரணம் தொடர்பான அரசின் மேல்முறையீட்டு வழக்கில் அவரது தந்தைக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. பள்ளி மாணவி மரண விவகாரம் வேண்டுமென்றே அரசியல் ஆக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இந்தியாவில் சர்வதேச பயணிகளுக்கு இன்று முதல் தளர்வுகள்

இந்தியாவில் சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகளில் இன்று முதல் தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, வெளிநாட்டு பயணிகளுக்கான பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வெளிநாட்டு பயணிகள் இனி 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுத்திக்கொள்ள தேவை இல்லை. மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட மாட்டாது. ஆனால், பயணிகள் புறப்படுவதற்கு 72 மணிநேரம் மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழை பதிவேற்றம் செய்யவேண்டும். வெளிநாட்டில் இருந்துவரும் பயணிகள் உடல்நிலையை சுயமாக 14 நாட்கள் … Read more