இந்தியாவில் புதிதாக 34,113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.! <!– இந்தியாவில் புதிதாக 34,113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.! –>

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்றும் குறைந்து 34 ஆயிரத்து 113 ஆக பதிவாகி உள்ளது. ஒரே நாளில்  கொரோனா பாதித்த 346 பேர் உயிரிழந்திருப்பதுடன் 91 ஆயிரத்து 930 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம்  3 புள்ளி 19 சதவீதமாக இருப்பதுடன், நாடு முழுவதும் 4 லட்சத்து 78 ஆயிரத்து 882 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.  Source link

ஹிஜாப் அணியாமல் புகைப்படம் வெளியிட்ட காஷ்மீர் மாணவிக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீநகர்: காஷ்மீரை சேர்ந்தவர் அரூசா பர்வேஸ். பிளஸ்-2 படித்து வந்தார். காஷ்மீ ரில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 8-ந்தேதி வெளியானது. இதில் அரூசா பர்வேஸ் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்திருந்தார். இதையடுத்து அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த புகைப்படத்தில் அவர் ஹிஜாப் அணியவில்லை. அவர் ஹிஜாப் அணியாமல் புகைப்படம் வெளியிட்டதற்கு சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக ஒருவர் வெளியிட்ட பதிவில், “கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள், … Read more

டெல்லி ஜந்தர் மந்தரில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்த வந்த தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தம்.!

டெல்லி: டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்த வந்த தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த வந்தவர்களை ரயில் நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியதுள்ளது காவல்துறை. 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக டெல்லியில் எல்லையில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில் நெல், கரும்புக்கு அடிப்படை … Read more

புதுச்சேரி: தேசிய அளவிலான கைவினை, உணவு கண்காட்சி – ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் மக்கள்

புதுச்சேரியில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான கைவினை, உணவு மற்றும் கலாசாரத்தின் தனித்துவமான சங்கம கண்காட்சி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின் சார்பில் நடைபெறும் கண்காட்சியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். அந்ததந்த மாநிலங்களின் அடையாளங்களை பிரதிபலிக்கும் கைவினைப் பொருட்களை கலைஞர்கள் காட்சிப்படுத்தியுள்ளன. மேலும் வெவ்வேறு மாநிலங்களின் உணவு வகைகளும் ஒரே இடத்தில் கிடைப்பதால் அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

பஞ்சாபில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள கணவர் அமரீந்தர் சிங் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் காங். எம்.பி.

பாட்டியாலா: பஞ்சாபில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அமரீந்தர் சிங்கின் கட்சிக்கு காங்கிரஸ் எம்.பி.யும், அமரீந்தர் சிங்கின் மனைவியுமான பிரணீத் கவுர் வாக்கு சேகரித்து வருகிறார். பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் உட்கட்சி பூசல்காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் பதவி விலகினார். பின்னர் காங்கிரஸிலிருந்தும் விலகிய அவர், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார். தற்போது நடைபெறும் பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து களம் காண்கிறது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி. அமரீந்தர் சிங்கின் … Read more

உத்தரபிரதேசம், கோவா, உத்தரக்காண்ட் தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு!

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதையொட்டி, இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 9 மாவட்டங்களில் 55 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு … Read more

எல்.ஐ.சியின் 31.62 லட்சம் பங்குகளை விற்க நடவடிக்கையை தொடங்கியது அரசு.! <!– எல்.ஐ.சியின் 31.62 லட்சம் பங்குகளை விற்க நடவடிக்கையை தொடங… –>

அரசு காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சியின் 31 கோடியே 62 லட்சம் பங்குகளை விற்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. சந்தைக்கான பரிந்துரைகள் செபியிடம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து மார்ச்மாதம் முதல் எல்,ஐ.சியின் பங்குகள் சந்தைக்குவரும் என்று கூறப்படுகிறது.எல்.ஐ.சி பங்குகளின் விற்பனை மூலம் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம்  கோடி ரூபாய் திரட்ட முடியும் என்று மத்தியஅரசு  பட்ஜெட்டில்  அறிவித்துள்ளது. Source link

கோவா, உத்தரகாண்டில் சட்டசபை தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு

பனாஜி: கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு இன்று ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.  பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என 4 முக்கிய கட்சிகள் களமிறங்கியுள்ளதால் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்து வருகின்றனர். இதேபோல், உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற … Read more

டெல்லியில் தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தம்

டெல்லி: டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்த வந்த தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த வந்தவர்களை ரயில் நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியதுள்ளது காவல்துறை.

120 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட ராமானுஜர் சிலை குடியரசு தலைவரால் திறப்பு

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 120 கிலோ எடைகொண்ட தங்கத்தாலான அவரது உருவச் சிலையை திறந்து வைத்தார். ராமானுஜர் போன்ற புனிதர்களும், தத்துவவாதிகளும் நாட்டின் கலாச்சார அடையாளத்தை உருவாக்கி பேணி பாதுகாத்து அது தொடர்வதையும், நாட்டின் பண்பாட்டு ஒற்றுமையையும் உறுதி செய்திருப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய ராம்நாத் கோவிந்த், ராமானுஜரின் பக்தி மார்க்கம் தமிழகத்தின் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீரங்கத்திலிருந்து … Read more