பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது இ.ஓ.எஸ் – 04 செயற்கைக்கோள்
ஆந்திரா: பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ் – 04 செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் தலத்தில் இருந்து செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ தயாரித்துள்ள 1,170 கிலோ எடை கொண்ட இ.ஓ.எஸ் – 04 செயற்கைக்கோள் பூமியை கண்காணிக்கும். விவசாயம், காடுகள், வெள்ளம் போன்றவற்றை துல்லியமாக படம் பிடிக்கும் அதிநவீன கேமரா இ.ஓ.எஸ் – 04 செயற்கைக்கோளில் உள்ளது.