உ.பி.யின் 55 தொகுதிகளில் வெற்றிக்கு வித்திடும் முஸ்லிம்கள்: வாக்குகள் பிரிவதால் பலனடையும் பாஜக!

புதுடெல்லி: உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது. இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 55 இடங்களில் நாளை மறுநாள் (திங்கள்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 55 தொகுதிகளின் கள அரசியல் நிலவரம் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம். உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் இந்தத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் அதிகமாக உள்ளன. இதன் அடுத்த எண்ணிக்கையில் ஜாட் சமூகத்தினர் உள்ளனர். இதனால், பாஜக தன் … Read more

அம்மாடியோவ்… ஒரு மாம்பழ பெட்டியின் விலை இவ்வளவு ஆயிரமா?-கெத்துக்காட்டிய வியாபாரிகள்!

நாடு முழுவதும் தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது. சீசன் தொடக்கத்தில் சந்தைக்கு வரும் முதல் பெட்டியை ஏலம் எடுத்தால், வியாபாரம் அமோகமாக நடைபெற்று செல்வம் கொழிக்கும் என்ற நம்பிக்கை புனே நகர வியாபாரிகள் மத்தியில் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ரத்னகிரியில் விளைந்த இந்த சீசனின் முதல் அல்போன்சா வகை மாம்பழ பெட்டி புனே சந்தைக்கு விற்பனைக்கு வந்தது. இதனை வாங்க வியாபாரிகள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. 5000 ரூபாய்க்கு ஆரம்பித்த … Read more

போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட 200 டன் கஞ்சா தீவைத்து எரித்து அழிப்பு.! <!– போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட 200 … –>

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே 200 டன் கஞ்சா போதைப் பொருட்களைக் காவல்துறையினர் தீவைத்து எரித்து அழித்தனர். ஆந்திரம், ஒடிசா மாநில மலைப்பகுதிகளில் சட்டவிரோதமாகக் கஞ்சா பயிரிடப்பட்டு இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட 200 டன் கஞ்சாவை அனகாபள்ளி அருகே கோடூரில் காவல்துறையினர் தீவைத்து எரித்து அழித்தனர். அழிக்கப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு 850 கோடி ரூபாய் எனக் கூறப்படுகின்றது. கடந்த ஓராண்டில் 7,552 ஏக்கரில் பயிரிட்டிருந்த … Read more

தடுப்பூசிக்கு எதிராக பொய் பிரசாரம் செய்த காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கவேண்டும் – பிரதமர் மோடி

ருத்ராப்பூர்: உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராப்பூரில் பா.ஜ.க. சார்பில் தேர்தல பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:  கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தோம். ஏழைகளுக்கு பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தில் வழங்கப்பட்ட இலவச ரேசன் பொருள் உள்ளிட்ட பல திட்டங்கள் வேறு கட்சிகள் ஆட்சியில் இருந்திருந்தால், தங்களுக்கு கிடைத்திருக்காது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். பெருந்தொற்று காலத்தில், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையும் வெறும் வயிற்றுடன் உறங்க நாங்கள் … Read more

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு

திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை முதல் தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மாசி மாத பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (12ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷ பூஜை உள்பட வழக்கமான பூஜைகள் தொடங்கும். … Read more

சேலை எடுப்பதற்காக மகனை வைத்து பெண் எடுத்த விபரீத யோசனை – அரியானாவில் அதிர்ச்சி சம்பவம்

அரியானா மாநிலத்தில் சேலையை எடுப்பதற்காக பெண் ஒருவர் தனது மகனை பத்தாவது மாடியில் இருந்து கீழே இறக்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபரிதாபாத் நகரில் அடுக்குமாடி ஒன்றில் பத்தாவது மாடியில் வசிக்கும் பெண்ணின் சேலை, 9ஆவது மாடியில் உள்ள பால்கனியில் விழுந்துள்ளது. அந்த வீடு பூட்டியிருந்ததால், அங்கு விழுந்த சேலையை எடுப்பதற்காக அந்த பெண், தனது மகனை போர்வை ஒன்றால் கட்டி கீழே இறக்கி உள்ளார். அந்த சிறுவனும் ஒன்பதாவது மாடியில் இறங்கி சேலையை எடுத்துள்ளான். Watch: … Read more

பாஜக வென்றால் பொது சிவில் சட்டம் அமலாகும் – உத்தராகண்ட் முதல்வர் தாமி சர்ச்சை

புதுடெல்லி: உத்தராகண்டில் பாஜக வென்றால், பொது சிவில் சட்டம் அமலாகும் என அம்மாநில முதல்வர் புஷ்கர்சிங் தாமி உறுதி அளித்துள்ளார். பாஜக ஆளும் இம்மாநிலத்தில் மீண்டும் அவர் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து இந்த வாக்குறுதியை கொடுத்துள்ளார். உத்தர பிரதேசத்திலிருந்து பிரிந்த மாநிலம் உத்தராகண்ட். இம்மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 14ல் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் பாஜகவின் முதல்வராக புஷ்கர்சிங் தாமி வகிக்கிறார். தனது வெற்றிக்காக தீவிரப் பிரச்சாரம் செய்தவர் அதன் கடைசிநாளான … Read more

இலவச தரிசன டிக்கெட் விநியோகத்தில் விரைவில் வருகிறது மாற்றம்!

அன்றாடம் திருப்பதிக்கு வரும் ஏழுமலையான் பக்தர்களுக்கு 300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் இலவச தரிசன டிக்கெட்டுகளும் நேரில் லிநியோகிக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த பல மாதங்களாக இலவச தரிசன டிக்கெட்டுகளும், கட்டண தரிசன டிக்கெட்டுகளை போன்றே ஆன்லைனில் வழங்கப்பட்டு வந்தது . ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் என்ற வீதத்தில் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், ஜனவரி இறுதி வாரத்தில் இருந்து கொரோனா … Read more

கர்நாடகாவில் திருமண வரவேற்பில் மூளைச்சாவு ஏற்பட்டு மணமகள் உயிரிழப்பு.. அவரது உடலுறுப்புகளை தானமாக வழங்கிய பெற்றோர்.! <!– கர்நாடகாவில் திருமண வரவேற்பில் மூளைச்சாவு ஏற்பட்டு மணமகள்… –>

கர்நாடகாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது மூளைச்சாவு ஏற்பட்டு மணமகள் உயிரிழந்த நிலையில், அவரது உடலுறுப்புகளை பெற்றோர் தானமாக வழங்கியுள்ளனர். கோலார் அடுத்த சீனிவாசப்பூரைச் சேர்ந்த சைத்ரா என்ற அந்தப் பெண்ணுக்கு கடந்த 7ஆம் தேதி காலை திருமணம் நடைபெறவிருந்தது. முந்தைய நாளான 6ஆம் தேதி மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. உறவினர் ஒவ்வொருவராகச் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தபோதே திடீரென சைத்ரா மேடையிலேயே மயங்கி விழுந்துள்ளார்.இதைப்பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவரை … Read more

பாத யாத்திரை, கூடுதலாக 4 மணி நேரம் பரப்புரைக்கு அனுமதி – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் இம்மாதம் நடைபெறுகிறது. உ.பி.யில் 7 கட்டமாகவும், மணிப்பூரில் 2 கட்டமாகவும், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. உத்தர பிரதேசத்தில் கடந்த 10-ம் தேதி முதற்கட்ட தேர்தல் முடிந்துள்ளது. மணிப்பூரில் பிப்ரவரி 28-ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரகண்ட், கோவாவில் ஒரே கட்டமாக பிப்ரவரி 14-ம் தேதியும், பஞ்சாப்பில் பிப்ரவரி … Read more