தொழிலதிபர் ராகுல் பஜாஜ் காலமானார் <!– தொழிலதிபர் ராகுல் பஜாஜ் காலமானார் –>

தொழிலதிபர் ராகுல் பஜாஜ் காலமானார் பஜாஜ் குழுமங்களின் முன்னாள் தலைவரான ராகுல் பஜாஜ் காலமானார். அவருக்கு வயது 83 நிமோனியா மற்றும் இதய கோளாறுகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் புனே ரூபி ஹால் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராகுல் பஜாஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் Source link

சத்தீஸ்கர் என்கவுண்டர் – சி.ஆர்.பி.எப். அதிகாரி உயிரிழப்பு

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில் பசகுடா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்த புத்கல் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என சி.ஆர்.பி.எப்  போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய ரிசர்வ் போலீசார் அந்தப் பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, சி.ஆர்.பி.எப். போலீசாரை நோக்கி நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் 168-வது பட்டாலியனைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.  வீரர் ஒருவர் காயமடைந்தார் என பஸ்டார் நகர ஐ.ஜி. சுந்தரராஜ் தெரிவித்துள்ளார். … Read more

உ.பி-யில் 55 தொகுதியில் 2ம் கட்ட தேர்தலுடன் சேர்த்து உத்தரகாண்ட், கோவாவில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

லக்னோ: உத்தரகாண்ட், கோவா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 165 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. அதனால் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. உத்தரபிரதேசத்தில் மட்டும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் 58 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 61 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் நாளை மறுநாள் (பிப். … Read more

மும்பை: மகனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து 7-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய மனைவி

மும்பையில் மகனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து 7-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர். மும்பையின் புறநகர் பகுதியான அம்போலி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தனு கிருஷ்ணா (52). இவர் தனது மனைவி கீதா மற்றும் மகனுடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். இதனிடையே, சமீபகாலமாக சாந்தனுவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு சாந்தனுவின் மனைவி கீதா, காவல் நிலையத்திற்கு போன் செய்து, … Read more

ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ், அனில் அம்பானிக்கு தடை: செபி அதிரடி உத்தரவு

மும்பை: ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் மற்றும் அதன் தலைவர் அனில் அம்பானி மற்றும் 3 பேருக்கு பங்குச்சந்தை உள்ளிட்ட செக்யூரிட்டிஸ் மார்கெட்டில் பங்கேற்க தடை விதித்து செபி உத்தரவிட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருபாய் அம்பானியின் மறைவுக்கு பின், அவரது வாரிசுகளான முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் சண்டையிட்டு பிரித்துக் கொண்டனர். சொத்துக்களை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு, குடும்ப சண்டை உருவாகி பின்னர் தாய் மத்தியஸ்தம் செய்து சொத்துக்கள் இருவருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கப்பட்டது. இருவரும் … Read more

திருமண வரவேற்பில் மணப்பெண் மூளைச்சாவு.. உறுப்புதானம் செய்த பெற்றோர்!

கர்நாடகத்தில் ஒரு உருக்கமான சம்பவம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து , வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது புதுமணப் பெண் மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு போய் பரிசோதித்தபோது அவர் மூளைச் சாவடைந்தது தெரிய வந்தது. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள், தங்களது மகளினின் உடல் உறுப்புகளை தானம் செய்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ள கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் அந்தப் பெண்ணின் பெற்றோரை வெகுவாக பாராட்டியுள்ளார். மக்களுக்கு … Read more

ஒரு பெட்டி மாம்பழத்தை 31,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பழ வணிகர்… சந்தைக்கு வரும் முதல் பெட்டியை ஏலம் எடுத்தால் செல்வம் கொழிக்குமாம்.. <!– ஒரு பெட்டி மாம்பழத்தை 31,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பழ வண… –>

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் வணிகர் ஒருவர் ஒரு பெட்டி மாம்பழத்தை 31ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். மாங்காய் காய்ப்பு தொடங்கியதும் சந்தைக்கு வரும் முதல் பெட்டியை ஏலம் எடுத்தால் செல்வம் கொழிக்கும் என்கிற நம்பிக்கை புனே வணிகர்களிடையே உள்ளது. இதனால் ரத்தினகிரி மாவட்டத்தில் இருந்து புனே சந்தைக்கு வந்த ஹாபுஸ் வகை மாம்பழங்கள் 60 எண்ணம் கொண்ட ஒரு பெட்டியை யுவ்ராஜ் கச்சி என்கிற வணிகர் 31 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். இதேபோல் வெவ்வேறு விலைகளில் … Read more

சட்டமேதை அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு நாடகம் மீண்டும் ஒளிபரப்பு- கெஜ்ரிவால் அறிவிப்பு

இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் வாழ்கை வரலாற்று இசை நாடகத்தை ஒளிபரப்ப டெல்லி அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவில் முதல்முறையாக அம்பேத்கரின் வாழ்க்கையை அனைத்து குழந்தைகளின் மத்தியிலும் கொண்டு சேர்க்கும் விதத்தில் டெல்லி அரசு முயற்சி எடுத்துள்ளது. நாடகத்தை மொத்தம் 50 முறை ஒளிபரப்பப்படும் என்றும் மக்கள் அனைவரும் இலவசமாக காண வேண்டும் என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 4-ம் … Read more

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட வேண்டாம் : ஹிஜாப் விவகாரத்தில் உலக நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தல்!

டெல்லி : ஹிஜாப் பிரச்சனையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வகையிலான கருத்துக்களை தெரிவிப்பதை பிற நாடுகள் தவிர்க்க வேண்டும் என ஒன்றிய அரசு கேட்டு கொண்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் கல்வி நிலையங்களுக்குள் நுழையவிடாமல் தடுக்கப்பட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி சில நாடுகளும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க தொடங்கியுள்ளன. இதனை குறிப்பிட்டு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் … Read more

இந்தியாவில் 50 ஆயிரத்திற்கு குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு – முழு விவரம்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சரிந்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 50,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் ஜனவரி மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, தற்போது நாளுக்கு நாள் மளமளவென குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் 67 ஆயிரத்து 84 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 58 ஆயிரத்து 77 ஆக சரிந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 50,407 பேருக்கு தொற்று … Read more