பகவத்கீதை வினாடி-வினா போட்டியில் முஸ்லிம் மாணவி முதலிடம்

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் எட்யூட்டர் செயலி அகில இந்திய அளவில் பகவத்கீதை வினாடி-வினா போட்டியை நடத்தியது. இந்த போட்டியில் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவி குஷ்புகான் முதலிடத்தை பிடித்தார். அவரது தந்தை அப்துல்கான் ஒரு தொழிலாளி ஆவார். பகவத்கீதை வினாடி- வினா போட்டியில் முதல் இடம் பிடித்தது குறித்து மாணவி குஷ்பு கூறியதாவது:- எனது குடும்பத்தினரும், ஆசிரியர்களும் பகவத் கீதை போட்டியில் பங்கேற்க ஊக்குவித்தார்கள். பிற மதங்களின் இதிகாசங்களை பற்றி அதிகம் தெரிந்து … Read more

சிறையில் சொகுசு வசதிக்காக லஞ்சம்; சசிகலா, இளவரசி ஆஜராக சம்மன்: நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: சொத்து  குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டு அடைக்கப்பட்டனர். சசிகலாவும், இளவரசியும் தண்டனை காலம் முடிந்து கடந்தாண்டு விடுதலையாகினர். இந்நிலையில், சிறையில் இருந்தபோது சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதற்காக சிறை அதிகாரிகளுக்கு ₹2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் இருவரும் சிக்கினர். இது தொடர்பான வழக்கில் முதல் குற்றவாளியாக போலீஸ் அதிகாரி கிருஷ்ண குமார், 2வது குற்றவாளியாக டாக்டர் அனிதா, 3வது குற்றவாளியாக சுரேஷ், 4வது … Read more

பிப்ரவரி 24-ம் தேதி நேரில் ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் கெடு

புதுடெல்லி: வரும் 24-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. 2017-ம் ஆண்டு மே மாதம் அவர்மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேரில் ஆஜராகுமாறு பல முறை உத்தரவு பிறப்பித்தது. தற்போது இதுவே கடைசி வாய்ப்புஎன்றும் தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள வங்கிகளில் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடியவர் விஜய் மல்லையா. இவரை … Read more

நடு இருக்கைகளுக்கு சீட் பெல்ட் கட்டாயம் – மத்திய அரசு உத்தரவு!

இனி அனைத்து கார்களிலும் 3 பாயிண்ட் சீட் பெல்டுகள் கட்டாயம் பொருத்த வேண்டும் என கார் உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. பொதுவாக காரில் பயணிப்பவர்கள் வாகன ஓட்டுநர், ஓட்டுநர் அருகே அமர்ந்திருப்பவர் பின் இருக்கையில் அமர்ந்து இருப்பவர்களில் இருவர் மட்டுமே மும்முனை என்று சொல்லப்படும் த்ரீ பாயிண்ட் சீட் பெல்ட் அணிய முடிகிறது. பின் இருக்கையில் நடுப்பகுதியில் அமர்ந்திருப்பவருக்கு விமானங்களில் பயன்படுத்துவது போல இடுப்பில் பொருத்தப்படும் இருமுனை சீட் பெல்ட் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் … Read more

புதுச்சேரியில் திமுக பிரமுகர் வீட்டு முன்பு நாட்டு வெடிகுண்டு வீசிய நபரை தேடி வரும் போலீசார் .! <!– புதுச்சேரியில் திமுக பிரமுகர் வீட்டு முன்பு நாட்டு வெடிகு… –>

புதுச்சேரியில் பட்டப்பகலில் திமுக பிரமுகர் வீட்டு வாசலில் நாட்டு வெடிகுண்டை வீசிச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். உப்பளம் நேதாஜி நகரைச் சேர்ந்த திமுக பிரமுகரான இருதயராஜ், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றிக்காக தேர்தல் பணியை மேற்கொண்டவர். மாலை நான்கரை மணியளவில் மர்ம நபர் ஒருவன், நாட்டு வெடிகுண்டை இருதயராஜ் வீட்டு வாசலில் வீசியுள்ளான். குண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்த நிலையில், இருதயராஜ் குடும்பத்தினர் வீட்டுக்குள் இருந்ததால் அசம்பாவிதங்கள் … Read more

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை வழக்கு பதிவு இல்லை – மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்

புதுடெல்லி: பாராளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு  எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, தெரிவித்துள்ளதாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உட்பட குற்றங்கள் பற்றிய தரவுகளை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தொகுத்து வெளியிடுவதாகவும், அதன்படி 2020-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மொத்த எண்ணிக்கை 3,71,503 ஆகும். இவற்றில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 496 ஆகும்.  குடும்ப … Read more

தமிழகத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ளம் சேதத்துக்கு கேட்டது ரூ6,230 கோடி; கொடுத்தது ரூ816 கோடி: மக்களவையில் ஒன்றிய அரசு ஒப்புதல்

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ள சேதத்துக்கு தமிழகம் கேட்டது ரூ.6,230 கோடி. ஆனால் ஒன்றிய அரசு கொடுத்தது ரூ.816 கோடி. இதனை மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் கூறியுள்ளார். ‘தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பரில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள், பயிர் சேதங்கள், மனித உயிர்கள் மற்றும் கால்நடைகள் உயிரிழப்புகள் ஆகியவற்றை ஈடுகட்டுவதற்காக ஒன்றிய அரசிடம் 6 ஆயிரத்து 230 கோடி ரூபாய் நிவாரணம் கேட்டு முறையீடு செய்திருக்கிறதா? அப்படி முறையிட்டிருந்தால் … Read more

காதலுக்கு எல்லை இல்லை: காதலர் தினத்தில் கரம் பிடிக்கும் திருநங்கை – திருநம்பி ஜோடி

திருவனந்தபுரம்: திருநங்கை சியாமா பிரபாவுக்கும், திருநம்பி மனு கார்த்திகாவுக்கும் காதலர் தினத்தன்று வரும் 14-ம் தேதிதிருமணம் நடக்கிறது. காதலித்து கைப்பிடிக்கும் இந்த ஜோடி, திருநங்கை, திருநம்பி என்னும் அடையாளத்துடனேயே தங்கள் திருமணத்தை பதிவுசெய்ய முயன்று வருகிறது. கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாகக் கொண்ட திருநம்பி மனுகார்த்திகா (31). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மனிதவள அதிகாரியாக உள்ளார். இதுபோல் கேரள அரசின் சமூகநலத் துறையின் கீழ் இயங்கும் மூன்றாம் பாலினத்தவர் மேம்பாட்டுப் பிரிவில் திட்ட … Read more

ஆடைக்கு மேல் தொட்டால் பாலியல் சீண்டல் இல்லை: சர்ச்சை நீதிபதி ராஜினாமா!

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை கடந்த ஜனவரி 19ஆம் தேதி தீ்ர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை நீதிபதி புஷ்பா வி கன்டேவாலா வழங்கினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட நபர் சிறுமியின் ஆடைகளை கழற்றாமல் அவரின் உடலை சீண்டி உள்ளார். எனவே இது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுக்கும் போக்சோ சட்டத்தின்கீழ் குற்றமாகாது. உடல் ரீதியான … Read more

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி.! <!– மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரி… –>

ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இந்திய அணி வெற்றி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி மூன்று போட்டிகளை கொண்ட தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியது இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இந்திய அணி அபார வெற்றி பெற்றது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை எளிதாக வீழ்த்தியது Source link