இலவச தரிசன டிக்கெட்… ஏழுமலையான் பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!

வைணவ திருத்தலங்களில் உலக அளவில் பிரபலமான கோயில்களில் முக்கியமான திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பக்தர்கள் திருப்பதிக்கு வந்து செல்வதற்கு ஆந்தி மாநில அரசும், தேவஸ்தான நிர்வாகமும் பல்வேறு கட்டுப்பாடுகளை அவ்வப்போது விதித்து வந்தன. முக்கியமாக பக்தர்கள் ஒரே இடத்தில் குவிவதை தவிர்க்கும் பொருட்டு, இலவச தரிசன டிக்கெட்டுகளும், கட்டண தரிசன டிக்கெட்களை போன்று ஆன்லைனில் வழங்கப்பட்டு வந்தன. இந்த … Read more

மனநலம் பாதித்த மூதாட்டியை தர தரவென இழுத்துச் சென்று தாக்கிய மாணவர் கைது <!– மனநலம் பாதித்த மூதாட்டியை தர தரவென இழுத்துச் சென்று தாக்க… –>

திருப்பதியில் மனநலம் பாதித்த மூதாட்டியை சாலையில் தர தரவென இழுத்துச் சென்று கல்லூரி மாணவர் தாக்கும் வீடியோ வெளியான நிலையில் இளைஞரை போலீசார் கைது செய்தனர். ரங்கா ரெட்டி மாவட்டம் ஷாத் நகரில் சாலையில் காயங்களுடன் இருந்த மூதாட்டியிடம் பொது மக்கள் விசாரித்த போது இளைஞர் தாக்கியது தெரியவந்துள்ளது. அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த மக்கள், இளைஞரை தாக்கும் வீடியோவை கொண்டு போலீசில் புகாரளித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக அதேபகுதியை சேர்த கல்லூரி மாணவர் … Read more

தொழில்நுட்ப படிப்புகளை தொடங்க முழு அங்கீகாரம் அவசியம்- பல்கலைக்கழகங்களுக்கு ஏஐசிடிஇ உத்தரவு

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் கீழ் ஏராளமான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு தொழில்நுட்ப படிப்புகளை தொடங்க அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் அவசியம். அங்கீகாரம் பகுதியளவிலும் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பி.இ, பி.டெக் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தொடங்க இனி முழு அங்கீகாரம் அவசியம் என அனைத்து இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பகுதியளவில் அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையில், இனி தொழில்நுட்ப படிப்புகளை தொடங்க ஏஐசிடிஇ-ன் … Read more

பல்கலைக்கழகங்களுக்கு இனி பகுதியளவில் அங்கீகாரம் அளிக்கப்படாது: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் அறிவிப்பு

டெல்லி: பி.இ, பி.டெக் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தொடங்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் முழு அங்கீகாரம் அவசியம் என பல்கலைக்கழகங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு இனி பகுதியளவில் அங்கீகாரம் அளிக்கப்படாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்களில் நடு இருக்கைக்கும் மும்முனை சீட் பெல்ட் கட்டாயம்

காரின் பின் இருக்கையில் நடுவில் அமருவோருக்கும் சீட் பெல்ட் அமைக்க வாகன நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கார்களில் முதல் வரிசையில் இரண்டு இருக்கைகள் மற்றும் பின்வரிசையில் இரண்டு ஓர இருக்கைகளுக்கு மும்முனை சீட் பெல்ட் வசதி வழங்கப்படுகிறது. பின்வரிசைகளில் நடுஇருக்கைகளுக்கு விமானங்களில் இருப்பதுபோல இருமுனை சீட் பெல்ட் ஒதுக்கப்படுகிறது. இனி, நடுஇருக்கைகளுக்கும் மும்முனை சீட்பெல்ட் அமைப்பதை வாகன நிறுவனங்களுக்கு மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். … Read more

அமெரிக்கா உட்பட 72 நாடுகளில் இருந்து வருவோருக்கு இனி 7 நாள் கட்டாய தனிமை இல்லை: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் 14-ம் தேதி முதல் அமல்

புதுடெல்லி: அமெரிக்கா உட்பட 72 நாடுகளில் இருந்து வருவோருக்கு இனி 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் 14-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு அவ்வப்போது விதித்து வருகிறது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் சில நாடுகளில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் பரவியது. … Read more

டெஸ்லாவை வரவேற்கிறோம்; ஆனால்…; வேண்டுகோள் விடுத்த மத்திய அமைச்சர் நிதி கட்கரி!

எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவமனமாக உள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட அவரது நிறுவனத்தை இந்தியாவில் அமைக்க எலான் மஸ்க் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூருவில் இந்திய பிரிவுக்கான பெயரை பதிவு செய்தது அவரது நிறுவனம். மேலும், டெஸ்லா தனது ஏழு கார்களுக்கு இந்தியாவின் சோதனை நிறுவனங்களிடமிருந்து ஒப்புதலையும் பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள் அதிகமாக இருப்பதாக எலான் மஸ்க் அதிருப்தி தெரிவித்தார். டெஸ்லா … Read more

இந்தியாவில் ஊடுருவிய 8 பாகிஸ்தான் மீனவர்கள்.. 30 மணி நேரமாக தேடுதல் வேட்டை <!– இந்தியாவில் ஊடுருவிய 8 பாகிஸ்தான் மீனவர்கள்.. 30 மணி நேரம… –>

குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் அடுத்தடுத்து 11 மீனவர் படகுகள் இந்திய நீர்பரப்பில் ஊடுருவியதை டிரோன் மூலம் கண்டுபிடித்த எல்லைப் பாதுகாப்பு படையினர் மறைந்து இருக்கும் பாகிஸ்தான் மீனவர்களைப் பிடிக்க சிறப்பு கமாண்டோ படையினரை இந்திய விமானப் படையின் உதவியுடன் ஆற்றங்கரையில் மூன்று இடங்களில் களமிறக்கினர். 30 மணி நேரமாக ஹராமி நலா எனுமிடத்தில் தேடுதல் வேட்டையில் எல்லைப் பாதுகாப்பு படை கமாண்டோக்கள் ஈடுபட்டுள்ளனர். அங்கு மறைந்துள்ள 8 பாகிஸ்தானிய மீனவர்கள் தப்பிச் செல்ல வழியே இல்லை … Read more

‘ஹிஜாப்’ விவகாரத்தில் பா.ஜனதா அரசு தோல்வி: குமாரசாமி குற்றச்சாட்டு

பெங்களூரு : பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் இந்த ஹிஜாப் விவகாரம் தொடங்கியது. இந்த விவகாரம் குறித்து இன்று உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் மோதலுக்கு வழிவகுத்து கொடுத்துள்ளன. இந்த மோதல்கள் தனியார் கல்லூரிகளில் நடக்கிறதா?. பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் குழந்தைகள் தனியார் பள்ளியில் படிக்கிறார்கள். பா.ஜனதா தலைவர்களின் குழந்தைகள் யாரும் காவி கொடியை பிடித்து போராடவில்லை. அப்பாவி குழந்தைகளை … Read more

கேரளாவில் மலை இடுக்கில் சிக்கிய வாலிபர் மீது வழக்கு கிடையாது: தாயின் வேண்டுகோளை ஏற்றது கேரளா

திருவனந்தபுரம்:  கேரள மாநிலம்,  பாலக்காடு அருகே மலம்புழா செராடு பகுதியை சேர்ந்தவர் பாபு (23). தனது  நண்பர்கள் 4 பேருடன்  கும்பாச்சி என்ற மலைக்கு கடந்த 7ம் தேதி சாகசப் பயணம்  சென்றார். அப்போது  பாபு எதிர்பாராமல் கால் வழுக்கி விழுந்த போது பாறை இடுக்கில் சிக்கிக்  கொண்டார். காலில் காயம் ஏற்பட்டதால் அவரால் கீழே இறங்கி வர முடியவில்லை. ராணுவம், விமானப் படை வீரர்கள் மிகவும் நேற்று முன்தினம் அவரை மீட்டனர். தற்போது அவர் பாலக்காடு … Read more