ஹிஜாப் விவகாரம் – கர்நாடகாவில் தேசிய கொடியை இறக்கி விட்டு காவி கொடி ஏற்றியதாக சர்ச்சை

சிவமொக்கா: கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தால் பதற்றம் நிலவும் நிலையில்,  கொடி கம்பம் ஒன்றில் இருந்து தேசிய கொடியை இறக்கி விட்டு மாணவர் ஒருவர் காவி கொடியை ஏற்றியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.  இது குறித்து வெளியான வீடியோ ஒன்றில், மாணவர்கள் சிலர் கம்பம் ஒன்றின் கீழ் நின்று கொண்டு, ஜெய் ஸ்ரீராம் என கோஷங்களை எழுப்பினர்.  அவர்கள் காவி கொடிகளை அசைத்தபடியும் காணப்பட்டனர். ஆனால் தேசிய கொடியை இறக்கி விட்டு காவி கொடி ஏற்றப்படவில்லை என்று சிவமொக்கா எஸ்.பி. … Read more

பொற்காலத்தில் நுழைந்திருக்கிறது இந்தியா 130 கோடி மக்கள் மீது நம்பிக்கை வையுங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு மோடி அறிவுரை

புதுடெல்லி: ‘நாட்டின் 130 கோடி மக்களின் திறன் மீது நம்பிக்கை வைத்திருங்கள். அவர்களின் திறமையால் நாடு இப்போது பொற்காலத்திற்குள் நுழைந்திருக்கிறது’ என மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசினார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளித்து நேற்று முன்தினம் பேசினார். அப்போது, காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். இதைத் தொடர்ந்து நேற்று மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். இங்கும் … Read more

தமிழகத்தில் குறைந்து வருகிறது தாய் – சேய் இறப்பு விகிதம்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: தமிழகத்தில் தாய் – சேய் இறப்பு விகிதம் குறைந்து வருவதாக மத்திய அரசு புள்ளிவிவரத்துடன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி ஒன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் எழுத்துபூர்வமாக அளித்த தேசிய அளவில்: இந்திய தலைமை பதிவாளரின் மாதிரி பதிவு அமைப்பு அறிக்கையின்படி, குழந்தை இறப்பு விகிதம் 2015-ல் 1000 பிறப்புகளுக்கு 37-ல் இருந்து 2019-ல் தேசிய அளவில் 1,000 பிறப்புகளுக்கு 30 ஆகக் குறைந்துள்ளது. … Read more

'வாரிசு அரசியலால் ஜனநாயகத்திற்கு ஆபத்து!' – காங்கிரசை துவம்சம் செய்த மோடி!

வாரிசு அரசியலால் திறமை புறக்கணிக்கப்படுகிறது என மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் , கடந்த 31 ஆம் தேதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2022 – 23 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரைக்கு நன்றி தெரிவித்து, … Read more

காங்கிரசுக்கு கடும் கண்டனம்.. நாடாளுமன்றத்தில் மோடி உரை..! <!– காங்கிரசுக்கு கடும் கண்டனம்.. நாடாளுமன்றத்தில் மோடி உரை..! –>

ராணுவ தளவாட உற்பத்தி வளாகங்களை தமிழகம் மற்றும் உத்தரபிரதேசத்தில் அமைக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள பிரதமர் மோடி, சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் திட்டத்தால் நாடு தன்னிறைவு பெறும் என குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் நிலையில், அதற்கு பதிலளித்து மக்களவையில் நேற்று பேசிய பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் உரையாற்றியுள்ளார். கொரோனா சூழலில் நமது சுகாதாரத்துறை மற்றும் முன்கள பணியாளர்கள் … Read more

நாங்கள் உண்மையைப் பேசுவதால் பிரதமர் பயப்படுகிறார் – ராகுல்காந்தி பதிலடி

புதுடெல்லி: பாராளுமன்றத்தில் காங்கிரஸுக்கு எதிராக பிரதமர் மோடி தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பதில் அளித்துள்ளார். ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: நான் மூன்று முக்கியமான பிரச்சினைகளை எழுப்பினேன். முதலாவதாக, பிரதமர் இரண்டு இந்தியாவை உருவாக்கியுள்ளார்.  ஒன்று மிகவும் பணக்கார இந்தியா, மற்றொன்று நம்பிக்கையற்ற, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வை எதிர்கொள்ளும் பெரும்பான்மையான மக்களுக்கான இந்தியா.  இரண்டாவதாக, இந்தியாவின் அரசு நிறுவனங்கள் பிரதமர் அழிக்கிறார். மூன்றாவதாக, அவரது வெளியுறவுக் கொள்கை, … Read more

மகாபாரதத்தில் பீமனாக நடித்த பிரவீன் குமார் காலமானார்

மும்பை: பிரபல நடிகரும், அர்ஜுனா விருது வென்ற விளையாட்டு வீரருமான பிரவீன் குமார் சோப்தி காலமானார். அவருக்கு வயது 74. பி.ஆர். சோப்ராவின் மகாபாரதம் சீரியலில் பீமனாக நடித்த பிரவீன் குமார் சோப்தி சர்வதேச அளவில் புகழ் அடைந்தார். அந்த தொடருக்கு பிறகு ஏகப்பட்ட படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பாடிகார்ட் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ‘‘பீம் பாய்… … Read more

இவை நல்லதல்ல… மாணவர் சமூகம் அமைதிகாக்க வேண்டும்: ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் அறிவுரை

பெங்களூரு: ஹிஜாப் விவகாரத்தில் மாணவர் சமூகம் அமைதி காக்குமாறு கர்நாடக உயர் நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், இது தொடர்பான வழக்கை நாளைக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை … Read more

பனிச்சரிவில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.. இந்திய ராணுவம் அறிவிப்பு!

பிப்ரவரி 6ஆம் தேதியன்று அருணாசலப் பிரதேச மாநிலம் காமெங் பகுதியில் உள்ள உயரமான பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஏழு ராணுவ வீரர்கள் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர்கள் ஏழு பேரும் உயிரிழந்துவிட்டதாக இந்திய ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து ஏழு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர், பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்ளிட்ட பலரும் இரங்கல் … Read more

கான்ஸ்டபிள் தகுதி தேர்வில் முறைகேடு : உடல் எடையை அதிகமாக காட்ட அடுக்கடுக்காக ஆடை அணிந்து வந்த பெண் <!– கான்ஸ்டபிள் தகுதி தேர்வில் முறைகேடு : உடல் எடையை அதிகமாக… –>

புதுச்சேரி காவல் துறையின் பெண் கான்ஸ்டபிள் பணியிடத்திற்கான உடல் தகுதி தேர்வில், உடல் எடையை அதிகமாக காட்ட அடுக்கடுக்காக 4 பேண்ட் அணிந்து வந்து எடையை அதிகரிக்க முறைகேட்டில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் தகுதி நீக்கம் செய்து எச்சரித்து அனுப்பினர். உடற்தகுதி தேர்வில் பங்கேற்ற ஒரு பெண் உடல் மெலிந்து இருந்தார். ஆனால், காவலர் உடல் தகுதிக்கு தேவையான 45 கிலோ எடை இருந்தார். போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பணியில் இருந்து பெண் … Read more