NDA அரசு என்றால் என்ன? – ப.சிதம்பரம் தந்த விளக்கத்தை பாருங்க!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, தரவுகள் ஏதும் இல்லாத அரசு என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சாடி உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் , கடந்த 31 ஆம் தேதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2022 – 23 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். … Read more

அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்கள் 7 பேரின் உடல்கள் கண்டெடுப்பு <!– அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணு… –>

அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்கள் 7 பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மிக உயர்ந்த மலைப்பகுதியான காமெங் செக்டர் (Kameng sector) பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் 7 ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர். இந்நிலையில் வீரர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வந்ததை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

ஹிஜாப் விவகாரம் – மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதுடெல்லி: கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள் குல்லா, ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்கமறுத்த இஸ்லாமிய மாணவிகள், தங்கள் உரிமையில் தலையிடுவதாக கூறி ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர்.  இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ரதசப்தமி; தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமி நாளான இன்று காலை முதல் இரவு வரை 7 வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளினார்.  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பிரம்மோற்சவத்தில் 9 நாட்கள் மலையப்ப சுவாமி தேவி, பூதேவி தாயார்களுடன் 16 வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதேபோல் ஆண்டுதோறும் ரதசப்தமியன்று ஒரே நாளில் 7 வாகனங்களில்  மலையப்பசுவாமி எழுந்தருளி மாடவீதியில் வலம் வருவார். இதனை ‘மினி பிரம்மோற்சவம்’ என அழைப்பார்கள்.   அதன்படி இந்த … Read more

ஹிஜாப் விவகாரம், எதிர்வினைகளின் தாக்கம்: கர்நாடகாவில் 3 நாட்களுக்கு மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை

பெங்களூரு: ஹிஜாப் விவகாரத்தில் எதிர்வினை என்ற பெயரில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்த நிலையில், கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். … Read more

பிப். 11 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – முதல்வர் அறிவிப்பு!

கர்நாடக மாநிலத்தில், ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில், உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து, அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டு உள்ளார். கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள, குண்டப்புராவில் உள்ள பியூ அரசுக் கல்லூரியில், ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மாணவர்கள் காவித் துண்டு போன்ற உடைகளை … Read more

ஹிஜாப் விவகாரம் : கர்நாடகாவில் – பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை <!– ஹிஜாப் விவகாரம் : கர்நாடகாவில் – பள்ளி, கல்லூரிகளுக்கு 3 … –>

கர்நாடகாவில் – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாணவர்களில் ஒருபிரிவினர் வன்முறை – பதற்றம் துப்பாக்கிச்சூடு நடத்தி மாணவர்களை கலைத்த போலீசார் கர்நாடகாவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு கல்லூரிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அறிவித்து, கர்நாடக மாநில அரசு உத்தரவு கர்நாடகாவில் சில இடங்களில், ஹிஜாப் விவகாரத்தை கண்டித்து மாணவர்கள் இருதரப்பாக பிரிந்து போராட்டம் இருதரப்பாக பிரிந்து போராடும் மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் – கர்நாடக முதலமைச்சர் தாவணகெரே ஹரிகர் பகுதியில் … Read more

அருணாச்சல பிரதேசம் – பனிச்சரிவில் சிக்கிய 7 இந்திய ராணுவ வீரர்கள் உடல்கள் மீட்பு

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இதற்கிடையே, நேற்று முன்தினம் மிக உயர்ந்த மலைப்பகுதியான காமேக் செக்டாரில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு ரோந்து சென்ற இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அவர்களை தேடும் பணி நடைபெற்றது.    இந்நிலையில், அருணாசல பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ … Read more

டெண்டர், சட்டபூர்வ பரிவர்த்தனைக்கு 10 ரூபாய் நாணயத்தை தயக்கமின்றி உபயோகிக்க வேண்டும்: மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: 10 ரூபாய் நாணயத்தை எந்த தயக்கமின்றி உபயோகிக்க வேண்டும். டெண்டர், சட்டபூர்வ பரிவர்த்தனைக்கு 10 ரூபாய் நாணயத்தை பயன்படுத்தலாம் எனவும் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் பத்து ரூபாய் நாணயங்கள் போலியானவை என கருதி ஏற்றுக்கொள்ள மறுக்கப்படுகிறதா? ஒருவேளை பத்து ரூபாய் நாணயங்கள் வணிகர்களால் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, 10 … Read more

கர்நாடகாவில் புர்கா அணிந்து வந்த மாணவியை நோக்கி கோஷமிட்ட காவித் துண்டு மாணவர்கள் – நெட்டிசன்கள் கொந்தளிப்பு

பெங்களூரு: கர்நாடகவில் புர்கா அணிந்து வந்த மாணவியை நோக்கி, காவித் தூண்டு அணிந்திருந்த மாணவர்கள் கோஷம் எழுப்பிய வீடியோ வைரலாகி வருவதுடன், அம்மாணவர்களின் செயலுக்கு எதிர்ப்பும் வலுத்துள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை … Read more