என் உயிர் உள்ளவரை பாம்புகளை மீட்பேன்: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய வாவா சுரேஷ் பேட்டி

கோட்டயம்: கேரளாவின் பிரபலமான பாம்பு மீட்பர் வாவா சுரேஷ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அப்போது அவர், என் உயிர் உள்ளவரை பாம்புகளை மீட்பேன் என்று கூறினார். ஆயிரக்கணக்கான பாம்புகளைப் பிடித்து வனத்தில் விட்டு பல்லுயிர் சமன்பாட்டைப் பேண உதவிய கேரளாவைச் சேர்ந்த இளைஞர் வாவா சுரேஷை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜ நாகம் தீண்டியது. இதனால் அவர் கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுயநினைவு இழந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை … Read more

ஒரே இலக்கணப் பிழை.. இவரெல்லாம் வைஸ் சான்சலரா.. வெளுத்தெடுத்த வருண் காந்தி!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சாந்திஸ்ரீ துல்லிப்புடி பண்டிட் வெளியிட்டுள்ள பிரஸ் ரிலீஸை பாஜக எம்.பி. வருண் காந்தி விமர்சித்துள்ளார். டெல்லியில் உள்ள புகழ் பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக சாந்திஸ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. தீவிர இந்துத்வா ஆதரவாளராக தன்னை அவ்வப்போது காட்டிக் கொண்டவர் சாந்திஸ்ரீ. அவர் போட்ட பழைய டிவீட்டுகளை பலரும் எடுத்து தற்போது வைரலாக்கி வருகின்றனர். டெல்லி விவசாயிகள் போராட்டத்தைக் கண்டித்தவர் இவர். … Read more

கவுகாத்தி உயிரியல் பூங்காவில் புதுவரவாக 2 புலிக் குட்டிகள் பிறந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தகவல் <!– கவுகாத்தி உயிரியல் பூங்காவில் புதுவரவாக 2 புலிக் குட்டிகள… –>

அசாம் மாநிலம் கவுகாத்தி உயிரியல் பூங்காவில் புதுவரவாக 2 புலிக் குட்டிகள் பிறந்துள்ளன. கஸி பெண் புலி கடந்த வாரம் இரண்டு ஆண் குட்டிகளை ஈன்றதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதிதாக பிறந்த 2 புலிக் குட்டிகளையும் சேர்ந்த பூங்காவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. கடந்த ஆண்டு சுல்தான் மற்றும் சுரேஷ் என்ற 2 புலிக் குட்டிகளுக்கு தாயான கஸி தற்போது மேலும் 2 குட்டிகளை ஈன்றுள்ளது. தாயும், சேய்களும் நலமுடன் … Read more

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்காலை விழா நாளை தொடக்கம்

கேரளாவில் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் பொங்காலை விழா நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்காலை விழாவன்று திருவனந்தபுரம் நகர் முழுக்க பல லட்சம் பெண்கள் ஒரே இடத்தில் கூடி பொங்கலிடுவார்கள். இக்கோவிலில் கடந்த 1997-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் கலந்து … Read more

உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

லக்னோ: உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  ஹோலி, தீபாவளி ஆகிய பண்டிகைகளுக்கு 2 கேஸ் சிலிண்டர்கள்  இலவசமாக வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்தியாவின் அன்றாட கரோனா பாதிப்பு 67,597: பாசிடிவிட்டி விகிதிம் 5%; ஓய்கிறதா மூன்றாவது அலை?

இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று 67,597 என்றளவில் உள்ளது. அன்றாட கரோனா பாசிடிவிட்டி விகிதமும் 5% என்றளவில் சரிந்தது. இதனால், மூன்றாவது அலை முடிவுக்கு வந்ததா என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளது. கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியாவில் முதல் ஒமைக்ரான் தொற்றாளர் கண்டறியப்பட்டார். அதன் பின்னர் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட இந்த வகை கரோனா வைரஸ் தனது தாக்கத்தைப் படிப்படியாக அதிகரித்தது. இதனால், நாடு முழுவதும் மீண்டும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி … Read more

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்.. மோடி போட்ட "சேம் சைட் கோல்".. தர்ம சங்கடத்தில் பாஜக..!

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரயில் டிக்கெட் கொடுத்ததாக காங்கிரஸ் மீது பாய்ந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி . ஆனால் இந்த விவாகரத்தில் தெரிந்தோ தெரியாமலோ, சேம் சேட் கோல் போட்டுள்ளார் பிரதமர் என்று கருத்துக்கள் எழுந்துள்ளன. அதாவது மத்திய அரசு ரயில்களை விட்டது மட்டும் சரி, ஆனால் அதற்கு டிக்கெட் எடுக்க உதவியது தவறா என்று எதிர்க்கட்சிகள் விளாசியுள்ளன. இந்தியாவைக் கொரோனாவைரஸ் தாக்கி முதல் அலை உருவானபோது நாடு முழுவதும் மிகப் பெரிய பிரச்சினையாக விஸ்வரூபம் … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,597 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி <!– இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,597 பேருக்கு புதிதா… –>

நாட்டில் கொரோனா பாதிப்பு மேலும் குறைந்தது நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 67,597 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி கடந்த 24 மணி நேரத்தில் 1.80 லட்சம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பினர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 1188 பேர் உயிரிழப்பு – மத்திய சுகாதாரத்துறை நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், மரணங்களின் தினசரி எண்ணிக்கை அதிகரிப்பு Source link

திருப்பதியில் ரதசப்தமி விழா: 7 வாகனங்களில் ஏழுமலையான் பவனி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மினி பிரம்மோற்சவமான ரதசப்தமி விழா இன்று அதிகாலை தொடங்கி நடந்து வருகிறது. காலை சூரிய உதயம் தொடங்கி இரவு வரை ஏழுமலையான் அடுத்தடுத்து 7 வாகனங்களில் எழுதருளிகிறார். கொரோனா விதிமுறை முன்னெச்சரிக்கையால் கோவிலுக்குள்ளேயே காட்சி தருகிறார். கோவில் வளாகத்தில் உலா வந்தார். இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் அருள்பாலித்தார். 9 மணி முதல் 10 மணி வரை சின்ன சே‌ஷ வாகனத்திலும், … Read more

பிப்.10ல் சட்டமன்ற தேர்தல்!: இன்று மாலையுடன் பரப்புரை நிறைவு.. உ.பி.யில் அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம்..!!

லக்னோ: நாளை மறுநாள் முதற்கட்ட சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள உத்திரப்பிரதேச மாநிலத்தில், இன்று மாலையுடன் பரப்புரை ஓய்வடையவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் சூறாவளியாக சுயன்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். 403 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு வரும் 10ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்குப்பதிவுக்கு 2 நாட்களே உள்ள நிலையில், பரப்புரை இன்று மாலையுடன் நிறைவுபெறுகிறது. பாரதிய ஜனதா, காங்கிரஸ், சமாஜ்வாதி, … Read more