மத்திய பிரதேசத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றித் திரியும் புலி <!– மத்திய பிரதேசத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றித் திரிய… –>
மத்திய பிரதேச மாநிலம் போபாலில், போஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் குடியிருப்பு வளாகத்திற்குள் புலி ஒன்று சுற்றித் திரிவதாக வீடியோ வெளியாகி உள்ளது. ரத்தன்பானி புலிகள் காப்பக பகுதியில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகத்தில் புலி அங்குமிங்கும் சுற்றுவதாக காவலாளி தெரிவித்தார். இதையடுத்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டதில், புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, புலியைப் பிடிக்க தீவிர கண்காணிப்பு எடுத்து வருவதாக தெரிவித்தனர். Source link