அட எங்க கொள்கை வேறங்க.. பதறியடித்து முஸ்லீம் வேட்பாளரை அறிவித்த பாஜக கூட்டாளி!

உத்தரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணி வைத்துள்ள அப்னா தளம் (எஸ்) கட்சி, தனக்கும், பாஜகவுக்கும் இடையே கொள்கை முரண்பாடுகள் இருப்பதாக அறிவித்துள்ளது. அத்தோடு உ.பி. சட்டசபைத் தேர்தலில் முஸ்லீம் வேட்பாளரையும் அது அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீது அதிருப்தி அதிகரித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. இதனால் அமித் ஷா கவலை அடைந்துள்ளதாகவும், உ.பி. தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வேகத்தில் அவர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மற்ற வேலைகளைக் கூட பாஜக தலைமை … Read more

அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – முதலமைச்சர் ரங்கசாமி <!– அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட… –>

கல்வித்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை உள்பட அனைத்து அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். என்.ஆர். காங்கிரஸ் கட்சி தொடக்க நாள் விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உதவி வருவதாகத் தெரிவித்தார். Source link

மேகதாது அணை விவகாரம் – கர்நாடகாவிற்கு மத்திய அரசு பதில்

புதுடெல்லி: காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணையைக் கட்ட கர்நாடகா அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  இந்த அணை கட்டப்பட்டால் தமிழக டெல்டா விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழக அரசு மேகதாது அணைத் திட்டத்திற்கு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் கர்நாடக மாநில எம்.பி  மேகாதாது அணைக்கு அனுமதி எப்போது என வழங்கப்படும் என்று  என எழுத்துப் பூர்வமாக கேள்வி எழுப்பினார்.  இக்கேள்விக்கு பதிலளித்துள்ள … Read more

சபரிமலையில் மாசி மாத பூஜை 15,000 பக்தர்கள் அனுமதி

திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 12ம் தேதி திறக்கப்படுகிறது. மறுநாள் (13ம் தேதி) முதல் 17ம் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும். இந்த நாட்களில் தினமும் நெய்யபிஷேகம் மற்றும் படிபூஜை உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் இந்த 5 நாட்களிலும் தினமும் 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். 17ம் தேதி இரவு 10 மணிக்கு … Read more

தமிழகத்தில் 1967-க்கு பின் காங்கிரஸால் ஆட்சிக்கு வர முடியவில்லை – ராகுல் பேச்சுக்கு மக்களவையில் பிரதமர் மோடி பதிலடி

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி ‘1967-க்குப் பின் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியவில்லை’ என்று தெரிவித்ததுடன், காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்தார். கடந்த மாதம் 31-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரின் முதல் நாள் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையோடு அவை … Read more

திமுகவின் சமூகநீதி கூட்டமைப்பு: முதல் ஆளாய் இணைந்த காங்கிரஸ்!

‘பிற்படுத்தப்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட, அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு தொடங்கப்படும்’ என்று கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்திருந்தார். தனது இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் விதமாக கூட்டமைப்பில் இணைய வருமாறு காங்கிரஸ், அதிமுக, ஆம் ஆத்மி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட 37 கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் தனித்தனியாக கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், அந்த கடிதத்தை … Read more

தமிழ்நாடு – கர்நாடகா இடையே சுமூக முடிவு எட்டப்பட்டால் மட்டுமே மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படும் – மத்திய அரசு <!– தமிழ்நாடு – கர்நாடகா இடையே சுமூக முடிவு எட்டப்பட்டால் மட்… –>

தமிழ்நாடு – கர்நாடகா இடையே சுமூக முடிவு எட்டப்பட்டால் மட்டுமே மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்படுவது குறித்து மக்களவையில் கர்நாடக எம்.பி. பிரஜ்வால் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார், மத்திய அரசுக்கு கிடைக்கப் பெற்ற சாத்தியக்கூறு அறிக்கையின் அடிப்படையில் மேகதாது திட்டத்தின் மூலம் மொத்தம் 4,996 ஹெக்டேர் நிலம் நீரில் மூழ்கும் என தெரிவித்துள்ளார். … Read more

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் – மாநிலங்களவையில் நாளை பிரதமர் உரை

புதுடெல்லி: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்க நாளான ஜனவரி 31 அன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து மறுநாள் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  அதன்பின், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் மத்திய அரசு குறித்து கடும் விமர்சனம் செய்தனர்.  இதற்கிடையே, மக்களவையில் ஜனாதிபதி … Read more

பஞ்சாப்பில் தேர்தல் பிரசாரத்தில் சாதனை; ராகுலின் காணொலி நேரலையை 11 லட்சம் பேர் பார்த்தனர்.! காங். ஊடகப் பிரிவு தகவல்

லூதியானா: பஞ்சாப்பில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ராகுலின் காணொலி நேரலையை 11 லட்சம் பேர் பார்த்தனர் என்று காங்கிரஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று பஞ்சாப் மாநிலம்  லூதியானாவில் காணொலி காட்சி மூலம் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.  கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால், இதுபோன்ற காணொலி பிரசார பொதுக்கூட்டம்  நடத்தப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக  தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை ராகுல்காந்தி அறிவித்தார்.  இந்நிகழ்ச்சிகள் யாவும் பேஸ்புக், … Read more

மேற்கு உ.பி.யில் பாஜகவுக்கு தலைவலியாகும் ஜாட் அரசியல்: அமித் ஷா முயற்சி வெல்லுமா?

லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு முதல் 2 கட்டத் தேர்தல் நடைபெறும் மேற்கு மாவட்டங்களில் கணிசமாக வசிக்கும் ஜாட் சமூகத்தினர் இந்த முறை பாஜக மீது அதிருப்தியில் உள்ள நிலையில், அவர்களை ஈர்க்க கட்சித் தலைமை பகீரத பிரயத்தனம் செய்கிறது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை தேர்தல் நடைபெறுகிறது. கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் 10-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் உத்தரப் … Read more