கேரளாவில் அரையாண்டு தேர்வு வினாத்தாள் கசிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்த வியாழக்கிழமை பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வும் பிளஸ் 1 கணிதத் தேர்வும் நடைபெற்றன. இந்த இரு தேர்வுகளின் வினாத்தாள்களும் கடந்த புதன்கிழமை வாட்ஸ்அப், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சில தனியார் டியூசன் மையங்கள் தங்களிடம் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வினாத்தாளை முன்கூட்டியே வினாத்தாள்களை வழங்கியிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது … Read more

உத்தரபிரதேச ரயில்வே அதிகாரியிடம் சைபர் கிரைம் கும்பல் ரூ.57 லட்சம் மோசடி

நொய்டா: உத்தரபிரதேசத்தில் பங்குச்சந்தையில் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசையை தூண்டி ரயில்வே அதிகாரி ஒருவரிடம் சுமார் ரூ.57 லட்சம் மோசடி செய்துள்ளனர். உ.பி.யின் கவுதம புத்தர் நகர் மாவட்டத்தை சேர்ந்த ரயில்வே அதிகாரி அனில் ரைனா. இவர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் பெரும் லாபம் ஈட்ட வாய்ப்புள்ளதாக எனக்கு செல்போனில் தகவல் வந்தது. அதன்படி தொடர்புகொண்டு நான் முதலீடு … Read more

டிஎம்சியின் பாபர் மசூதி vs பாஜகவின் ராமர் கோயில் – மே.வங்கத்துக்கு மாறுகிறதா அயோத்தி அரசியல்?

புதுடெல்லி: முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி கட்டவிருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் அறிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலடியாக பெர்ஹாம்பூரில் ராமர் கோயில் கட்டுவதாக பாஜக அறிவித்துள்ளது. இதனால், உ.பி.யில் முடிவுக்கு வந்த அயோத்தி அரசியல், மேற்குவங்க மாநிலத்துக்கு மாறுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்எல்ஏ, கடந்த வாரம் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில் அவர் முஸ்லிம்கள் அதிகம் வாழும் முர்ஷிதாபாத் மாவட்ட பெல்தங்காவில், பாபர் மசூதி கட்டப்படும் எனக் … Read more

டெல்லி தேர்தல்: ஆம் ஆத்மி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு; அதிஷி, கேஜ்ரிவால் அதே தொகுதியில் போட்டி

புதுடெல்லி: அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான 39 வேட்பாளர்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியிலும், இன்னாள் முதல்வர் அதிஷி கல்காஜி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலின் படி, சவுரப் பரத்வாஜ் கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் போட்டியிடுகிறார். கஸ்தூரிபா நகர் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ மதன் லாலுக்கு பதிலாக அந்த தொகுதியில் ரமேஷ் பெஹல்வான் … Read more

துணை மானியக் கோரிக்கைக்கு பின்பே ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல்

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை மத்திய அரசு ஒத்திப்போட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதா ஆகியவை மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் என முதலில் பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது நாடாளுமன்ற அலுவல் தொடர்பாக மாற்றியமைக்கப்பட்ட பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில் துணை மானியக் கோரிக்கைகள் குறித்து நாளை விவாதிக்கப்படும் எனத் … Read more

இண்டியா கூட்டணி தலைமை பொறுப்பில் காங். தீவிரமாக செயல்பட வேண்டும்: உமர் அப்துல்லா

ஸ்ரீநகர்: இண்டியா கூட்டணியின் தலைமை பொறுப்பில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயல்பட வேண்டும் என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீர் முதல்வராக கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்ற பின்பு உமர் அப்துல்லா முதல் முறையாக பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் இண்டியா கூட்டணியின் தலைமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் அளித்த பதிலில் கூறியதாவது: காங்கிரஸ் கட்சிக்கு தேசியளவில் செல்வாக்கு உள்ளது. நாடாளுமன்றத்திலும் மிகப் பெரிய எதிர்க்கட்சியாக உள்ளது. இதன் காரணமாக … Read more

நாடு முழுவதும் லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 1.45 கோடி வழக்குகள் முடித்து வைப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் நடைபெற்ற லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 1.45 கோடி வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதில் ரூ.7 ஆயிரம் கோடி பணபட்டுவாடா நடைபெற்றது. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்றங்களை நோக்கி வரும் வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காண தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (என்ஏஎல்எஸ்ஏ) சார்பில் லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடத்தப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான 4-வது மற்றும் கடைசி மக்கள் நீதிமன்றம், ராஜஸ்தான் தவிர அனைத்து மாநிலங்களிலும் … Read more

மகாராஷ்டிரா | மகாயுதி அமைச்சரவை மாலை 4 மணிக்கு பதவியேற்பு: யாருக்கு ஏற்றம், யாருக்கு ஏமாற்றம்! 

மும்பை: மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணி மகத்தான வெற்றி பெற்றநிலையில் அதன் விரிவாக்கப்பட்ட அமைச்சரவை இன்று மாலை 4 மணிக்கு நாக்பூரில் நடக்கும் விழாவில் பதவியேற்கிறது. மகாராஷ்டிரா பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்பாக இந்த பதவியேற்பு நடைபெறுகிறது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவையில் கணிசமான இடங்களைக் கொண்டுள்ள முதல்வர் பட்னாவிஸ் தலைமையிலான பாஜகவில் புதிய முகங்கள் பலருக்கு இடம் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும் தற்போது … Read more

“தாஜ்மகாலை கட்டிய கலைஞர்களின் கைகள் துண்டிப்பு” – உ.பி. முதல்வர் பேச்சால் சர்ச்சை

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலின் கைவினைஞர்கள் கவுரவிக்கப்பட்டதாகவும், தாஜ்மகாலைக் கட்டியவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதாகவும் உ.பி. முதல்வர் சர்ச்சைக் கருத்தை வெளியிட்டுள்ளார். மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் உலக இந்துக்களின் பொருளாதார அமைப்பின் கருத்தரங்கு நடைபெறுகிறது. டிசம்பர் 13 தொடங்கிய கருத்தரங்கு இன்று நிறைவு பெறுகிறது. இதில் நேற்று கலந்துகொண்டு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார். அப்போது அவர் தாஜ்மகால் மற்றும் ராமர் கோயில் கைவினைஞர்களை ஒப்பிட்டு தனது உரையில் பேசியதாவது: இன்று இந்தியாவில் பாஜக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு … Read more

டெல்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒரே வாரத்தில் மூன்றாவது முறை

புதுடெல்லி: டெல்லியில் 6 பள்ளிகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது இந்த வாரத்தில் மூன்றாவது சம்பவம் ஆகும். டெல்லி ஆர்.கே.புரத்தில் ‘டெல்லி பப்ளிக் ஸ்கூல்’ உள்ளது. இப்பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலின் பேரில் தீயணைப்பு படையினர், உள்ளூர் போலீஸார், மோப்ப நாய் படை மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் நேற்று காலையில் அப்பள்ளியில் சோதனை நடத்தினர். இதுபோல் ரயான் சர்வதேச பள்ளி, கியான் பாரதி பள்ளி உள்ளிட்ட மேலும் 5 பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் … Read more