வாரத்தில் 5 நாட்கள் வேலை – அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்ற அறிவிப்புக்கான அரசாணையை, மாநில அரசு பிறப்பித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டின் 73வது குடியரசு தினமான கடந்த மாதம் 26 ஆம் தேதி, சத்தீஸ்கர் மாநில அரசின் கொள்கை முடிவுகளை, முதலமைச்சர் பூபேஷ் பாகேல் அறிவித்தார். அதன்படி, அரசு ஊழியர்களின் செயல் திறன் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் முயற்சியில், மாநில அரசு வாரத்தில் ஐந்து … Read more

3 சதவீத விவாகரத்து போக்குவரத்து நெரிசலால் ஏற்படுகிறது – முன்னாள் முதல்வரின் மனைவி குற்றச்சாட்டு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் தேவேந்திர பட்னாவிஸ். இவரது மனைவி அம்ருதா பட்னாவிஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: மும்பையில் காணப்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் தங்கள் குடும்பங்களுக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை. இதனால் 3 சதவீத விவாகரத்து ஏற்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? சாலைகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் போக்குவரத்தில் சிக்கித் தவிப்பதால் நான் தனிப்பட்ட முறையில் சிரமப்பட்டேன். நான் தேவேந்திர பட்னாவிசின் மனைவி என்பதை மறந்துவிட்டு, … Read more

'டிஜிட்டல் விவசாயமே நாட்டின் எதிர்காலம்'!: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

டெல்லி: இந்தியாவில் டிஜிட்டல் விவசாயமே எதிர்காலமாக இருக்கும்; இதன்மூலம் இளைஞர்கள் சிறப்பான பணிகளைச் செய்ய முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நடப்பு ஒன்றிய பட்ஜெட்டில் இயற்கை மற்றும் டிஜிட்டல் விவசாயங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இக்ரிசாட் நிறுவனத்தின் 50வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

பாடகர் லதா மங்கேஷ்கர் உடல்நிலை கவலைக்கிடம்; வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை

மும்பை: கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவிட் தொற்று தொடர்பான லேசான அறிகுறிகளுடன், தெற்கு மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் ஜன.8-ல் லதா மங்கேஷ்கர் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ஐசியூ வார்டில் வைத்து பராமரிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு வெண்டிலேட்டர் வசதி பொருத்தப்பட்டதாக … Read more

ராகுல் காந்தியின் பேச்சில் கவனிக்க மறந்த விஷயங்கள்

குடியரசுத் தலைவர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் விவாதங்களில் பலர் பேசினார்கள். அவற்றில் பிப்ரவரி 2 அன்று ராகுல் காந்தி பேசியவை முக்கியமானவை. ஆனால் ஊடகங்கள் அக்கருத்துக்களை மலிவுபடுத்தி ஏதோ தெருச்சண்டை போடுவது போலச் செய்தி வெளியிடுகின்றன. சில தேசிய ஊடகங்கள் அவரது முழுமையான பேச்சை வீடியோவாகப் போட்டு பின்னர் ஆளும் கட்சி அழுத்தம் காரணமாக நீக்கிவிட்டன. பாஜக தரப்பு தலைவர்களும் ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு தீவிரமான பதிலையோ விவாதங்களையோ முன்னெடுக்கவில்லை. மாறாக இணைய பாஜகவாசிகள் பப்பு … Read more

ரூ.13.14 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கிய முகேஷ் அம்பானி <!– ரூ.13.14 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்… –>

ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி 13 கோடியே 14 இலட்ச ரூபாய் மதிப்புள்ள புதிய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை அண்மையில் வாங்கியுள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெயரில் தெற்கு மும்பையில் உள்ள மண்டலப் போக்குவரத்து அலுவலகத்தில் அந்தக் கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோலில் இயங்கும் அந்தக் கார் இரண்டரை டன் எடையும் 564 பிஎச்பி திறனும் கொண்டது. கரடுமுரடான பாதையிலும் செல்வதற்கு ஏற்றது. 2018இல் அறிமுகமான ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் அடிப்படை விலை 6 … Read more

திருப்பதியில் 15-ந்தேதி முதல் இலவச தரிசன டிக்கெட் நேரடியாக வழங்க ஏற்பாடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 15-ந் தேதி முதல் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நடந்தது. கூட்டத்தில் திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் ஜவகர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த மாதம், பிப்ரவரி மாதத்திற்கான ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. 15-ந் தேதி வரை மட்டுமே ஆன்லைனில் இலவச … Read more

கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளில் பணியாற்றிய 241 இந்திய தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு: ஒன்றிய அரசு அதிர்ச்சி தகவல்

டெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளில் பணியாற்றிய 241 இந்திய தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ம.பி.யைச் சேர்ந்த விஜய் பாஹீல் எம்.பி.யின் கேள்விக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் பதிலளித்துள்ளார். சவுதி அரேபியா, கத்தார், யு.ஏ.இ., குவைத், சூடான், மலேசியா, சிங்கப்பூரிலும் இந்திய தொழிலாளர்கள் விபத்துகளில் பலியாகியுள்ளனர். இதேபோல், பஹ்ரைன், ஓமன், அஜர்பைஜான், போர்ச்சுகல், ஈராக், மொரிஷியஸ், ருமேனியா நாடுகளிலும் இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மிக அதிகபட்சமாக கத்தார் … Read more

கரோனா தொற்றால் இறந்தவர் குடும்பங்களுக்கு – விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் இழப்பீடு: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கரோனா தொற்றால் இறந்தவர் குடும்பங்களுக்கு விண்ணப்பம் வந்த 10 நாட்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, பி.வி.நாகரத்னா ஆகியோரைக் கொண்ட அமர்வு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி கள் பிறப்பித்த உத்தரவில் கூறி யிருப்பதாவது: கரோனா தொற்றால் இறந்தவர் குடும்பங்களுக்கு … Read more

வேட்பு மனு தாக்கல் செய்ய ஓடிச் சென்ற அமைச்சர்… சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ <!– வேட்பு மனு தாக்கல் செய்ய ஓடிச் சென்ற அமைச்சர்… சமூக வல… –>

உத்தரப்பிரதேச அமைச்சர் உபேந்திர திவாரி வேட்பு மனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியரக வாயிலில் இருந்து தேர்தல் நடத்தும் அதிகாரியின் அறைவரை ஓடியே சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. விளையாட்டுத் துறை அமைச்சர் உபேந்திர திவாரி பெப்னா சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஆவார். ஆறாம் கட்டத் தேர்தல் நடைபெறும் அந்தத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுத் தொடங்கியது. வேட்பு மனு முடிவடையச் சில நிமிடங்களுக்கு முன் பல்லியா ஆட்சியரக வாயிலுக்குக் காரில் … Read more