மும்பை – அகமதாபாத் வழித்தடத்தில் கவசம் என்னும் பாதுகாப்புத் தொழில்நுட்பம் நிறுவப்படும் என அறிவிப்பு <!– மும்பை – அகமதாபாத் வழித்தடத்தில் கவசம் என்னும் பாதுகாப்பு… –>

மும்பை – அகமதாபாத் வழித்தடத்தில் ரயில் மோதலைத் தவிர்க்கும் கவசம் என்னும் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை மேற்கு ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது. ஒரே வழித்தடத்தில் இரு ரயில்கள் குறிப்பிட்ட தொலைவுக்குள் வரும்போது தானாகவே ரயிலின் இயக்கத்தை நிறுத்தி மோதலைத் தவிர்க்க உதவும் அமைப்பு கவசம் எனப்படுகிறது. ரயிலின் இயக்கத்தில் மனித தவறுகள், தவறான செயல்பாடுகள் ஆகியன குறித்தும் இந்த அமைப்பு தானாகவே அறிவிக்கும். ரயில்கள் அதிவிரைவாகச் செல்லும்போதும், நிலையப் பகுதிகளிலும், பணிநடைபெறும் தடங்களிலும் மோதல் ஏற்படாமல் தடுக்கவும் இந்த … Read more

இந்துபுரம் தலைமையில் மாவட்டம் அறிவிக்கக்கோரி நடிகர் பாலகிருஷ்ணா மவுன விரத போராட்டம்

திருப்பதி: ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆந்திராவில் உள்ள மாவட்டங்கள் பரப்பளவில் பெரியதாக இருப்பதால் பல்வேறு நிகழ்வுகள் சம்பந்தமாக மாவட்ட தலைநகருக்கு செல்ல பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் நிர்வாக வசதிக்காக ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களை இரண்டாக பிரிக்க வேண்டும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி … Read more

ஜம்மு- காஷ்மீர் மற்றும் உ.பி.யின் நொய்டாவில் லேசான நிலநடுக்கம்

காஷ்மீர்: ஜம்மு- காஷ்மீர் மற்றும் உ.பி.யின் நொய்டாவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக காஷ்மீர், நொய்டாவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிதாக 1.27 லட்சம் பேருக்கு கரோனா; பாசிட்டிவிட்டி 7.9% ஆக சரிவு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,952 பேர் (நேற்றைய பாதிப்பு 1,49,394) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாசிட்டிவிட்டி 7.9% ஆகக் சரிந்துள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. நாட்டில் தினசரி கரோனா பாசிட்டிவிட்டி 7.98% ஆகவும், வாராந்திர பாசிட்டிவிட்டி 11.21% ஆகவும் இருப்பது கவனிக்கத்தக்கது. கரோனாவில் குணமடைவோர் விகிதம் 95.64 % ஆக உள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு: > கடந்த 24 … Read more

யாகபூஜை செய்து வேட்புமனுத் தாக்கல் செய்த முதல்வர்!

நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களுள் ஒன்றான உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்துக்கு வருகிற 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை அம்மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. பாஜகவை ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்கி விட்டு ஆட்சியை பிடிக்க சமாஜ்வாதி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முனைப்பு காட்டி வரும் நிலையில், மீண்டும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று பாஜக தீவிரம் … Read more

டெல்லியில் சிவப்பு சந்தனமரத்தை கடத்தும் கும்பலைச் சேர்ந்த ஒருவன் கைது <!– டெல்லியில் சிவப்பு சந்தனமரத்தை கடத்தும் கும்பலைச் சேர்ந்த… –>

டெல்லியில் சிவப்பு சந்தனமரத்தை கடத்தும் கும்பலைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். புது டெல்லி ரயில் நிலையத்தில் 42 புள்ளி 5 கிலோ எடை கொண்ட செம்மரத்துடன் சிக்கிய அவனிடமிருந்து 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பஹார்கஞ்ச் கேட் எண்1 அருகே சந்தேகப்படும் படி நடமாடிய அவனை கண்காணித்த போலீசார் அவனிடமிருந்த டிராலி பேக்கை சோதனையிட்ட போது செம்மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவன் என்று தெரிய வந்தது. உடனடியாக வனத்துறை அதிகாரி வரவழைக்கப்பட்டு … Read more

இந்தியாவில் தினசரி குறையும் பாதிப்பு – மேலும் 1,27,952 கொரோனா

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 1,27,952 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் கொரோனா தொற்று பரவும் விகிதம் 7.98 சதவீதமாக உள்ளது. இதன்மூலம், இந்தியாவில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 4,20,80,664 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து 2,30,814 பேர் வீடு திரும்பியுள்ளனர்.  இதனால் இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,00,01,228 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 1,059 பேர் … Read more

ஐதராபாத் முச்சிந்தலில் ரூ. 1,000 கோடியில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை இன்று திறக்கிறார் பிரதமர் மோடி

தெலங்கானா: ஐதராபாத் முச்சிந்தலில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை இன்று பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். சின்னஜீயர் ஆசிரமத்தில் 45 ஏக்கரில் ரூ. 1,000 கோடியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட பஞ்சலோக சிலை திறப்பு. வைணவ ஆச்சாரியர் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் சிலை திறக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி மாலை மணிக்கு திறந்து வைக்க உள்ள ராமானுஜர் சிலை சமத்துவ சிலை என அழைக்கப்படுகிறது. சிலை திறப்பிற்கான பூஜையில் தமிழகம், … Read more

கரோனாவால் 5 லட்சம் பேரை இழந்த 3-வது நாடு இந்தியா: பிரேசில் இரண்டாவது இடம்

புதுடெல்லி: உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலை களினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப் பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத் தும் பணிகளை தீவிரப்படுத்தி வந்தாலும் உருமாற்றம் அடைந்து தொற்று பரவலால் பாதிப்பு, உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று நாட்டில்கரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத் தைக் கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 1,072 பேர் உயிரி ழந்துள்ள நிலையில் நாட்டில் மொத்த இறப்பு எண்ணிக்கை 5,00,055 … Read more

மீண்டும் முழு ஊரடங்கு… மாநில அரசு அதிரடி முடிவு!

கொரோனா மூன்றாவுது அலை பல்வேறு மாநிலங்களில் குறைய தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஜனவரி இறுதி வாரத்தில் இருந்து கொரோனா 3.0 அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்துதான் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 1- 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இப்படி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனா மூன்றாவது அலையில் இருந்து விடுபட்டு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும்போது அண்டை மாநிலமான … Read more